Wednesday, May 31, 2017

உங்க திட்டம்னு தெரிஞ்சுபோச்சி.....



ஐயா மோடிஜி இந்திய மக்கள் நாங்கெல்லாம்
உங்கள பெரிய அறிவாளின்னு நெனச்சிகிட்டு
இருந்தோம்...இப்பதான் தெரியுது நீங்க மறை
கழண்ட ஆளுன்னு....நோட்டு எல்லாம் செல்லாதுன்னு
நீங்க அறிவிச்சப்ப ஊழல ஒழிக்கிற மிகப்பெரிய வேலைன்னு நெனச்சோம்....ஆனா ஏழைங்க 400
பேருக்கு மேல செத்ததுதான் மிச்சம்....ஆயிரம் ரூவா
நோட்ட பதுக்குனா இடம் அதிகமாகும்னு ரெண்டாயிரம்
ரூவா நோட்ட உட்டீங்கன்னு அப்புறமாதான் தெரிஞ்சுது..
இப்ப மாட்டுக்கறி திங்ககூடாதுன்னு சொல்றீங்க...
ஆக மொத்தத்துல ஏழைகளை ஒழிக்கிறதுதான்
உங்க திட்டம்னு தெரிஞ்சுபோச்சி.....
ஐயா ஏழைகளை முன்னேத்துறோம்னு சொல்லி
அவங்கள அழிக்கிற வேலய சூப்பரா செய்யுறீங்க...
ஐயா நாளைக்கு எங்க வீட்ல மீன் செய்யலாம்னு
இருக்கோம்.....அத நாங்க சாப்பிடலாமுங்களா...?
ஐயா தயவு செய்து நீங்க வெளிநாட்டுக்கு போறத
நிறுத்துங்க....அந்த நாட்ட எல்லாம் பாத்துட்டு
இந்தியாவும் அப்படி வரணும்னு சொல்லிட்டு
நீங்க போடுற சட்டம் எல்லாம் கோமாளித்தனமா
இருக்கு.....நம்ம இந்தியாவுல அதுக்கேத்த கட்டமைப்பு
வசதி வர்றதுக்கே பல வருசம் ஆகும்னு ஒரு லூச
கேட்டாலும் சொல்லிடும்....இது ஏன்யா உங்களுக்கு
தெரியாம போச்சி....நீங்களும் ட்ரம்ப்பும் ஒரே ஆளுங்கதான்னு இப்பவே நாட்டு மக்கள் எல்லாம்
பேசிக்கிறாங்க.....மிச்சம் இருக்கிற ரெண்டு வருசமும்
நீங்க பண்ண தப்புக்கெல்லாம் கோயில் கோயிலா போய்
பரிகாரம் தேடிக்கிங்கைய்யா....அதான் உங்களுக்கு நல்லது....உங்க ஆத்மாவுக்கும் நல்லது....
இந்தமாதிரி நீங்க மூணு வருசமா இந்தியாவுக்கு
பண்ண நல்லத எல்லாம் சொல்றதுக்கு எனக்கு
ஒருநாள் பத்தாதுங்கைய்யா.....ஏதோ மனசுல பட்டத
சொல்லிட்டேன்யா.....தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்கைய்யா......இல்லைனா என்ன தேச
விரோத வழக்குல போட்டுறுவீங்கன்னு என் உள்மனசு
சொல்லுதுங்கய்யா.......ஆனா ஒன்னுய்யா
ஹிட்லர நீங்க மிஞ்சிட்டீங்கய்யா.....!!!!!!!!!!!!!!
Image may contain: 2 people, flower

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.


பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.
நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.
உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.
ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.
இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.
மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.
பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.
அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.
சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.
சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.
ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.
சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.....

உங்களில் சிலர் இந்த செய்தியை சாதாரணமாகக் கடந்துசென்றிருக்கலாம்.

பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இப்போது Star Sports Tamil என்று ஒரு புதிய அலைவரிசையைத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அந்த சேதி.
ஏற்கனவே டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட பல சேனல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருப்பதால், இந்தச் செய்தி நமக்கு பெரிதும் ஆச்சரியமாக இருந்திருக்காது.
ஆனால் நேற்று மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது.
"தமிழ்நாட்டைப் பார்! "
என்ன பேசுகிறார்கள்? தமிழ்நாடு இந்திக்கு அடிமையாகவில்லை என்பதால் அத்தனை சேனல்காரனும் தமிழ்நாட்டில் தமிழில் கடைவிரிக்கிறான். நாம் இந்திக்கு அடிமைப்பட்டதால் நமது மொழிகளில் இதுபோன்ற சர்வதேச சேனல்கள் வருவதில்லை!
-இதுதான் அவர்களின் உரையாடலின் சாரம்சம். தமிழ்நாட்டுக்கு தமிழ் மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகத்துக்கு என்றால் இந்தியாம்!.
இதனால்தான் இந்த மாநிலங்களில் இப்போது மொழிப்பிரச்சினை வெடிக்கிறது.
இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறதுகள் சிலர்.

#மூன்றாண்டு_பாஜக_சாதனைகள்.....

பா.ஜ.க நண்பர்கள் .. பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி நிறைவு பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது..
தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செய்ஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுத்தாட்டி என்ன நமக்கு எழுத ஆசை, கீழ்காணும் அத்தனையும் பற்றி விரிவாக எழுத ஆசை. ஆனால் திட்டமிட்டு நேரம் ஒதுக்க வேண்டும்.
-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
-மருந்து பொருள் விலை உயர்வு
-ரயில் கட்டண விலை உயர்வு
-கேஸ் விலை உயர்வு
-புதிய வரிகள்
-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
-ரூபாயின் மதிப்பு
- மோடி வெளிநாட்டு பயணங்கள்
- வெளியுறவு கொள்கை
- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
- உதய் மின்திட்டம்
- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
- தபால் திறை வழியாக கங்கை நீர் விநியோகம்
- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
- பலுசிஸ்தான் தலையீடு
- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
-ஜி.டி.பி குளறுபடி
-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
-அந்நிய நேரடி முதலீடு
-தூய்மை இந்தியா திட்டம்
-மேக் இன் இந்தியா
-டிஜிட்டல் இந்திய திட்டம்
-அணு உலை
-புல்லட் ரயில்
-நில கையகப்படுத்தும் மசோதா
-ஸ்மார்ட் சிட்டி
-ஹிந்தி திணிப்பு
-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
-நீதிபதிகள் நியமனம் தாமதம்
-ஜி.எஸ்.டி
-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
-IT ஊழியர்கள் பணி நீக்கம்
-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
-கல்புர்கி கொலை
-ரோஹித் வெமுலா
-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
-ரகுராம் ராஜன் மாற்றம்
-ஜல்லிக்கட்டு
-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
-ஜியோ சிம் விளம்பரம்
-லலித் மோடி
-வியாபம்
-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
-தனி விமானம் 2000 கோடி
-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
-15 லட்சம் ஆடை
-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
-தேச பக்தி நாடகங்கள்
-மேகாலயா கவர்னர் காம லீலை
-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
-சமஸ்கிருதம் திணிப்பு
-புதிய கல்வி கொள்கை
-பொது சிவில் சட்டம்
-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
-மாட்டு கறி தடை
-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
-அயோத்தி ராமர் கோவில்
-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
-SBI மினிமம் பேலன்ஸ் 5000
-மாட்டு அரசியல்
-நீட் தேர்வு
-ரேஷன் மானியம் நிறுத்தம்
Etc... Etc....

*HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE*



*வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?*
*1.* Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flow of air and sun rays are negative energy remover
வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வையுங்கள். நல்ல காற்றோட்டமும் வெயிலும் உள்ளே வருவது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவதை தடுக்கும், எடுக்கும்.
*2.* Dispose of all the old unwanted things lying in the house. Clutter is a negativity magnet. It attracts and accumulates negative energy in the house.
வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர விடாதீங்க! அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் காந்தமாகி அவற்றை ஈர்த்து சேர்க்கும்
*3.* Walking barefoot in the house helps all your negative energy to be absorbed by the earth.
Grounding is important to keep the energy balance in our body.
வீட்டிற்குுள் வெறும் கால்களோட நடக்கப் பழகுங்க! பூமியில் நம் பாதம் பதிவதால் நம்முள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்ளும். இதனால் நம் உடல் ஆற்றலை தக்க வைத்து சமன்படுத்தும்.
*4.* In olden days, foot- wears were kept out of the house. People used to enter the house only after washing their feet with water. This action ensures that all the negativity remains outside or are grounded by earth and does not enter the house. Now it has become difficult to keep the footwear outside. So preferably remove them near the entrance door.
அந்த காலத்தில் காலணிகளை வெளியேவிட்டுட்டு வீட்டுக்குள் நுழையும் போது கால்களை கழுவி செல்லும் பழக்கம் இருந்தது. அப்படிச் செய்வதால், வெளியே இருந்து நாம் கொண்டு வரும் எதிர்மறை ஆற்றல்களை, வீட்டுக்கு வெளியிலேயே விட்டு சுத்தமாக உள்ளே வந்தார்கள். ஆனால் இன்று இது கடினமான செயலாகி விட்டது. குறைந்தபட்சம் காலணிகளை வாசலில் விட பழகினால், தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை வெளியே நிறுத்தலாமே.
*5.* Go out in the open air. Take walks in the garden or open ground. Being amongst nature re-energizes or charges you fully.
வெளியே வெட்டவெளியில், தோட்டத்தில் தினம் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களை மீண்டும் ஊக்கமளித்து நமக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.
*6.* Sweeping the floor also ensures that the negative energies are shaken and moved out with the dirt.
தரையை பெருக்கித் தள்ளுவதும் எதிர்மறை ஆற்றல்களை அசைத்து குப்பையோடு குப்பையாக வெளியேற்றும்
*7.* Rock salt is another negativity remover. Wash or mop your floor with a fistful rock salt in a bucket of water. This ensures that every nook and corner of the house is rid of negative energy.
கல் உப்புக்கும் இந்த சக்தி அபாரம். வீட்டை துடைக்கும் போதோ கழுவும் போதோ, ஒரு கை கல் உப்பை வழியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்
*8.* Potted plants or trees around your house or society also ensures more positive energy in the house and area.
தொட்டிகளில் செடிகளும் மரங்களும் வீட்டைச் சுற்றி வளர்ப்பதும் இந்த எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றும்.
*9.* Bathing or Soaking your legs and hands in rock salt water once in a while removes the negativity attached to your body and cleanse your aura.
கல் உப்பு கரைத்த நீரில் குளத்தாலோ, கை கால்களை அவ்வபோது சற்று நேரம் ஊற வைப்பதாலோ நம் உடலை பற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தலாம்.
*11.* Repetition of Prayers, increases the positive vibrations in the house. 100%
தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும்.
*12.* Keep your thoughts, action and speech Positive. Negative thoughts will bring in negative vibes. So avoid all negative thoughts, speech and actions.
*நமது எண்ணம், செயல், பேச்சு அனைதையும், நாம் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இவை எதிர்மறையாக இருந்தால், எதிர்மறை ஆற்றல்களை அதிகமாக நம்முள் ஈர்த்துவிடும்.*
*13.* Keep your house well lit and illuminated. Light removes negativity.
வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருக்க பழக வேண்டும். வெளிச்சம் எதிர்மறையை நீக்கும்
*14.* Keep faith in God and in yourself. You are the Creator of your own destiny by the Choices you make.
கடவுளின் மீதும் நம் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். நம்முடையே தேர்வுகளே நமது விதியை தீர்மானிக்கின்றது.
*STAY HAPPY STAY BLESSED*
*பிரபஞ்ச சக்தியின் பெரும் கருணை நிறைந்து வாழ்வோமாக!*
In our group everyone must read....
All families should live happily....
நமது இந்த க்ரூபிலும், நமது இல்லங்களிலும் உள்ள அனைவரும் இதை படித்து, பயன் பெற்று, இன்புற்று வாழ்வோமாக......

