சடாரியில் இருக்கும் பாதங்கள் யாருடையவை?எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், சில இடங்களில், சில முக்கிய பிரமுகர்களுக்கென்று பிரத்யேகமாக சில வசதிகள் கிடைக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாமான்யமானவர்கள், அவர்களுக்கும் அத்தகைய வசதிகளை சலுகை களைக் கேட்கும்போது, `இதென்ன பெருமாள் கோயில் சடாரியா’ எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு? என்று பதில் வரும்.எல்லாருக்கும் கிடைக்கும் சடாரிக் கென்று ஒரு மகத்துவம் இருக்கின்றது. உலகின் அனைத்து உறவுப் பற்றிலிருந்தும்நம்மை விடுவித்துக் கொள்ளஇறைவனின் ஆசியை அளிப்பதே சடாரியின் மகத்துவம்.நிறையப் பேர், சடாரியில் பொறிக்கப் பட்டிருப்பவை பெருமாளின் பாதங்கள் என்று நினைப்பார்கள். அவை பெருமாளின் பாதங்கள் அல்ல, பெருமாளால் பிறக்கும்போதே உலக மாயைகளை வென்றவரான நம்மாழ்வாரின் பாதங்கள்.நம்மாழ்வாரின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை பக்தர்களின் தலையில் சார்த்துவதின் மூலம் இவ்வுலகத்தின் பாசப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு, பரமாத்வை அடையலாம் என்பதே சடாரி வைப்பதின் ஐதீகம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment