Wednesday, May 31, 2017

*தூக்கி எறியும் வெங்காயத் தோலில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?*

🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶🍅🌶
*தூக்கி எறியும் வெங்காயத் தோலில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?*
வெங்காயத்தின் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லையென்றாலும், அது உபயோகமான பயன்கள் பலவற்றை கொண்டுள்ளது.
ஹேர் கண்டிஸ்னர்
தலை முடியை நன்றாக அலசிய பின்னர் வெங்காய தோலால் இரவே ஊற வைத்த தண்ணீரைக்கொண்டு முடியை அலசினால், முடி மென்மையானதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
கொழுப்பை குறைக்கிறது
கொதிக்கும் நீரில் வெங்காய தோல்களை போட்டு அடிக்கடி பருகி வந்தால், கொழுப்பு குறைகிறது. இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இதனுடன் தேன் கலந்து பருகலாம்.
இந்த வெங்காய டீயை இரவு படுக்கைக்கு போவதற்கு முன்னர் பருகலாம். இதில் அடங்கியுள்ள நார்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கார்டிவாஸ்குலர் இருதய நோய் வரமால் தடுக்கிறது.
அழற்சிக்கு எதிரானது
வெங்காயத்தோலை நீரில் போட்டு வைக்கவேண்டும். இந்த நீரானது ஒரே இரவில் வெங்காயத்தோலின் சத்துக்களை உறிஞ்சிவிடும். இந்த நீரை நீங்கள் தடிப்புகள், ஒவ்வாமை அல்லது தோல் வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
ஈக்கள் மற்றும் பூச்சிகளை வராது
ஈக்கள் மற்றும் கொசுக்கள் பல நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன. இவற்றை வீட்டினுள் நுழையவிடாமல் தடுக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெங்காய தாள்களை போட்டு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அருகில் வைத்து விட வேண்டும். இதன் வாசனை ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை வீட்டிற்குள் நுழையவிடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...