Saturday, May 5, 2018

தரம் #Quality என்றால் என்ன?

Quality என்பதற்கு பின்வரும் விளக்கம் தரப்படுகிறது :

the standard of something as measured against other things of a similar kind; the degree of excellence of something.
ஒரு பொருள் தரும் பயனை அல்லது சேவையை அதே முயற்சியில் அல்லது அதே செலவில் கிடைக்கும் மற்றவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து எது சிறந்த அனுபவத்தைத் தருகிறதோ அதுதான் தரம்!
ஒருத்தர் 1000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாலேயே அவர் தரமான வீரர் கிடையாது! அதேபோல ஓடக்கூடிய மற்ற நபர்களை விட அவர் எந்த விதத்தில் சிறந்து விளங்குகிறார் என்பதை பொறுத்தே அவர் தரமான வீரரா என்பதை கண்டறியமுடியும்!
விராட் கோலி தரமான ஆட்டக்காரர் என்பதை எப்படி சொல்வீர்கள்? விராட் கோலி சந்திக்கும் பந்து வீச்சாளர்கள், எதிர்கொள்ளும் பந்துகள், ஆட்டம் நடக்கும் ஆடுகளங்கள், போட்டி அமைப்புகள், போட்டிக்கான சூழ்நிலைகள் என இது எல்லாவற்றிலும் அவரை போல அவரது சமகாலத்தில் ஆடக்கூடிய மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு அதில் கோலி சிறந்து விளங்கினால் மட்டுமே அவர் தரமான ஆட்டக்காரர்!
அதேபோல இந்த இடத்தில் சிறந்த அனுபவம் என்பது ஒரே சேவைக்காக நீங்கள் செலவிடும் தொகையை பொறுத்து மாறுபடும்!
நகரத்தில் உள்ள சண்முக விலாஸ் என்ற ஓட்டலுக்கு செல்கிறீர்கள்! அங்கே இட்லி சட்னி சுவையாக இருக்கிறது! அதே நகரத்தில் ஒரு பெரிய நட்சத்திர விடுதிக்கு செல்கிறீர்கள்! அங்கேயும் அதே இட்லி சட்னி! ஆனால் நட்சத்திர விடுதியில் உங்களை உள்ளே நுழையும்போதே பாதுகாவலர் வணக்கம் செலுத்தி வரவேற்கிறார், உங்களது வாகனத்தை தான் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதாக கூறி சாவியை வாங்குகிறார். உள்ளே நுழைந்ததும் குளிர்ந்த ஏசிக்காற்று வரவேற்கிறது! தூய்மையான சீருடை தரித்த சிப்பந்திகள் பவ்யமாக வந்து வணங்கி பஞ்சு மெத்தை போன்ற சோபாவில் உங்களை அமரவைத்து உங்கள் அனுபவத்தை சிறப்பாக்குகிறார்கள்!
இந்த அனுபவம் உங்களுக்கு சண்முகவிலாஸ் ஓட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக அது தரமற்ற ஓட்டல் என்றாகிவிடாது! சண்முக விலாஸ் ஓட்டல் இட்லி 10 ரூபாய்! நட்சத்திர விடுதியில் 100 ரூபாய்! அதே 10 ரூபாய் அல்லது ஒன்றிரண்டு ரூபாய் கூடுதலாகவோ குறைவாகவோ வாங்கக்கூடிய ஓட்டல்களோடு ஒப்பிட்டுத்தான் சண்முகவிலாஸ் தரமான ஓட்டலா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்!
முக்கியமானது தரம் என்பது அளவீடு செய்யக்கூடியதாக (Measurable) இருக்கவேண்டும்!
ஒரு டாக்டர் தரமான டாக்டர் என்பதை எப்படி தீர்மானிப்பது? அதற்கு ஒரு அளவீடு தேவை! குறிப்பிட்ட அந்த Infrastructure வசதிக்குள் அந்த டாக்டர் எத்தனை நோயாளிகளை பார்க்கிறார், அதில் எத்தனை பேர் குணமாகிறார்கள், எத்தனை பேர் குணமான கொஞ்ச நாளிலேயே திரும்ப நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என எல்லாவற்றையும் வைத்துத்தான் அந்த டாக்டர் தரமான டாக்டர் என முடிவுக்கு வர முடியும்!
