Saturday, November 17, 2018

குமாரகோயில் கல்லிடைக்குறிச்சி...

அம்பாசமுத்திரமும், கல்லிடைக்குறிச்சியும் இரட்டை நகரமாக தாமிரபரணியின் கரையில் அமைந்து பழமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
பழமைகள் பல நிறைந்து இருந்தாலும் நவீன யுகத்தில் உருவான கோயில்களும் கல்லிடைக்குறிச்சியில் உண்டு. அவ்வாறு உருவான கோயில் தான் கல்லிடைக்குறிச்சி முருகன் கோயில். இந்த சம்பவம் நடந்து சுமார் 300 ஆண்டுகள் இருக்கும். கல்லிடைக்குறிச்சியில் வைகுண்டம் பிள்ளை என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மிகப்பெரிய செல்வந்தர். மாதம் தோறும் வெள்ளிக்கிழமை வில் வண்டியில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று சுப்பிரமணிய சுவாமியை வணங்குவார். அதன் பிறகு தான் ஊருக்கு வருவார்.
ஒரு நாள் பயங்கரமான காற்றுடன் மழை பெய்தது. இதனால் வில் வண்டி பூட்ட முடியவில்லை. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பயணத்தினை துவங்க முடியவில்லை. திருச்செந்தூர் முருகனை வழிபட முடியாத பிள்ளை இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தார். ‘முருகப்பெருமானே’ ஏன் இந்த சோதனை என்று மனமுருக வேண்டி நின்றார். பிள்ளை சிறிது கண் அயர்ந்த போது கனவு தோன்றியது. அதில் முருகன் தோன்றினார். கனவில் தாமிரபரணி ஆற்றில் ஊர்காடு அருகே உள்ள திருவலம்சுழியில் என்னுடைய சிலை உள்ளது.
அதை எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கு. திருச்செந்தூர் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறினார். மறுநாள் காலை மழை நின்றதும் பிள்ளை தனது ஆட்களை கூட்டிக்கொண்டு ஊர்காடு சென்றார். அங்கு திருவலம்சுழியில் தோண்டிப்பார்க்க ஏற்பாடு செய்தார். கனவில் முருகன் கூறியது வீண் போகவில்லை. முருகப்பெருமானின் சிலை கிடைத்தது. அதை எடுத்து கொண்டு கல்லிடைக்குறிச்சியில் பிரதிஷ்டை செய்தார்கள்.
அதுதான் கல்லிடைக்குறிச்சி
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த கோயில்.

இது கட்சி வேறுபாடு இல்லை, குடும்ப பிரச்சனை .

ஸ்டாலின், கனிமொழி இடையே கருத்து வேறுபாடு. கட்சி உடையும் அபாயம் ?
கஜா புயல் ஏற்பாடுகள் பாராட்டும் படி உள்ளது என்று ஸ்டாலின் கூறிய வேளையில், அது சரியில்லை என்று கனிமொழி கூறியுள்ளார். இது தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்திவிட்டது.
இது கட்சி வேறுபாடு இல்லை, குடும்ப பிரச்சனை என்று துரைமுருகன் கூறியுள்ளார் .
கழகம் ஒரு குடும்பம் என்பதால் இது கட்சி பிரச்சனை தான் என்று பொன்முடி கூறி மேலும் குழப்பிவிட்டார்.
தொலைகாட்சியில் இன்று விவாதத்தில் இதன் பின்னனியில் மோடி உள்ளாரா என்று அலசப்பட்டது. பிரசன்னா, சுந்தரவள்ளி, மயில்சாமி மற்றும் சுமந்த் சி ராமன் கலந்துகொண்டு மோடியே காரணம் என்று தீர்ப்பு வழங்கினர்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் சென்னை வந்து தங்கள் அணியில் இணையுமாறு வற்புறுத்த கனிமொழியிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர், ஸ்டாலினை விட கனிமொழி சிறந்தவர் என்று நாயுடு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருந்ததினால் மனித இழப்புக்கள் குறைந்தது .

கஜா புயல் நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை மிகவும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புயல் எச்சரிக்கையை அலக்ஷியப்படுத்தியதால் ஒருசில உரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருந்ததினால் மனித இழப்புக்கள் குறைந்தது என்பது மிகவும் உண்மை. முரண்பாடான கருத்துக்கள் மற்ற கட்சியினரால் பெரிதுபடுத்தப்பட்டாலும், முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களது திறமையான நடவடிக்கைகளால் ஒவ்வொரு விஷயத்திலும் நற்பெயர் பெற்று வருகின்றனர். இருவரும் கட்சிக்குள்ளேயும், ஆட்சிக்குள்ளேயும் ஏராளமான எதிர்ப்புக்களையும்,சோதனைகளையும் சந்தித்த போதும் எந்த ஒரு விஷயத்திலும் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றனர். ஒருசில அமைச்சர்கள் பேட்டியின் போது மாறுப்பட்ட விதத்தில் பேசினாலும் செயல்பாடுகளில் பம்பரமாக செயல்படுகின்றனர். இயற்கையின் சீற்றத்தை எந்த அரசாலும் தடுக்கமுடியாது ஆனால் கட்டுப்படுத்த முடியும் குறிப்பாக உயிர்சேதத்தை தடுக்க முடியும் என்று நிரூபித்த முதல்வர் துணை முதல்வர் இருவருக்கும் மனம் திறந்த பாராட்டுக்கள்.

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு...

இன்று பெரும்பாலானவர்களின் முக்கியமான ஒரு பிரச்சனை எதுவென்றால் மூட்டு வலிதான். அதுவும் நாற்பது வயது வந்துவிட்டது என்றால் சொல்லவே வேண்டாம். சர்க்கரை, பிரஸர், மூட்டுவலி என வரிசையாக வந்துவிடும். நமது வருமானத்தின் ஒரு பகுதியை டாக்டர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை உருவாகி விடும். இது தவிர்க்க இயலாத ஒரு சூழலை உருவாக்கி விட்டது.
மருத்துவர்களை நம்பி போனால் ஆளுக்கு ஒரு ஆபரேஷன் செய்ய சொல்கிறார்கள். சரி ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடுமா என்று கேட்டால் அதற்கும் மருத்துவர்களிடம் சரியான பதில் இல்லை.
இப்படி பெருகி போன மூட்டு வலி நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு இல்லையா என்று கேட்டால்...
நிச்சயம் இருக்கிறது என்று பதில் இருக்கிறது.
இது குறித்த விழிப்புணர்வும் அது குறித்த தகவல் பலருக்கும் சென்று சேரவில்லை.
என்ன செய்வது இப்படி மூட்டு முழங்கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, எலும்பு தேய்மானம் ,ஜவ்வு விலகல், ஜவ்வு தேய்மானம், விபத்தினால் ஏற்பட்ட எலும்பு பிரச்சனைகள் என அடுக்கி கொண்டே போகும் அணைத்து எலும்பு சம்பந்தமான நோய்களுக்கும் ஒரே தீர்வு வாத வள்ளி கிழங்கு தான்.இது என்ன வாத வள்ளி கிழங்கு? இத்தனை நாள் இது பற்றி எந்த ஒரு வைத்தியரும் சொல்லவில்லையே?
காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
உடல் புத்துணர்ச்சி என்பது மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை அறிவோம் இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது
உடல்,மனம்,புத்தி புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வு வாத வள்ளி கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றன ....
ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால் நீண்ட நேரம் தாம்பத்தியம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.தேவையெனில் *******************************************
தேவைக்கு அழைக்க 98430 93824 *******************************************
எப்படி சாப்பிடுவது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம்.இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு அழைக்கவும்....
98430 93824
மற்றவர்களுக்கும் இதனை பகிருங்கள்...
Permanent remedy for joint pain ...
One of the most important problems for most people today is the joint pain. If it is forty years old, do not say it. Sugar, Praser, and Root. Doctors will be forced to build a portion of our income. This has created an inexorable environment.
If you trust the doctors, they tell him to perform a surgery. If you say OK if you do it right, doctors do not have the right answer.
Asked if there is a permanent solution to these increased arthritis patients ...
There is an answer that is sure.
There is no awareness of this and many of the information has not been reached.
What is to do is the same solution for knee pain, hip pain, heel pain, bone deterioration, jaw dropping, jaw's wear and bone problems that are caused by accidental bone problems. What is the root of this tapioca? Which doctor did not say so much about this day?
Kilangi Natar, Pogar, Vallalar etc. It is known as Koolali and Vatti Valiyalai. These days 48 days, if you get rid of 4448 cases of biting and bruising, the body will get damaged by the true saints'
Vallalar mentions it as the most important herbal remedy in which the mother milk (also contains lauric acid) is immune to 4448 and does not know whether it is good or not. The rheumatoid arthritis will certainly be fine especially for the pain of the menstrual periods. Many people in my friendship circle have a lot of calorie deficiencies for alopecia pills. You will see the progress in your body. It is especially important for the child to lose weight and the lack of limbs is a great lack of limp and for those who seek English medicine Excellent food supplements ....
Body Rejuvenation is the most abundant nutrients available to the brain and the oxygen is known to me in this experience
The physical, mental and intellectual rejuvenation is due to the micronutrients in the tapioca tuber that occurs when the body's micronutrients get the nutrients.
For those who want to get a healthy baby, take these tubers for three months and then try for a baby. It is a very good result and the mineral salts are silicon gold. Magnesium iron calcium is densely converted so it is possible to stay longer for long periods of pregnancy. And the intellect is very good. 

நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும். வாழ்க்கையில்.

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.
ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.
தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.
அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.
நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.
அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.
என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.
அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.
இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.
*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து
உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
*சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங்* ஆனார்.*
வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது
பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?
*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
வாழ்க்கையில்
*பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்*
*யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்*
*யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு*
*யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு*
*சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்*
இறுதியாக இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:
*உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்*
*உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்*
*உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்*
*ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்*
*எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்*
*இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்*
💖

சந்திரனின் சாபம் போக்கிய சோமவார விரதம்.

19–11–2018 கார்த்திகை சோமவாரம்
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். சிவபெருமானை நினைத்து செய்யப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும் விரத முறையாகும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது.
இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோம வாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும். இல்லையெனில் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.
சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில்தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள்.
பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.
விரதம் இருக்கும் முறை
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும். கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.

மொய் வைக்கும்போது ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்?

*கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது மொய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.* மொய் செய்யும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் செய்வது ஏன்?
ஒவ்வொரு வழக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. இப்படி *ஒரு ரூபாய் சேர்த்து மொய் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு.* அதை பற்றி தெரிந்து கொள்வோம்...
அந்தக்காலத்தில் *பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வந்தன.*
அதுவும் சும்மா இல்லை ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை!! (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களைக் குறிப்பது. எனவேதான் இது " தர்மம் " தவறாது சம்பாதித்த " நாணயம் " இதை நீங்களும் தர்மம் வழுவாமல் செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும்வகையில் இந்த மொய்ப்பணமும் அந்தக் காலத்தில் மதிப்புமிக்க உலோக நாணயங்களினால் வழங்கப்பட்டு வந்தது.
அதனால், *மொய் செய்பவருக்கும் தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு இருந்தது.* ஆனால் நோட்டுக்கள் என்கிற ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து நாணயத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. *நோட்டுத்தாள்கள் உலோக நாணயங்களை போல் உண்மை மதிப்பு கொண்டவை அல்ல.*
எனவே ரூபாய் தாளை மொய்ப்பணமாக கொடுப்பவர் மனதில் தான் *ஓர் உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை* என்ற மனக்குறை இருந்தது. எனவே மொய்ப்பணமாக வைக்கும் ரூபாய் தாளுடன் மெய்யான மதிப்பு கொண்ட *வெள்ளி ஒரு ரூபாய் நாணயத்தையும்* சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி மனக்குறையை போக்கிக் கொண்டனர்.
*அந்தக் காலத்தில் மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. அவையே பணமாக புழக்கத்தில் இருந்து வந்தன.* எனவே தான் நாம் மொய்ப்பணம் வைக்கும் பழக்கத்தில் பதினொன்று, ஐம்பத்தியொன்று, நூற்றியொன்று, ஐந்நூற்றியொன்று, ஆயிரத்தியொன்று என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது.
சுபகாரியங்களில் மொய் செய்வதும் ஒரு நல்ல பழக்கம் தான். அதனால் தான் முன்னோர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
No automatic alt text available.

விதை நைனா இராம்சாமி போட்டது.

