Saturday, May 13, 2017

ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கும்பல் கொலைவெறி தாக்குதல்..

மறைந்த தமிழக முதல்வர் இறப்பிற்கு பின்னர் பல்வேறு மர்ம சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன. அந்த வரிசையில் சிவகங்கையை சார்ந்த கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக தொடர்ந்து பணியாற்றியவர். இவரது மகன் ப.முருகேசன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 
ஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் சமையல்காரர் பஞ்சவர்ணம்.  இவரது பேரனுக்கு பெயர் சூட்டியதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அந்தளவிற்கு ஜெயலலிதாவின் மிகுந்த நன்மதிப்பை பெற்றிருந்தார்.
இன்று அதிகாலை பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்து விட்டு, தனது மகன் முருகேசன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் போது, கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. திடீரென நிகழ்ந்த கொலை தாக்குதலில் பஞ்சவர்ணம் நிலைகுலைந்து போனார். அவரை அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் முருகேசன் தந்தையை காப்பாற்ற முயன்ற போது, அந்த கும்பலைச் சார்ந்த 3 பேர்கள் பிடித்துக் கொண்டனர். இரண்டு பேர்கள் பஞ்சவர்ணத்தை சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். பின்னர், 5 பேர் கொண்ட அந்த இடத்தை தப்பிச் சென்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பஞ்சவர்ணத்தை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர மருத்துவ சிகிச்சையில் பஞ்சவர்ணம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பஞ்சவர்ணத்தின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்நிலையத்தில் அவரது மகன் முருகேன் புகார் அளித்துள்ளாராம். ஆனால், சைதாபேட்டை காவல்நிலையத்தில் புகார் மனுவை காவலர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தற்போது, சைதாபேட்டை காவல்நிலையம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி உதவி ஆணையாளர் அழகு அவர்களிடம் செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவிஇயக்குனராக பணியாற்றும் ப.முருகேசன் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் தொடர்ந்து 5 ஆண்டுகள் சமையல்காரராக பணியாற்றிய 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்கல் நடத்திய நபர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருபவரின் தந்தைக்கே நீதி மறுக்கப்பட்டால், சாமான்ய மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. மாநில அரசும், மத்திய அரசும் இவ்விசயத்தில் தலையிட்டு மறைந்து கிடக்கும் மர்மத்தை வெளிக்கொணர வேண்டும் என்பதே பொதுமக்கள் விருப்பம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...