தண்ணீர் சிறந்த மருந்து.

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்
*தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.
அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்
*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
*ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை சுடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
*மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
*தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது என்று பொருள்.
இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
*ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
*பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
*கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும்.
எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
*எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.
*தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.
குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து . குடிக்க மறந்திடாதீங்க நண்பர்களே.

🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈🍵
*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_
_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_
_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_
_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_
_```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_
_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_
_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_
_```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_
_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_
_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_
_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_
_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது. உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_
_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_
_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_
_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_
_```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_
_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_
_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_
_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_
_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_
_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள். அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும். எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..
🙏உமீழ் நீர் : உயிர் நீர்🙏
👏👌👍🙏

#மஹாபாரதம்_கதை_சுருக்கம்.......!!!



மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் எனது சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
Image may contain: 2 people
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள் தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்து வைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன் (தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு துர்வாசர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை சூரிய தேவனைப் பார்த்தபடி உச்சரித்து பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன் தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும் போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஆரம்ப காலத்தியோ திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி விட்டாள். அதாவது சிறு வயதிலேயே பாண்டவர்கள் தந்தையை இழந்தவர்கள். அதனால் பொறுமையுடன் இருந்து வந்தனர்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை) யுதிஷ்டிரனை அதில் கலந்து கொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் அத்தனை பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மருமகள் உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அதுவே அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

#மாமியாரும்_____மருமகளும்...!!!!

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 .... 30.... வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....
நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...
திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,
இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...
சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....
இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......
அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...
மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....
பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....
இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......
அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....
என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......
அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....
இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....
திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......
அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....
ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....
இதனால் 25.... 30... வருடங்களாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...
Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....
அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....
பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......
அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....
அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....
உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....
அத்தை என்று அழைப்பதைக் காட்டிலும் அம்மா என்று அழைத்துப் பாருங்கள்...
உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!..

*தூக்கி எறியும் வெங்காயத் தோலில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?*

🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶
*தூக்கி எறியும் வெங்காயத் தோலில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?*
வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது.
ஹேர் கண்டிஸ்னர்
தலை முடியை நன்றாக அலசிய பின்னர் வெங்காய தோலால் இரவே ஊற வைத்த தண்ணீரைக்கொண்டு முடியை அலசினால், முடி மென்மையானதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
கொழுப்பை குறைக்கிறது
கொதிக்கும் நீரில் வெங்காய தோல்களை போட்டு அடிக்கடி பருகி வந்தால், கொழுப்பு குறைகிறது. இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இதனுடன் தேன் கலந்து பருகலாம்.
இந்த வெங்காய டீயை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னர் பருகலாம். இதில் அடங்கியுள்ள நார்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கார்டிவாஸ்குலர் இருதய நோய் வரமால் தடுக்கிறது.
அழற்சிக்கு எதிரானது
வெங்காயத்தோலை நீரில் போட்டு வைக்கவேண்டும். இந்த நீரானது ஒரே இரவில் வெங்காயத்தோலின் சத்துக்களை உறிஞ்சிவிடும். இந்த நீரை நீங்கள் தடிப்புகள், ஒவ்வாமை அல்லது தோல் வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
ஈக்கள் மற்றும் பூச்சிகளை வராது
ஈக்கள் மற்றும் கொசுக்கள் பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன. இவற்றை வீட்டினுள் நுழையவிடாமல் தடுக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெங்காய தாள்களை போட்டு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அருகில் வைத்து விட வேண்டும். இதன் வாசனை ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை வீட்டிற்குள் நுழையவிடாது.

Tuesday, May 30, 2017

என்னைக் கர்வம் பிடித்தவள் என்பார்கள்.