சவுந்தரயாவுக்கும் விசாகனுக்கும் கல்யாணம்
சவுந்தரயா யாரு அஸ்வினோட முதல் பொண்டாட்டி
விசாகன் யாருன்னா கனிகாவோட முதல் புருசன்
கனிகா யாருமில்லை மூனு கல்யாணம் பண்ணுன திமுக கருணாநிதி அமைச்சரவைல இருந்த அமைச்சர் கேபி கந்தசாமி அவரோட இரண்டாவது மனைவி மல்லிகா பேத்தி
மல்லிகா யாரு மூனு கல்யாணம் பண்ணுன ராதிகாவோட கணவராகிய இரண்டு கல்யாணம் பண்ணுன சரத்குமாரோட அக்கா
ராதிகா யாரு மூனு கல்யாணம் பண்ணுன எம்ஆர் ராதாவோட மகள்
எம்ஆர் ராதா யாருன்னா
76 வயசுல 26 ஐ கல்யாணம் பண்ணுன நைனா ராமசாமியோட சீடர்
யாரும் யாரையும் எத்தனை தடவையும் கல்யாணம் பண்ணிக்கோ ஆனா விதை நைனா இராம்சாமி போட்டது
நைனா இராம்சாமி மட்டும் இல்லைன்னா💪

சபரிமலை புனிதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதானே.

சபரிமலை விஷயத்தில் எல்லா வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர போகக்கூடிய பெண்கள் சபரிமலை விரதத்தை கடைபிடிக்கத் தேவையில்லை என்றோ கடைபிடிக்கக்கூடிய சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையில்லை என்றோ கூறவில்லை. அவைகளை மீற வேண்டுமென்றோ கூட சொல்லவில்லை. இதை பெண்கள் கவனத்தில் கொள்ளவேயில்லை. காரணம் அது அவர்களுக்குத் தேவையில்லை.
இப்போது சபரிமலை கோயிலுக்கு வர துடிக்கும் பெண்கள் இதை செய்திருக்கிறீர்களா?
முதலில் யாராவது ஒரு குருசாமியைத் தேர்ந்தெடுத்து ஒரு கோயிலில் சென்று மாலை அணிவித்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை. மாலை குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
கடைசிநாள் குருசாமியின் மூலம் இருமுடி கட்டிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும்.
இருமுடியோடு மலை ஏறி பல கி.மீ நடக்க வேண்டும்.
கன்னி (முதல்முறையாக மாலை போட்டு விரதமிருப்பவர்) சாமியாக இருந்தால் வீட்டில் பூஜை போடவேண்டும்.
இது குறைந்தபட்ச சடங்குகள், சம்பிரதாயங்கள்.
உச்சநீதிமன்றம் தீர்ப்புவந்தவுடன் சபரிமலைக்கு வர முயற்சி செய்த பெண்கள் இதில் எதையாவது செய்திருக்கிறார்கள் என்று இவர்களுக்கு வக்காலத்து வாங்கிய தலைவர்கள் நிரூபிக்க முடியுமா?
அப்படியானால் வர துடிக்கும் பெண்களின் நோக்கம் என்ன? அதை ஆதரிக்கும் தலைவர்களின், கட்சிகளின் நோக்கம் என்ன? சபரிமலை புனிதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதானே.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. அதனால் 10 வயது முதல் 50வரையுள்ள பெண்கள் வரக்கூடாது என்பதை நம்பிக்கையுள்ள பெண்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அதை காப்பாற்றியும் வருகின்றனர்.
ஆனால் **ரிகள் எப்போதும் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு இது புரிவதும் இல்லை. காரணம் அவர்கள் **ரிகளாக இருப்பதால்.....

Friday, November 16, 2018

டெல்டா மாவட்டம் தானே ஆதலால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்த கஜா புயல் சென்னையை தாக்கி இருந்தால்
இன்னேரம் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பகிர்ந்து இருப்பார்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நிவாரணம் பொருட்கள் சென்று இருக்கும்
அனைத்து மீடியாவும் 24 மணி நேரமும் பாதித்த பகுதி முழுவதையும் திரும்ப திரும்ப காட்டி உலகம் முழுவதும் பரவி இருக்கும்
நடிகர் நடிகை எல்லாம் பண உதவி செய்து இருப்பார்கள் சில நடிகர்கள் களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்
மேலே சொன்ன அனைத்தும் சென்னையில் கஜா புயல் தாக்கி இருந்தால் நடந்து இருக்கும்
கஜா புயல் தாக்கியது வேதரண்யம் நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டம் தானே ஆதலால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்
சென்னைக்கு ஒன்னுனா தமிழ்நாட்டுல இருக்க எல்லா மாவட்டத்து சேர்ந்தவங்களும் உதவராங்க ஆனால் இதே மற்ற மாவட்டதுக்கு ஒன்னுனா உதவ கூட தேவை இல்லை சமூக வலைதளங்களில் அந்த மாவட்டத்தின் பாதிப்புகளை பேச கூட மாட்றீங்க யாரும்

