Saturday, May 27, 2017

உலகத்தில் பலருடைய வெற்றிக்கு மற்றவர்கள் காரணமாக இருக்கின்றனர்.



மருத்துவரிடம் பல நோயாளிகள் வருகின்றனர்.
முதல் முறை வந்த நோயாளி, இரண்டாம் முறை வந்தவுடன்,
மருத்துவர் நோயாளியின் பெயரைக் கூறி அழைக்கின்றார்.
அப்போது நோயாளியின் உள்ளத்தில் தன்னை மருத்துவர் நன்றாக கவனிப்பதாக எண்ணம் தோன்றும்.
ஆனால்,
மருத்துவர் அவரை நினைவில் வைக்காமல் புதிதாக வந்தவரை விசாரித்தால்,
நோயாளியின் உள்ளத்தில் என்ன தோன்றும்?
மருத்துவர் தன்னைச் சரியாக கவனிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்படும்.
அதன் காரணமாக வேறு மருத்துவரிடம் செல்ல விரும்புவார்.
தன்னிடம் வந்த நோயாளிகளின் பெயர்களையும், முகங்களையும் நினைவில் வைக்காவிட்டால்,
மருத்துவர் பணத்தைப் பார்க்க முடியாது.
இதே போன்றுதான் வர்த்தகரின் நிலையும்.
அவரது வாடிக்கையாளர்களை
நினைவில் வைக்காமல் அவரது வர்த்தகம் வளர முடியாது.
உலகத்தில் பலருடைய வெற்றிக்கு மற்றவர்கள் காரணமாக இருக்கின்றனர்.
யாரும் அவருடைய செயலால் மட்டும் வாழ முடியாது.
பிறர் ஆதரவுடன் தான் எவரும் வாழ்கின்றனர்.
மற்றவர்களை மறக்காமல் இருப்பதால்
பலர் வாழ்வு வளம் பெற்றுள்ளது.
ஆதவன் உதிக்கும் வேலையில்
அனைவரும் நலமுடன் வாழ்ந்திட
இனிய காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!!!!!!!!!!
Image may contain: sky

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...