1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அம்மா அளித்த பேட்டியில், `உங்களிடம் உள்ள கெட்ட குணம் எது?' என்ற கேள்விக்கு தயக்கமே இன்றி, இப்படி பதில் சொன்னார் -
“என் முன்கோபம். அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன்... முடியவில்லை. எனக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொள்கிறவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை.
பொய் பேசுபவர்கள், எனக்கு விரோதமாக நடந்துகொள்கிறவர்கள் மீது பெரும் கோபம் வருகிறது. வருங்காலத்தில் அதை கட்டுப்படுத்த நினைக்கிறேன்.”
மனதில் பட்டதை பளிச்சென கூறும் துணிச்சல் எப்போதும் அம்மாவுக்கு உண்டு!
உங்களை கர்வம் பிடித்தவர் என சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம்.
“பெரிய கம்பெனி படங் களில் பெரும்பாலும் பெரிய கதாநாயகர்கள் தான் நடிப்பார் கள். அந்தப் படங்களில் அவர்களின் சர்வாதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அவர்களை முகஸ்துதி செய்து நடக்க வேண்டும். எனக்கோ, மற்றவர் முன் கை கட்டி அடங்கி நடக்கும் இயல்பு ஒருபோதும் கிடையாது.
எனக்கென ஒரு தனித்தன்மை இருக் கிறது. பிடித்தவர்களுடன்தான் பேசுவேன். பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று ரிசர்வ்டாக இருப்பேன். இதனால் என்னைக் கர்வம் பிடித்தவள் என்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை!”
இந்தப் பேட்டி, அம்மா திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அளித் தது. இப்படிப் பேசுவது தனது திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கவலையெல்லாம் அவருக்கு இல்லை. தன் திறமை யின் மீது நம்பிக்கையும், எவரை யும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவருக்கு உண்டு!
Image may contain: 3 people, text

#படித்த_பொன்மொழிகள்_சில.

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

முதன் முறையாக ஒரு படத்தை அதிகமாக புகழ்ந்த இளையராஜா!.....!!

