Monday, May 22, 2017

தில்லாலங்கடி' சோ..

சோ பத்திரிக்கை தொடங்குவதற்கு முன், சினிமாவில் நடிப்பதற்கு முன், நாடகம் நடத்துவதற்கு முன், வக்கீலாக இருந்தார். டி.டி.கே. நிறுவனத்திற்கு அவர் தான் சட்ட ஆலோசகர்.
ஒருமுறை அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த ஒரு மேனேஜரின் செயல்பாடு சரியில்லாததால், அவரை நீக்கி விடலாமா என்று நிர்வாகம் யோசித்து, சோவிடம் ஆலோசனை கேட்டது. அவரும் மேனேஜர் வேலைக்கான சட்டத்திட்டப்படி, ஒரு மாத நோட்டீஸ் அல்லது சம்பளத்துடன் வேலையை விட்டு தூக்கி விடலாம் என்று ஐடியா கொடுத்தார். நிர்வாகமும் அவரை பணி நீக்கம் செய்தது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர், இதை சும்மா விடவில்லை. கோர்ட்டுக்கு சென்றார். தான் மேனேஜராக வேலை பார்க்கவில்லை என்றும், குமாஸ்தாவாக வேலை செய்த தன்னை இப்படி விசாரணையில்லாமல் வேலையை விட்டு நீக்கியது சட்டப்படி செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். பணி நீக்கம் செய்தவர்கள் சோவிடம், “ஏன்ப்பா, நீ அப்படி சொன்னியே? இவரு இப்படி சொல்றாரே?” என்று கேட்டார்கள்.
சோவும் அவர் மேனேஜர்தான் என்று காட்டுவதற்கு, ஆதாரங்களை அலுவலகத்தில் தேடினார். அவருடைய நேரத்திற்கு, அவர் மேலாளர் என்று குறிப்பிட்டு எந்த காகிதமும் சிக்கவில்லை. இதையெல்லாம் கவனிக்காமலே, நீக்கலாம் என்று சொல்லியாச்சே? இப்ப, ஆதாரமில்லாமல் எப்படி நிருபிப்பது?
பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தார். இப்படி, இந்த இந்த மாதிரி தகுதிகளோடு, எங்களுடைய டேக்ரான் மேக்ரான் கம்பெனிக்கு ஆள் தேவை என்று வந்தது விளம்பரம்.
விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தது எல்லாம், அந்த வழக்கு தொடர்ந்தவர் கொண்டிருந்த தகுதிகள். முக்கியமாக, ’மேனேஜர்’...
நம்மாளும், நமக்கே தைச்ச சட்டை மாதிரி ஒரு வேலை வந்திருக்கே என்று நினைத்துக்கொண்டு, அதில் சொல்லியிருந்த தபால் பெட்டி எண்ணிற்கு அவருடைய ’கரிக்குலம் விட்டே’யே தட்டி விட்டார். அதில், தான் டிடிகே கம்பெனியில் மேனேஜராக சிறப்பாக செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தார். அது அவருடைய விண்ணப்பம் அல்ல. Own ஆப்பு...
விசாரணை நாளன்று, கோர்ட்டில் சோ அந்த நபரை குறுக்கு விசாரணை செய்யும்போது என்ன கேட்டும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. சரி என்று முடிவில் அவருடைய விண்ணப்பத்தை காட்டினார். கூண்டில் நின்றவரால், வேறு என்ன செய்ய முடியும்? அது தான் கைப்பட வாக்குமூலமே எழுதியாச்சே!
வேலை முடிந்தது...விரட்டப்பட்டார் வேலையை விட்டு அந்த மேனேஜர் ....
’அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...