Thursday, May 18, 2017

தினகரனை "திவால்"கரனாக்க திட்டம்...!!!

தேர்தலில் நிற்க நிரந்தரமாக தடை விதிக்க ஏற்பாடு!
அதிமுகவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை டெல்லி கொஞ்சம் கூட விரும்பவில்லை.
அதன் காரணமாக, சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும், துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு,
4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் மீதுள்ள மற்ற வழக்குகளும் தூசு தட்டி எடுக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு, விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கில், தினகரனுக்கு, நீதி மன்றம் 28 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அந்த அபராதத்தை அவரால் கட்ட முடியாது.
ஏனெனில், ஆர்.கே.நகர் தேர்தலின் போது, அவர் தமது சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் குறைவாக உள்ளதாகவே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது மனைவி பெயரிலும், இரண்டு, மூன்று கோடி ரூபாய் அளவுக்கே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை, அவர் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்துவதாக இருந்தால், அந்த பணம் எப்படி வந்தது என்று...
அவர் முறையான கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். அது சாத்தியம் இல்லை.
எனவே, அபராதம் கட்ட முடியாத தினகரனை, திவாலானவராக அறிவிக்க நேரிடும்.
அவ்வாறு திவாலானவராக அறிவிக்கப் பட்டால், அவர் எந்த தேர்தலிலும் நிற்க முடியாத நிலை வரும்.
எனவே, அவரை கடைசி வரை, எந்த தேர்தலிலும் நிற்கமுடியாத அளவுக்கு...
திவாலானவராக அறிவிக்க வேண்டும் என்றே டெல்லி மேலிடம் விரும்புவதாக தெரிகிறது.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், டெல்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல், தினகரனின் மற்றொரு சகோதரரான பாஸ்கரன் மீது...
ஜெயா டி.வி க்கு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கிய, அந்நிய செலாவணி விதி மீறல் வழக்கிலும் தீர்ப்பு நெருங்கி கொண்டிருக்கிறது.
எனவே, அவரும் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றே கூறப்படுகிறது.
இது தவிர, சசிகலா குடும்பத்தை சேர்ந்த மேலும் சிலர், ஆட்சி மற்றும் கட்சியில்...
மறைமுகமாக அதிகாரம் செலுத்தி வருவதாக, டெல்லியின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதனால், அவர்கள் மீதும் விரைவில் சில வழக்குகள் பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...