
நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . .
நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . .
10 நெல்லிக்காய்களை கழுவித்துடைத்து கொட்டைகளை நீக்கிவிட்டு
நன்கு காயவைக்கவும்(இதுதான் ‘நெல்லிமுள்ளி’).எண்ணெயைக்காய
வை த்து, பெருங்காயத்தை பொரியவிட்டு எடுக்கவு ம். பின், அதே எண்ணெயில் 10காய்ந்த மிளகாய்க ளையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்து விட்டு, 1 கப் கறிவேப்பிலையை அந்தசூட்டிலேயே போட்டு புரட்டி எடுத்துக்கொள்ளவும். காய்ந்திருக்கும் நெல் லி முள்ளியை மிக்ஸியில்
போட்டு நன்கு அரைக்கவும். பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காய கட்டியைப்போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலை யையும் போட்டு அரைத்தெடுக்கவும். அருமையான வாச னையோடு இருக்கும் இப்பொடியை, சூடான சாதத்தில் கல ந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.


கூந்தல்வளர்ச்சிக்கு தேவையான நெல்லிக்காயும் கறிவே ப்பிலையும் கலந்திருப்பதால், அப்படி சாப்பிட்டு வருபவர்க ளின் கூந்தல் கருகரு என கருமையாக ஈர்க்கும் விதமாக இருக்கும். அதே நேரத்தில் இளநரையும் எட்டிப்பார் க்காது
மருத்துவரை கலந்து ஆலோசித்து உட்கொள்ளவும்.

No comments:
Post a Comment