ஏன் இந்த பாகுபாடு?
Image may contain: outdoor
Image may contain: outdoorImage may contain: 1 person, smiling, outdoor and nature

உண்மையான விசயம்..

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"
ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.
இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,
இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,
இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல..
முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்..., ஏன் சொன்னார்கள் தெரியுமா...?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்...,
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால்., அவருக்கு பூ., காய்., இலை., பிசின் என்று அனைத்தும் பயன்தரக்கூடியவை., முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்யத்தோடும் வைத்துக் கொள்ள கூடிய மூலிகை., 
இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்...,
இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்...,
ஆகவே., நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா...?

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?

என்னவெல்லாமோ மருந்து
சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று
ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறையவில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை!
என்று வருத்தப்படுகிறீர்களா?
கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம்
(ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக்
கொள்ளுங்கள்.
இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி,
கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு
ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள்.
200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக்
கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி
நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல்
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல்
தொல்லை இல்லாமல் தூங்கலாம்.
அலுவலகத்தில் இருமிக்கொண்டே இருக்கிறேன்.
பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது
என்ன செய்வது? என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த
திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக்
கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல்
வராது.
——————————-
குறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் – இ
வையெல்லாம் எங்கே கிடைக்கும் எனத் தயங்க வேண்டாம்.
நாட்டு மருந்துக் கடைகள் எல்லாவற்றிலும் இவை கிடைக்கும்.
வெண்புள்ளிகளுக்கு ஆயுர்வேத முறையில் உதவும் நான்கு உணவுகள்.
1. தினமும் முப்பது கிராம் கொண்டைகடலையை இரவில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் ஊறவைத்து காலையில் ஊறவைத்த தண்ணீரையும் கொண்டைகடலையையும் நன்றாக மென்று வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
இயலாதவர்கள் வேறு எந்த விதத்திலாவது வேகவைத்தோ அல்லது மற்றமுறையிலோ தவறாமல் சாப்பிடுங்கள்.
2. தினமும் ஊறவைத்த 7, 8 பாதாம் கொட்டைகள்.
3. தினமும் சுரைக்காய் ஜீஸ் அல்லது உணவாக.
4. செம்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணிநேரம் ஊற்றி வைத்த தண்ணீரை குடியுங்கள்.
புளிப்பு, சர்க்கரை அறவே நீக்க வேண்டும்.

அதிகம் அசைவம் சாப்பிடுபவரா நீங்கள்?ஒரு நிமிடம் ஒதுக்கி கண்டிப்பா இதையும் பாருங்க.

சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அசைவ உணவுகள் சாப்பிடுவதன் மூலம் கலோரி, புரதம் போன்ற சத்துகள் கிடைத்தாலும் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.
அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் உள்ள க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.
சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.
அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை.
அசைவ உணவுகளில் புரதம் இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை, இதனால் சிறுநீரக பாதிப்பு, கால்சியம் குறைபாடு, ஜீரண சக்தி குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.
உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும்.
எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.
சில ஆண்கள் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.
மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம் பாதிக்கப்படும். விளைவு, அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை என அன்றாட செயல்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

அருமை. மிக சிறப்பான பணி ........