டிரைவர், வக்கீல், என்ஜினியர் என எல்லாவற்றுக்கும் இதே போலத்தான்!
சரி அடுத்தபடியாக தரத்தை உயர்த்துவது என்றால் என்ன?
இரண்டு விதங்களில் தரத்தை உயர்த்தலாம்!
1. ஏற்கெனவே வழங்கி வரும் சேவையை அதே செலவில் பயனாளிக்கு இன்னும் கூடுதலான சிறந்த அனுபவத்தைத் தருவது!
2. இருப்பதிலேயே The Best ஆன ஒன்றை போல மற்ற வற்றையும் மாறச் செய்வது!
இந்திய அணியில் விராட் கோலி சராசரியாக மேட்ச் ஒன்றுக்கு 50 ரன்கள் அடிக்கிறார்!
இந்திய அணியை தரம் உயர்த்தவேண்டும் என்றால் விராட் கோலி 50 லிருந்து 100 ரன் சராசரி வருமாறு தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும்! இது சாத்தியமா? இதற்கான சாத்தியக்கூறு மிக குறைவு! சரி வேறெப்படி இந்திய அணியை தரம் உயர்த்துவது?
ஏற்கெனவே விராட் கோலி சராசரியாக மேட்ச் ஒன்றுக்கு 50 ரன்கள் அடிக்கமுடியும் என நிரூபித்துவிட்டார்! அதற்கான Record இருக்கிறது! எனவே சராசரி 50 ரன்கள் என்பது முடியாததல்ல! அப்ப மற்ற பேட்ஸ்மேன்களையும் விராட்கோலி போல Batting average 50 ரன்கள் வருமாறு விளையாடினால் இந்திய அணியின் தரம் உயரும்! மற்ற வீரர்கள் என்ன செய்யவேண்டும்? விராட் கோலி எப்படி பயிற்சி செய்கிறார், எத்தனை மணி நேரம் பயிற்சி செய்கிறார், பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள எந்தமாதிரியான Strategy வைத்துள்ளார் என பார்த்து அதை பின்பற்றலாம்!
சரி தரத்தைப் பற்றி இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ராம்நாத் கோவிந்த் ஐயா சொல்வது என்ன?
நேற்றைய தினம் வேலூர் சிஎம்சி மருத்துவமனை நூற்றாண்டு விழாவில் பின்வருமாறு பேசியுள்ளார் நமது டாக்டர் ஐயா :
மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தலைசிறந்து விளங்குகிறது! இந்தியாவின் முதல் இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல மருத்துவ சாதனைகளை தமிழ்நாடு தான் நிகழ்த்துகிறாது!
ஆக இந்தியக்குடியரசுத்தலைவரே மருத்துவத்துறையில் The best தமிழ்நாடு தான் என்கிறார்!
அப்படியென்றால் மருத்துவத்துறையின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்?
தமிழ்நாடு போல அதிகளவில் அரசு மருத்துவக்கல்லூரிகளை நிறுவி ஆண்களுக்கு இணையாக பெண்களும் மருத்துவம் படிக்கவைக்கவேண்டும்! மாநிலத்தின் எல்லா தரப்பு, எல்லா பகுதிகளிலிருந்தும் டாக்டர்கள் வரவேண்டும்! சுருக்கமாக சொன்னால் தமிழ்நாட்டை பிற மாநிலங்கள் பின்பற்றவேண்டும்!
இதுதான் உண்மையான தரம் உயர்த்துதல்! ஆனால் பிஜேபி அரசு தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மற்ற வட இந்திய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டின் மருத்துவத் தரத்தை குறைக்கிற வேலையைத்தான் செய்கிறது!
இல்லை தமிழ்நாட்டு மருத்துவத்துறை தரமற்றது, பிஜேபி அரசு தான் அதை தரமாக மாற்ற முயல்கிறது என ஐயா ராம்நாத் கோவிந்த் தின் வார்த்தைக்கு எதிராக பேசக்கூடியவர்கள் இருந்தால் தயவுசெய்து உங்களது வாதங்களை ஆதாரத்துடன் நிரூபிக்கவும்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...