கோரைப் பாய், பிரம்பு பாய், ஈச்சம் பாய், முங்கில் பாய், தாழம் பாய், பேரிச்சம் பாய், நாணல் கோரை பாய் என பலவகைகள் உள்ளன.
ஒவ்வொரு வகை பாய்களுக்கும் இருக்கிறது ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் :
கோரைப்பாய்: கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.
கம்பளி விரிப்பு: கம்பளி விரிப்பை பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.

பிரப்பம்பாய்: பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி நலம் கொடுக்கும்.
தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின் சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும். இலவம் மரத்தில் பஞ்சுகளை மெத்தைகளாக உருவாக்கி அதை மரகட்டிலில் போட்டு தூங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் நீங்குமாம்.
பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசையே கிடையாது, பாயில் படுத்து உறங்குவது என்பது கிட்டத்தட்ட யோகாசனம் செய்தது போன்ற நன்மையைத் தரக்கூடியது. தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நம் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
மிகவும் பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
No comments:
Post a Comment