Thursday, May 18, 2017

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?



ரஜினி இனி அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பித் தால் நிச்சயம் எதுவும் சாதிக்க முடியாது.இது ரஜினிக் கும் தெரியும்.இருந்தாலும் எந்திரன் 2.0 ரிலீசாகும் வரை ரஜினி அரசியலுக்கு வருவார் தமிழ்நாட்டை ஆளுவார் என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுக்கொண்டு
இருப்பார்கள்.
படம் ரிலீசானவுடன் படத்தைப்போலவே இந்த அரசி யல் பேச்சுக்களும் பெட்டிக்குள் போய்விடும்.அதனால்
ரஜினி அரசியலுக்கு வருவார் தனிக்கட்சி தொடங்கு வார்என்று யாராவது நினைத்து இருந்தால் அது நிச்ச யம் நடக்காது.
இப்போதைய தமிழக அரசியலில் ரஜினியை விட பன் னீர் செல்வம் தான் பவர்புல் மனிதர்.நான் சொல்வது சாதாரண பன்னீரை அல்ல.வருங்காலத்தில் இரட்டை இலையுடன் கூடிய அதிமுகவை தலைமை தாங்க இருக்கும் பன்னீர் தான் தமிழ்நாட்டின் பவர்புல் மேன். திமுகவின் ஸ்டாலினை விட இவர்தான் சக்தியான வர்.
இவரோடு பிஜேபி கூட்டணி வைக்கும் பட்சத்தில் பிஜேபிக்கு ஒரு தொகுதியில் சர்வசாதாரணமாக 50ஆயிரம் ஓட்டுக்கள் மேல் கிடைக்கும்.ஆனால் ரஜினியை பிஜே பி க்கு கொண்டுவந்தோ இல்லை ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து பிஜேபியோடு கூட்டு சேர்ந்தாலும் ஒரு தொகுதியில் பிஜேபிக்கு 10 ஆயிரம் ஓட்டு கிடைத்தாலும் அதிசயம் தான்.
Image may contain: 1 person
ரஜினியை விட பன்னீருக்கு துணையாக வர இருக்கும் இரட்டைஇலைக்கு தான் சக்தி அதிகம்.இது பிஜேபி யின் தேசிய தலைமைக்கு நன்றாக தெரியும்.அதனால் தான்பிஜேபி பன்னீரை மக்களை சந்திக்க அனுப்பியுள் ளது.அதனால் ரஜினி வருவார் பிஜேபியை வழி நடத்து வார்என்று சிலர் சொல்வது போல எக்காலத்திலும் நடக்காது.
ரஜினி மாதிரி பிஜேபிக்கு தமிழக அரசியலில் எந்த குழ ப்பமும் இல்லை .பன்னீர் தலைமையில் இரட்டை இலையுடன் கூடிய அதிமுக,பாமக,தமாக,புதிய தமிழ கம் இவற்றோடு பிஜேபி கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் இறங்கி னாலே போதும்.பிஜேபி தமிழ்நாட்டி ல் 50 தொகுதிகளில் வெற்றி பெற்று விடும்.
அதனால் ரஜினி வந்து பிஜேபியை தமிழ்நாட்டில் தூக் கி நிப்பாட்டுவார் என்று பரப்பப்படும் மீடியா செய்திக ளால் ரஜினிக்கும்ரஜினி ரசிகர்களுக்கும் வேண்டுமா னால் எந்திரன் 2.0 ரிலீசாகும் வரை தற்காலிக சந்தோ சத்தை கொடுக்கலாம்.
ரஜினி பிஜேபியை தூக்கி நிப்பாட்டுவார் என்று பரப் பப்படும் செய்தியின் உண்மையான நோக்கம் ரஜினி யை சினிமாவில் தூக்கி நிப்பாட்ட பரப்பப்படும் பிரச்சாரமே தவிர ரஜினியால் பிஜேபிக்குஎந்த பலனும் எக்காலத்திலும் கிடைக்கப்போவது இல்லை..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...