பொதுவாகவே தான் இசையமைத்த படம் பற்றியும், அதன் நம்பகத் தன்மை பற்றியும் அதிகம் பேச மாட்டார் இளையராஜா. ஆனால் முதன் முறையாக அந்தப்படத்தின் இயக்குனர் பற்றி கூட நாலு வார்த்தையாக பேசியிருக்கிறார் என்றால், அதுதான் ஆச்சர்யம். அவரால் பாராட்டப்பட்ட அந்தப்படம் எங்கம்மா ராணி. பொதுவாக ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் பிடிக்கவில்லை என்றால், ஆரம்பத்திலேயே ஸாரி சொல்லிவிடும் ராஜா, இந்தப்படத்தில் தன்னை இணைத்துக் கொண்டது பற்றி விரிவாக பேசியிருக்கிறார். அதையும்தான் படிங்களேன்…
எங்கம்மா ராணி படத்திற்கு எதற்காக இசையமைத்தீர்கள் ?
இன்று இருக்கும் திரையுலகம் எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா இல்லை தடம்மாறி செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்குமே சரியாக தெரிவதில்லை. உதாரணத்திற்கு சிறு விஷயம் சினிமாவில் சிஜி என்ற தொழில்னுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில் அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு.
இன்று இருக்கும் சினிமா உலகில் ஒரு சாதாரண எதார்த்தமான கதையை எமோஷனலாக சொல்லும் தன்மை சினிமாவில் குறைந்து கொண்டே இருக்கிறது. கோயில்களும்,கலாச்சாரங்களும் எதற்காக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் மக்களுக்கு நல்ல விஷயங்களை தொடர்ந்து ஞாபகபடுத்தவில்லை என்றால் அது வழக்கொழிந்து போய்விடும். முன்னோர்கள் இதை நமக்கு செய்தது எதிர்காலத்தில் நல்ல விஷயங்கள் ரத்தத்தில் கலந்து நிற்க வேண்டும் என்பதற்காக. சினிமாவை பொருத்தவரை ஒரு பொழுது போக்கு சாதனம் என்றாலும் அதற்கான ஒரு கதையம்சம் நல்ல விஷயங்களை நல்ல விதமாக சொல்லும் முற்றிலும் மாறுபட்டு தனித்துவ தன்மையும் கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் இந்த படம் சற்று மாறுபட்டு இருந்ததால் இப்படத்திற்கு இசையமைத்தேன்.
Image may contain: 4 people, people smiling, text
இதற்கு முன் இசையமைத்த படங்களை விட இப்படத்தில் உள்ள வேறுபாடுகள் பற்றி?
நான் வேலை செய்யும் படம் பற்றி எப்போதும் சொல்வதில்லை. ஜனங்கள் போய் பார்த்து விட்டு அவர்கள் தான சொல்ல வேண்டும். அவர்கள் தான் இது நல்ல படம் என்று முடிவை சொல்ல வேண்டும்.
எங்கம்மா ராணி படத்தைப் பற்றி:
ஒரு தாய் தன் குழந்தைக்காக எது வேண்டுமானாலும் செய்வாள்.. குழந்தை மீதான தாயின் அக்கறை 200 சதவீதம் இருக்கும். இப்படத்தில் தன் குழந்தைக்காக அந்த தாய் யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்கிறாள். அதுதான் மற்ற படத்திற்கும் இதற்குமான வித்தியாசம்
படத்தின் பாடல்கள் பற்றி.
அம்மாவை பற்றிய பாடல் போட்டுள்ளேன் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அம்மாவென்று ஒருத்தி இல்லையென்ற ஒரு எண்ணமே உலகில் எவருக்கும் வந்ததில்லை. வா வா மகளே பாடல் படத்தின் ப்ரோமாவிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் இயக்குனர் பற்றி.
பாணி அறிமுக இயக்குனர் இல்லை, அவர் எத்தனையோ இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். சமுத்திரகனியின் உதவியாளராக இருந்த போதும், மலேசியாவில் நிறைய இயக்குனர்களை உருவாக்கிய உற்சாகமான இளைஞர் அவர். இயக்கம் எனபது ஒரு தலைமை நிர்வாகம் மாதிரி அதை சரியாக சொல்லிக் கொடுத்து இத்தனை பேரை உருவாக்கியவர் இப்போது படம் எடுக்கிறார் என்றால் கட்டாயம் எதிர்ப்பார்க்கலாம்.
படத்தின் பின்னனி இசை பற்றி. படத்தின் பின்னனி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக அமைந்தது. பொதுவாக ஒரு தீம் கிடைத்தது என்றால் இசையமைப்பாளர்கள் அதை மேம்படுத்தி (develop) கொண்டே செல்வோம். ஆனால் இந்த படத்தில் காட்சிகளுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தால் பின்னணி இசையும் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. அது ஒரு நல்ல டெஸ்டிங்காக இண்டிரெஸ்டாக இருந்தது. நிச்சயமாக இப்படத்தை எதிர்பார்த்து போகலாம். உங்கள் வாழ்த்துகளை தான் இப்படத்தின் குழு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. என்பதை குழுவின் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்.......!

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே…

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.
4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.
9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.
10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.
12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.
13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.
14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.
15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.
16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.
17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.
19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.
21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

