Thursday, March 29, 2018

வாணியம்பாடியில் இந்துவை நிறுத்திவைத்து வெற்றிபெறச்செய்தார் சாத்தான்குளத்தில் இந்துவை நிறுத்தி வெற்றி பெறச்செய்தார்.

முதல்வர் ஜெ அவரிடம் வேறெந்த முதல்வரிடமும் இல்லாத மிகத்துணிச்சலான, செயல்களில் நான் வியந்து, பாராட்டி, வரவேற்று ப்ரமித்த விஷயம் என்னவென்றால் வேறுஜாதிக்காரர்கள் அதிகம் உள்ள இடத்தில் மற்றொரு ஜாதிக்காரரை வேட்பாளராக நிறுத்தி வெற்றியும் பெற்றுக் காட்டியதே. அதுவும் குறிப்பிட்ட ஜாதியின் மேல் வெறியாக இருக்கக்கூடிய இடத்தில் மாறுபட்ட ஜாதிக்காரரை நிறுத்தும் துணிச்சல் வேறு யாருக்குமே இந்திய அளவில் கூட இருக்காத போது அதை நிறைவேற்றுக்காட்டியதுடன், அவர் இருந்தவரை ஜாதிக்கட்சிகள் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டார். ஆகவே மக்கள் விழிப்புடன் தான் இருக்கிறார்கள். தலைவர்கள் தான் விழிக்க வேண்டும். அவர்கள் தான் ஜாதி பிரச்சனைகளை உருவாக்கி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதையே பெரிதாக்கி தங்கள் அரசியல் நிலைப்பாட்டை காண்பிக்கிறார்கள் என்பது தான் உண்மை. தலைவர்கள் தாங்கள் யாருடன் கூட்டணி அமைத்தால் லாபம் பெறலாம் என்ற கணக்கிட்டு யாரை வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமாகவோ, உயர்வாகவோ திட்டியோ, புகழ்ந்தோ எப்போ வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கூட்டணி வைத்து தாங்கள் தான் மக்களின் பிரதிநிதி என்று தாங்களே கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, யாருக்கும் மக்களின் மீது உண்மையான அக்கறை கிடையாது. அதனால் தான் ஏதாவதொரு மக்களின் நம்பிக்கைச் சார்ந்த விஷயத்தை யார் மூலமாவது தவறாக பேசவைத்து, அதை ஏற்போர் எதிர்போர் என்று ஒரு பிரச்சனையை உருவாக்கி, மக்களுக்குள் உள்ள ஒற்றுமையை சிதைத்து, அதனால் வரும் லாபத்தை பங்குபோடுகிறார்கள். இதில் புதுசு, பழசு, இங்குள்ளது, அங்குள்ளது, நமக்கு பிடிச்சது, பிடிக்காதது, நாம் ஏற்றது, ஏற்காதது எல்லாமே அடங்கும். யார் யார்போலவோ ஆட்சி நடத்தப் போறோம் என்கிறார்களே தவிர, அவர்களுக்கு திறமையுள்ளதை அவர்களாலே கூட நம்பமுடியவில்லை. அவரது கொள்கை இவரது கொள்கை என்கிறார்களே தவிர எந்தக் கொள்கையும் பின்பற்றாமல் பச்சோந்தி மாதிரி நேரத்திற்கேற்ப ஏதாவது விளக்கம் சொல்லி அவர்கள் சொல்லக்கூடிய, அந்த தலைவர்களின் பெயரைத்தான் கெடுக்கிறார்களே தவிர, யாரும் மக்கள் பிரச்சனைகளை கவனிக்கவில்லை.இது தான் களநிலவரம். மக்களும் இவர்களால் நல்லது நடக்காதா, அவர்களால் நடக்காதா என்று ஏக்கத்துடன் தான் ஒவ்வொருநாளையும் எதிர்பார்ப்போடு காலம் கடத்துகிறோம். இனி ஓட்டுக்காக பணம் பெறும் மக்களிடம் முழு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்டெடுத்தால் புதிதாக வருபவர்கள் மூலம் ஏதாவது நல்லது நடக்கலாம். யார் முயலுவது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...