Saturday, May 27, 2017

திருமணம் தடை நீக்கும் வெள்ளிகிழமை துர்க்கை அம்மன் வழிபாடு....

பொதுவாக பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற விளக்கேற்றி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழிபடுகிறார்கள். செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
Image may contain: 1 person
வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.
விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.
இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
இந்த விரத வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...