ராஜனிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் 'ஆஸ்ரம்' பள்ளிகளில் ஆசிரியர்கள்முதல் வாட்ச்மேன், வேன் டிரைவர்கள் வரை யாருக்கும் 7 மாதங்களாக சம்பளமே போடவில்லை எனக்கூறி அப்பள்ளி ஊழியர்கள் சில மாதங்கள் முன்பு போராட்டங்கள் நடத்தியது குறித்து செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியாகின.

LKG முதற்கொண்டே பல லட்சங்களில் கட்டண கொள்ளையடிக்கும் பள்ளிகளை நடத்திக்கொண்டு அதன் ஊழியர்களுக்கே சம்பளம் போடாமல் ஏமாற்றும் பெண்மணியை மனைவியாகக் கொண்டவருக்கு சேவை மனப்பான்மை இருக்கும் என்று நம்புபவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் மூடர்கள். ரஜனிகாந்த் இந்த தமிழ் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்யக் கருதினால் அரசியலுக்கு கூட வரவேண்டாம். முதலில் தனது மனைவி நடத்திவரும் பள்ளிக்கூடங்களின் நிர்வாகத்தை திருத்தட்டும் .

No comments:
Post a Comment