Saturday, May 27, 2017

வாத்தியார்னா சும்மாவா...

ஜெ.எதிர்ப்பு என்கிற போர்வையில் ஆசிரியர் சோ அவர்களையும் விமர்சிப்போருக்கு இந்த பதிவு :
1971ம் வருட பொதுத் தேர்தல்.
இந்திராவும் கருணாநிதியும் பெருந்தலைவரைத் தோற்கடிக்க
தீவிரமாக இருந்தனர்.
துக்ளக் பத்திரிக்கையையும்
முகம்மது பின் துக்ளக் படத்தையும்
நசுக்க கருணாநிதி பெரும் தொல்லைகளை ஆசிரியருக்கு கொடுத்தார்.
அந்த நிலையில் ஆசிரியர் சென்னை மெரீனா கடற்கரையில் பெருந்தலைவருக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்
மிகச் சிறிய விளம்பரங்கள்.
மாலை 06.30 மணிக்கு "சோ பேசுகிறார்" என்ற அறிவிப்பு.
தனி ஒருவனாக வேறு யாருமின்றி ஆசிரியர் பேசினார். ஏறக்குறைய ஒன்னரை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் ஆசிரியரின் உரையை ஆர்வத்துடன் கேட்டனர்.
சரியாகச் சொன்னால் தர்மம் வீழ்ந்துவிடக் கூடாதே என்ற சத்தியத்தின் கர்ஜனை அது.
அந்தக் கர்ஜனை கடைசிவரை தொடர்ந்தது.
தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ எந்தக் கட்சியையும் எந்த தலைவரையும் அவர் பயன்படுத்திக் கொண்டதேயில்லை.
சத்தியம், நேர்மை, துணிவு, பேரறிவு
இவற்றுக்கெல்லாம் ஒரே பெயர்தான் உண்டு.


#சோ
Image may contain: 1 person, sitting and eyeglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...