Friday, May 12, 2017

எண்ணிப் பார்த்தால்......

நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு வாணிபத்தை தொடங்கியிருக்கலாம்.
அதிலே தோல்வி ஏற்பட்டிருக்கலாம்.
அதிலே வெற்றி ஏற்பட்டிருந்தால் உங்கள் வாழ்வே மாறியிருக்கலாம்.
உங்கள் வாழ்வு மாற்றம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பலரது வாழ்விலே மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
உங்கள் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால்,
மிகவும் சுவையாக இருக்கும்.
இதேபோன்று டாக்டராக, இஞ்சினீயராக, விரும்பிய சிலர், வேறு தொழில்கள் செய்ய வேண்டி ஏற்படலாம்.
அவர்கள் தாங்கள் எண்ணியபடி நடந்திருந்தால்
எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம்.
இவ்வாறு பலவற்றை எண்ணிப் பார்ப்பது வீண் வேலை, பைத்தியக்காரத்தனம் என்று எண்ணக் கூடாது.
அதனால் நமது கற்பனைத்திறம் வளரும்.
இப்படி நடந்துவிட்ட நிகழ்ச்சிகளைத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதால் நமது ஞாபகசக்தி வளரும்.
ஓய்வு நேரங்களிலும், வீணாக நேரத்தைச் செலவிடும் காலங்களிலுமே இப்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
எனவே நாம் வீணாகக் கழிக்கும் காலத்தைப் பயனுடையதாக்க இப்பயிற்சிகள் பெரிதும் பயன்படும்.
கற்பனை உருவங்களைக் கொண்டு
நமது நினைவில் நிற்க வேண்டியவைகளை
நினைவில் நிறுத்த முடியும் என்று பார்த்தோம்.
ஆனால் உருவமற்றவைகளுக்கு இம்முறை பயன்படாது.
சிலவற்றிற்கு உருவம் கொடுக்க முடியும்.
சிலவற்றிற்கு உருவம் கொடுக்க முடியாது.
வெப்பம், ஆர்வம் என்ற சொற்களை உருவங்கள் கொடுத்து நினைவில் நிறுத்த முடியாது.
அதை விட வேறு முறைகளில் அவைகளை நினைவில் நிறுத்த முடியும்.
அதைப் பற்றி நாளை படிப்போம்.
இயற்கை எனும் அன்னை நம் புத்தி, உடல், ஆத்மாவை வளர்க்கிறாள்.
அவளைப் புன்னகையோடு பேணிப் பாதுகாப்போம்,
நமக்காகவும், நம் தலைமுறைக்காகவும் .
நற்காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...