
காலையில் தூங்கி எழுந்தவுடன் உங்களுக்கு இந்த அறிகுறிகள் தெரிந்தால்… – எச்சரிக்கை தகவல்
காலையில் தூங்கி எழுந்தவுடன் உங்களுக்கு இந்த அறிகுறிகள் தெரிந்தால்… – எச்சரிக்கை தகவல்
நமக்கு தேவையான சத்தினை வைட்டமின்கள், தாது உப்புகளை ஒரு நல்ல
*காலையில் தூங்கி எழுந்தவுடன் அனைவருக்குமே கண்க ள் லேசாக
உப்பினார்போல் இருக்கும். ஆனால் அதிகமாக கண் ஊதி இருப்பது அயோடின் குறைபாடு , தைராய்டு சுரப்பியின் பாதிப்பு இவற்றினை காட்டு ம். அதிக சோர்வு, உப்பியகண், வறண்ட சருமம், எடை கூடி இருத்தல், எளிதில் உடையும் நகம் இவை யெல்லாம் இதன் அறிகுறிகள். எனவே இத்தகு அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெறவேண்டு ம்.


*முடி வறண்டு பொலிவிழந்து இருக்கின்றதா? வைட்ட மின் பி7 (அ) அயோ டின் குறைபாடு உங்களுக்கு இருக் கலாம். எளிதில் உடையும் நகங்கள் குறைபாடு கூட இருக்கலாம். மருத்துவ அறிவுரையோடு இதனை சரி செய்ய முடியும்.


* ஈறுகளில் அடிக்கடி ரத்தம் கசிவு ஏற்படுகின்றதா? உங்களுக்கு வைட்டமின் ‘சி’ சத்து குறைபாடு இருக்க க்கூடும். மேலும் இக்குறைபாடு ‘ஸ்கர்வி ’ எனும் தாக்குதலை ஏற்படுத்தலாம். எளிதில் ரத்த கசிவு, மூட்டுகளில் வலி, சதைகளில் வலி என ஏற்படலாம். எனவே கவனம் தேவை.
* இப்பொழுதெல்லாம் அனைவரும் கால்ஷியம், வைட்டமின் டி பற்றி நன்
கு அறிந்தே உள்ளனர். வைட்டமின் டி சத்து எலும்புகளுக் காக என்பது மட்டுமே அறிந்துள்ளனர். ஆனால் வைட்ட மின் டி குறைபாடு உயிரிழப்பு விகிதத்தினை 30% கூட்டி விடுகின்றது. புற்று நோயால் ஏற்படும் உயிர் இழப்பினை 40%கூட்டிவிடுகின்றது. 65%இருதய செயலிழப்பு நோயாளி களுக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு இருந்தது ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது. எலும்பிற்காக கால்ஷியம் சத்திற்கு பால்குடிக்கலாம். தின மும் காலை, மாலை 15நிமிடம்
வெயிலில் இருப் பது வைட்டமின் டி குறைபாட்டினை நீக்கும். மே லும் வைட்டமின் டி குறைபாடு உடல் எடை கூடு தல், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, மன அழுத் தம், உடல்வலி, எப்போதும்சோர்வு, எலும்பு கரைதல், நரம்பு பாதிப்பு போன்றவைகளுக்கு காரணமாகி ன்றது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி3 அவசியம்.
மருத்துவ ஆலோசனைப்படி தேவைப்பட்டால் இதனை வைட்டமி ன் மாத்திரையாக எடுத்துக் கொள்ளலாம்.


* வைட்டமின் மாத்திரைகளை அதிக வெளிச்சம், சூடு இருக்கும் இடத்தில் வைத்தால் அதன் நன்மை களை அது இழந்துவிடும் நிழலான குளுமையான இடத்தில் இதனை
வைக்கவும்.

* வைட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் குறைபாடு அதிகமாகவே காணப் படுகின்றது.
* கர்ப்பகாலத்தில் சில குறிப்பிட்ட வைட்டமின்களை மருத்தவர் பரிந்துரைப்பார். இதனை அவசியம் எடுத்துக் கொள்ள வேண் டும்.
No comments:
Post a Comment