*15 FACTS ABOUT VITAMIN D*

Vitamin D prevents Osteoporosis,
Depression,
Prostate cancer,
Breast cancer
and even effects -
Dabetes & Obesity..
Vitamin D is perhaps the single most *underrated nutrient* in the world of nutrition.
That's probably because it's free....
Your body makes it when sunlight touches your skin !!
Drug companies can't sell you sunlight, so there's no promotion of its health benefits..
The truth is, most people don't know the real story on
*vitamin D and health.*
So here's an overview taken from an interview between Mike Adams and *Dr.Michael Holick*.
◆ 1. Vitamin D is *produced by your skin* in response to exposure to ultraviolet radiation *from natural sunlight*.
◆ 2. The healing rays of natural sunlight (that generate vitamin D in your skin) *cannot penetrate glass*.
So you don't generate vitamin D when sitting in your car or home.
◆ 3. It is nearly impossible to get adequate amounts of vitamin D from your diet. *Sunlight exposure is the only reliable way* to generate vitamin D in your own body.
◆ 4. A person would have to drink *ten tall glasses* of vitamin D fortified milk each day just to get minimum levels of vitamin D into their diet.
◆ 5. The further you live from the equator, the longer exposure you need to the sun in order to generate vitamin D. Canada, the UK and most U.S. States are far from the equator.
◆ 6. People with dark skin pigmentation may need 20 - 30 times as much exposure to sunlight as fair-skinned people to generate the same amount of vitamin D.
That's why prostate cancer is epidemic among black men -- it's a simple, but widespread, sunlight deficiency.
◆ 7. Sufficient levels of vitamin D are *crucial for calcium absorption* in your intestines. Without sufficient vitamin D, your body cannot absorb calcium, rendering calcium supplements useless.
◆ 8. Chronic vitamin D *deficiency cannot be reversed overnight*: it takes months of vitamin D supplementation and sunlight exposure to rebuild the body's bones and nervous system.
◆ 9. Even weak *sunscreens (SPF=8) block* your body's ability to generate vitamin D by 95%. This is how sunscreen products actually cause disease -by creating a critical vitamin deficiency in the body.
◆ 10. It is impossible to generate too much vitamin D in your body from sunlight exposure: your body will self-regulate and only generate what it needs.
◆ 11. If it hurts to press firmly on your sternum(chest/breast bone), you may be suffering from chronic vitamin D deficiency right now.
◆ 12. Vitamin D is "activated" in your body by your *kidneys and liver* before it can be used.
◆ 13. Having kidney disease or liver damage can greatly impair your body's ability to activate circulating vitamin D.
◆ 14. The sunscreen industry doesn't want you to know that your body actually needs sunlight exposure because that realization would mean lower sales of sunscreen products.
◆ 15. Even though vitamin D is one of the *most powerful healing chemicals in your body*, your body makes it absolutely free. No prescription required.
~ Other powerful *antioxidants* with this ability include the
super fruits like Pomegranates (POM Wonderful juice),
Acai, Blueberries, etc.
~ Diseases and conditions cause by vitamin D deficiency:
● Osteoporosis is commonly caused by a lack of vitamin D, which greatly impairs calcium absorption.
● Sufficient vitamin D prevents
prostate cancer,
breast cancer,
ovarian cancer,
depression,
colon cancer and
schizophrenia..
● "Rickets" is the name of a bone-wasting disease caused by vitamin D deficiency.
● Vitamin D deficiency may *exacerbate* type 2 diabetes and impair insulin production in the pancreas.
● Obesity impairs vitamin D utilization in the body, meaning obese people *need twice* as much vitamin D.
● Vitamin D is used around the world to treat *Psoriasis*(a chronic skin disease).
● Vitamin D deficiency can cause ~
schizophrenia.
● Seasonal Affective Disorder is caused by a melatonin imbalance initiated by lack of exposure to sunlight.
● Chronic vitamin D deficiency is often misdiagnosed as *fibromyalgia* because its symptoms are so similar: *muscle weakness, aches and pains*.
● Your risk of developing serious diseases like diabetes and cancer is *reduced 50% - 80%* through simple, sensible exposure to natural *sunlight 2-3 times each week*.
● Infants who receive vitamin D supplementation (2000 units daily) have an *80% reduced risk* of developing *type 1 diabetes* over the next twenty years.

💥 Shocking Vitamin D deficiency statistics:
¶ 32% of doctors and med school students are vitamin D deficient.
¶ 40% of the U.S. population is vitamin D deficient.
¶ 42% of African American women of childbearing age are deficient in vitamin D.
¶ 48% of young girls (9-11 years old) are vitamin D deficient.
¶ Up to 60% of all hospital patients are vitamin D deficient.
¶ 76% of pregnant mothers are severely vitamin D deficient, causing widespread vitamin D deficiencies in their unborn children, which predisposes them to type 1 diabetes, arthritis, multiple sclerosis and schizophrenia later in life. 81% of the children born to these mothers were deficient.
¶ Up to 80% of nursing home patients are
vitamin D deficient
Great Information with No cost...

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...