உறங்காத உதயகுமார்.. களத்தில் நின்ற விஜயபாஸ்கர்.. கஜாவை சிறப்பாக எதிர்கொண்ட தமிழக அரசு!
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.
என்னவெல்லாம் செய்தது
இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. தமிழகம் முழுக்க ஐஏஎஸ் அதிகாரிங்கள் தாயர் நிலையில் இருக்க வைக்கப்பட்டனர். பேரிடர் மீட்பு படை களமிறங்கியது. அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக களமிறங்கினார்கள்.
500க்கு அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டது.
படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
எரிபொருள் நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உணவு பொருட்கள் தயாராகி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுக்க மருத்துவ குழுக்கள் சென்றது.
தப்பித்த பேரிடர்
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் மிகப்பெரிய பேரிடரில் இருந்து தப்பித்து இருக்கிறது. பல இடங்களில் இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பலர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைப்பது எல்லாம் சென்னை வெள்ளத்தின் போது கூட கடைசி நாட்களில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
இந்த மீட்பு பணிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் அதிகம் பாராட்ட வேண்டியது வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமாரைத்தான். நேற்று காலை சென்னையில் சேப்பாக்கம் கட்டுப்பட்டு அறைக்கு வந்தவர் இன்று அதிகாலைதான் கிளம்பி சென்றார். அதிகாலை சென்றவர், மீண்டும் 2 மணி நேரத்தில் வந்துவிட்டார். அந்த அளவிற்கு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டார்.
உறங்காத விஜயபாஸ்கர்
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , நேற்று இரவு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவைகளை முடுக்கிவிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கி நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையும் அமைத்து இருந்தார். அதேபோல் இன்னும் சில அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
மக்கள் பாராட்டு
தமிழக அரசின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு மக்கள் பெரிய அளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த புயலை குறித்து பயந்து கொண்டு இருந்தவர்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்த எடப்பாடி அரசா இவ்வளவு துரிதமாக பணிகளை செய்தது என்று எல்லோரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
பெரிய பாடம்
தமிழக அரசு இதற்கு முன்பு ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து பாடம் கற்று இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். வர்தா புயலின் போது தமிழக அரசு சரியாக செயலாற்றவில்லை. சென்னை வெள்ளத்தின் போதும் அரசு சரியாக செயலாற்றவில்லை. ஆனால் அதில் கற்ற பாடங்களை வைத்து இந்த கஜாவை சமாளித்து இருக்கிறார்கள்.
நல்ல விஷயங்கள் நடந்தால் பாராட்டலாம்.

கார்த்திகை_மாதம்!!

🌟 கார்த்திகை மாதம் என்றாலே விஷேசம் தான். அதுவும் கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு வழிபாடு மிகவும் சிறப்பானது.
🌟 திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளன. திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.
கார்த்திகை மாதம் :
🌟 கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த பலன் தரக்கூடியது.
🌟 தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற உகந்த நேரம் :
🌟 தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் ஆகும்.
🌟 காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் நன்மையைத் தரும்.
🌟 மாலையில் 4.30-6.00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
கார்த்திகை மாத சிறப்பு :
🌟 அன்னை பார்வதிதேவி கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடதுபாகத்தைப் பெற்றாள்.
🌟 கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைபிடித்தால், நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவசக்தியின் அருள் கிடைக்கும்.

ஓம் சண்முகா கணபதியே போற்றி.

வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது.
அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர்.
ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.
சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் ‘சூரிய ஜெயந்தி’ சொல்லும் தாத்பரியமும் அதுதான். அந்த நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அந்த நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதியாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.
பொதுவாக எருக்கன் செடிகளில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
சரியான முறைகளில் தயாரிக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள், பிள்ளையார்பட்டி மற்றும் ஆடுதுறை சூரியனார் கோவில் ஆகிய இடங்களில் கிடைப்பதாக செய்தி உண்டு. அவ்வாறு வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.
பின்னர் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், அரைத்த மஞ்சள் கலவையை அதன் மேலாக பூசி வைக்க வேண்டும். அதற்கு அடுத்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், சந்தன கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகுதான் நன்மை செய்யும் கதிர் வீச்சுகள் அதிலிருந்து வெளிப்படும். பின்னர் அவரவருக்கு இஷ்டப்பட்ட பூஜைகளை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் விலகி விடுவதாக ஐதீகம்.
இறைவன் உறையும் திருமேனிகளான சிலைகளுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும் மலர்கள் பற்றி, ஆகமங்களும், ‘புஷ்ப விதி’ என்ற நூலும் பல விதிகளை குறிப்பிடுகின்றன. தோஷங் களற்ற, பூச்சி அரிக்காத, பறவை எச்சம் படாமல், விடியற்காலை நேரத்தில் பறிக்கப்பட்ட மலர்களால் இறைவனுக்கு பூஜை செய்வது விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. ‘நன் மாமலர்’ என்று ஞான சம்பந்தர் குறிப்பிடும் அத்தகைய அஷ்ட புஷ்பங்களில் ஒன்றாக வெள்ளெருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவை அஷ்ட புஷ்பங்கள் ஆகும். சிவபெருமானின் ஜடாமுடியில் வெள்ளெருக்கு அலங்கரிப்பதை, ‘வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை..’ என்று அப்பர் குறிப்பிடுவார். சிறு செடியாக இருந்து, குறுவகை மரமாக வளரும் தன்மை பெற்றது வெள்ளெருக்கு. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
சென்னைக்கு பக்கத்தில் ஓரகடம் என்னும் ஊரில், வெள்ளெருக்கு விநாயகர் கோவில் இருக்கிறது. பொதுவாக கோவில் களில் உள்ள நந்தவனங்களில் வெள்ளெருக்கன் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. பூமிக்கு அடியில் அரிதான பொருட்கள் அல்லது புதையல் இருக்கும் இடத்தில் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுவது சுவாரசியமான செய்தியாகும். ‘வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே..’ என்ற பாடல் வரிகள் சங்க காலத்தில் பிர பலம்.
பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்குச் செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது.
அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படாது.
வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்தலாம். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாக உள்ளது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
விநாயகர் வழிபாட்டு முறைகள்
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்
பிள்ளையார் பற்றி அந்தக்காலத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன் பேத்திகளுக்கு பாட்டுகளின் மூலம் அவரது பெருமையை எடுத்து விளக்குவார்கள். கேட்பதற்கு இவை
நாட்டுப்புறப்பாடல்கள் போல இனிமையாக இருக்கும்.
குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
இந்தப்பாடல்களை முதியவர்கள் தங்கள் பொக்கை வாயால் பாடும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பக்தியை உணர்த்துவது மிகவும் எளிமையானது என்பதால் இந்த பாடல்கள் அந்தகாலத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்பட்டன.
விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து
மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உ<லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.
கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்
திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
சதுர்த்தி வழிபாடு
நாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.
* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும்,
ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.
* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.
* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.
* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.
* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.
* வேதங் களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.
* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.
* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.
விநாயகருக்கு உகந்த கிழமை
இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர். கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.
விநாயகருக்குரிய 11 விரதங்கள்
1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகர் துதி மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம் முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
வழிபாட்டுக்குரிய விநாயகர் வடிவங்கள்
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
ஐந்து சுவாமி பூஜை
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
நன்றி.

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்கும் வழிகள்....

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையல் அறையில் பயன்படுத்துப்படும் பேக்கிங் சோடாவினை கொசுக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு கொசுக்கடி பாதித்த பகுதிகளில் தடவிடுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம். பேக்கிங் சோடா பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் சருமம் சென்சிடிவ்வானதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.
கொசுக்கடிக்கு டீ ட்ரீ ஆயில் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கும். கொசுக்கடி பாதிப்புகளையும் அதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், அரிப்பு போன்றவற்றை குறைக்க டீ ட்ரீ ஆயில் பயன்படுகிறது. இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயிலை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவலாம்.
குளிர்ச்சியான அதே சமயத்தில் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கொசுக்கடியினால் சருமம் சிவந்திருந்தாலோ, அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ கற்றாழை ஜெல் அதனை தீர்க்கும். கற்றாழை செடியின் இலையை பாதியாக நறுக்கி அதனை சருமத்தில் தேய்க்கலாம். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கடைகளில் தனியாக கற்றாழை ஜெல் கிடைக்கிறது. ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் என்பதால் இயற்கையாக கிடைத்திடும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது தான் நல்லது.
எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான, ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.
பெரும்பாலானோர் சருமப் பாதுகாப்பிற்கு அதிகம் பயன்படுத்துவது சந்தனம். கொசுக்கடியைத் தவிர வேறு எந்த பூச்சி பாதிப்பிகளினால் சருமம் பாதிக்கப்பட்டாலும் அதனை தவிர்க்க சந்தனம் பயன்படுகிறது. சந்தனத்தை தண்ணீரில் குழைத்து கொசுக்கடி ஏற்ப்பட்டிருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவி விடலாம்.
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதில் ஆண்ட்டி அலர்ஜி துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் அலர்ஜி பாதிப்புகள் மிகவும் குறைந்திடும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...