சுக்கிரன் சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார்?
சுக்கிரன் சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார்?
12 ராசிகளை வைத்த ஒரு மனிதனின் வாழ்க்கையை கணக்கிடப்படுகிறது. அந்த
வகையில் சுக்கிரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்க ளுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம். (மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன்: 12 ராசிகளுக்கு மான பலன்கள்)
மேஷம்
சுக்கிரன் 2 மற்றும் 7ம் வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுவதால் சுக்கிரன் தரும் பலன்க ள் மிக முக்கிய மானைவயாகும். உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமர்ந்து சுப விரையங்களை ஏற்படுத்தி வந்த சுக்கிரன், இன்று முதல் உங்கள் ராசியில் அமர்கி றார். வார்த்தைகளில் நளினமும் சாதுா்யமும் பளிச்சிடும். ஆடை ஆபரணம் வாகன ம் வீடு வழியில் ஆதாயம் இருக்கிறது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்க ளை வாங்குவீா்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியா் சமேதமாக ஆலய தரிசனம் செல்ல நேரம் கூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். மகாலட்சுமிக்கு சந்தனம், குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் ராசி அதிபதி சுக்கிரன் அமர்கிறார். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூடி வரும். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத செலவு கள் ஏற்படும். செய்யும் காரியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றவா்க ளின் யோசனைகளின் போல் அவசரமாக தகாத காரியத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உரிய பரிகாரம் செய்வதால் மன நிம்மதி உடல் ஆரோக்கியம் மேம்படும் பண வருவாய் அதிகரிப்ப தோடு சுப விரைய செலவுகளும் ஏற்படும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்து வரலாம்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது சிறப்பான அம்சம். பணவரவு அதிகரிக்கும் வாகன வசதி வாங்கக் கூடிய காலம் கைகூடி வந் துள்ளது. குழந்தைகள் வழியில் நல்லது நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சிலர் வீடு மனை வாங்கலாம். மேலும் நன்மைகள் பல நடக்க தினசரி நெற்றியில் சந்தனம் பூசி வரலாம்.
கடகம்
உங்கள் ராசிக்கு 10வது இடமான கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானமாகும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கு ம். பணவரவு எதிர்பாராத வகையில் வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையின் வழியில் நல்லது நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கு ம். உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பிரச்சினைகள், நோய்களை உடனடியாக கவனிக்க வேண்டும். நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க வெள்ளிக்கிழமைகளில் ருத்ரஅபிஷேகம் செய்யலாம்.
சிம்மம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 9வது இடமான தர்ம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். சமூ கத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவருவாய் அதிகரிக்கும் கால கட்டம் இது. குடும்பத்தோடு பிரபல கோவில்களுக்கு சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கி யமாக இருந்தாலும் பணிச்சுமை அதிகரிக்கும் இதனால் மனஉளைச்சல் ஏற்படும். பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் கோவில்களுக்கு நெய் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய தரலாம்.
கன்னி
உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம பாவத்தில் சுக்கிரன் அமா்ந்திருப்பது பாதி ப்பை ஏற்படுத்தும். பண வருவாய் அதிகாித்தாலும் மன நிம்மதியும் திருப்தியும் இரு க்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்ச்சி என செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வீடு நிலம் வாகனம் வாங்கும் யோகம் வரும். ஆடை ஆபரணம் வாகனம் நிலம் வீடு வாங்குவதற்கான யோகம் கூடி வரும். குடும்பத்தில் தம்பதியா் மன மகிழ்ச்சியாக இருப்பார்கள். சிலர் கடன் வாங்க வேண்டியிருக்கும் உடல் ஆரோக் கியத்தில் எச்சரிக்கை தேவை. பசுவிற்கு தானம் கொடுங்கள்
துலாம்
மேஷம் ராசியில் அமர்ந்து சுக்கிரன் தனது 7வது பார்வையால் துலாம் ராசியை பார் க்கிறார். இது நன்மை தரும் அமைப்பாகும். தனது ஆட்சி வீட்டினை ஏழாம் பார்வை யாக பார்க்கிறார் சுக்கிரன். உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சுக்கிரன் அமா்ந்திருப்பது சிறப்பான காலம். சிலருக்கு காதல் ஏற்படும் காலமாகும். பெண்கள் வழியில் உதவி கள் கிடைக்கும். நண்பா்கள் சோ்க்கையில் எச்சாிக்கை தேவை. பண வருவாய் அதிகாிக்கும். நல்வாய்ப்பானது தேடி வரும். தம்பதியா் மனமகிழ்ச்சியாய் இருக்கும் காலம் இதுவாகும். உடல் ஆரோக்கியம் விசயத்தில் கவனம் தேவை. வெள்ளிக் கிழ மைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்க.
விருச்சிகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைந்திருப்பது நல்லதல்ல. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய கால மிது. என்னதால் வேலை செய்தாலும் அதற்கு அங்கீகாரம் இல்லையே என்ற கவலைகள், சங்கடங்கள் சூழும் காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.
தனுசு
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதன் மூலம் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்ப தால் வாழ்க்கைத் துணையை அழைத்துக் கொண்டு உல்லாச பயணம் செல்லலாம். சிலருக்கு காதல் மலரும்காலமிது. காதலிக்கும் பெண்ணிடம் தைரியமாக காதலை சொல்லலாம். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். மகாவிஷ்ணுவை தினசரியும் வணங்க மேலும் நல்லது நடக்கும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத்தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாக னம் வாங்கும் போது மட்டும் பார்த்து கவனித்து வாங்க வேண்டும். வீட்டுக்குத் தே வையான அலங்கார பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அதிகம் வைக்க வேண்டிய நேரமிது. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமான் பார்வதியை பச்சரிசி கொண்டு வணங்கலாம். நெற்றியில் தினசரியும் குங்குமம் வைக்க மேலும் நல்லது நடக்கும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் குடியேறியுள்ளார் சுக்கிரன். சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத் திற மையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச்சின்ன பாதிப்புக ள் ஏற்படும் என்பதால் அலட்சியம் செய்யவேண்டாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். சனிக்கிழமைகளில் ஹனுமன் சாலீசா படிக்க நன்மை அதிகரிக்கும்.
மீனம்
ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். பண வரு வாய் அதிகரிப்பதோடு வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. மனைவியுடன் உறவில் உற்சாகம் பிறக்கும். திருமணம், விருந்து விஷேசங்களுக்கு சென்று வருவீ ர்கள். பண வரவு அதிகரிக்கும் வீட்டிற்குதேவையாக பொருட்களை வாங்கி சேர்ப்பீர் கள். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில் சமூகத்தில் மதிப்பு மரியா தை கூடும். பேசும் வார்த்தைகளில் இனிமை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாய்ப்பு கள் தேடி வரும்.வெள்ளிக்கிழமைகளில் வெண் சந்தனத்தை சிலருக்கு தானமாக தரலாம்.