கூகுள் லென்ஸ் (Google Lens) என்றால் செயற்கை நுண்ணறிவுகொண்ட ஒரு கேமரா செயலியாகும். அதாவது உங்கள் புகைப்படங்களின் வாயிலாக விபரங்களை பெறும் வகையிலான நுட்பமாகும்.
உலகின் முன்னணி டெக் நிறுவனமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள்I/O 2017 டெவெலப்பர் மாநாட்டு அரங்கில் எதிர்காலத்திற்கான தனது செயல்திட்டங்கள் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள செயலிகளில் மிக முக்கியமானதாக லென்ஸ் விளங்குகின்றது.
கூகுள் லென்ஸ் என்பது ஒரு ஸ்மார்ட்போன் கேமரா ஆப் ஆகும். இதன் உதவியுடன் நீங்கள் இதுவரை அறிந்திராத தகவலை புகைப்படங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையிலான நுட்பத்தை கொண்டதாகும்.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு மலர் ஒன்றை புதிதாகபார்ப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் அதனை பற்றி எந்த விபரங்களும் நமக்கு தெரியாது. எனவே, இது போன்ற நேரங்களில் அதனை புகைப்படமாக எடுத்து நண்பர்களிடம் அல்லது அதுபற்றி விபரம் தெரிந்தவர்களிடம் கேட்போம், இதனையே உங்களுக்கு கூகுள் லென்ஸ் செயலி உடனடியாக விநாடிகளில் வழங்க துனைபுரிகின்றது.
செயற்கைநுண்ணறிவு கொண்ட இந்த செயலி வாயிலாக எந்தவொரு புகைப்படத்தை கொடுத்து தகவல்களை பெறலாம். நீங்கள் ஒரு நிறுவனத்தின் லோகோ அல்லது ஒரு மளிகை கடையின் முகப்பு பலகை படத்தையோ கூகிள் லென்ஸ் வழியாக சோதிக்கும் பொழுது அதுபற்றிய முழுமையான விபரங்களை பெறலாம்.
இந்தாண்டின் இறுதியில் லென்ஸ் ஆப் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதனை கூகுள் அறிமுகம் செய்யும் பொழுது அடுத்த தலைமுறை நுட்பங்களை பெற எதுவாக அமையும், என டெக் உலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கூகுள் வெளியிட்ட வீடியோவை காணலாம்..
No comments:
Post a Comment