Sunday, November 11, 2018

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல.

பண்ணைப்புரம் சின்னத்தாயம்மாளுக்குப் பிறந்த குழந்தைகளில், ஓர் #அதிசயக்_குழந்தையை மட்டும் தனக்கெனத் தேர்ந்தெடுத்து, சில அற்புதங்களை இசைத்துறையில் நிகழ்த்துவதற்காக, #இசைத்_தாய் தத்தெடுத்துக் கொண்டார்கள்போலும்.
இல்லையென்றால் அந்த இசைத்தாய்க்கு கீழ்க்கண்ட அற்புத நிகழ்வெல்லாம் நிகழ்ந்திருக்க சாத்தியமாகியிருக்குமா.
1). அந்தக் குழந்தை மாபெரும் '#இசைமேதை_இளையராஜா'வாக உருவானதும்.
2). அவர், தன் முதல் படப் பாடல்கள் மூலமே உலகின் மூலைமுடுக்குகளிலுள்ள கிராமம் மற்றும் நகரம் என்று வேறுபாடு இல்லாமல் தமிழறிந்த அனைத்துவகை மக்களின் கோடிக்கணக்கான இதயங்களை தன் இசையால் ஈர்த்ததுவும்.
3). இதன் காரணமாக இப்பூமிவாழ் இசை விரும்பும் மக்களின் மனநலன்கள் காக்கப்பட்டதுடன் பெரும்பான்மையானவர்களின் வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் ஏற்பட்டதும்.
4). இதன் விளைவாக அந்த இசைமேதைக்கு கோடிக்கணக்கில் 'ரசிகர்கள்' உலகமெங்கும் உருவாகி குவிந்துபோனதும்.
5). அது மட்டுமின்றி மிகக் குறுகிய காலக்கட்டத்திலேயே ஆயிரத்திற்கு மேலான படங்களுக்கும்,
ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கும் இசையமைத்து சாதனைப் படைத்ததும்.
6). வருடத்திற்கு ஐம்பதுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்து வெளியிடச் செய்தத்தும்.
7). அதோடு சேர்த்து,
ஒரு பாட்டுக்கு மெட்டமைப்பதாக இருந்தாலும் சரி,
ஒரு முழுப் படத்திற்கு பின்னணியிசை (ரீரெக்கார்டிங்) அமைப்பதாக இருந்தாலும் சரி,
எந்த வாத்தியக் கருவிகளின் உதவியும் இன்றி வெறுமனே ஒரு காகிதமும், பேனாவும் கொண்டு தனக்குள் தோன்றுகின்ற இசையை அப்படியே இசைக்குறிப்புகளாக, ஒவ்வொரு இசைக்கலைஞர்களுக்குமான தனித்தனிக் குறிப்புகளாக, அதி வேகமாக எழுதுகின்ற ஆற்றல் படைத்ததும்.
- என்று இன்னும் நிறைய விந்தைகள் இசைத்துறையில் நடந்து முடிந்ததற்கு,
அந்த இசைத்தாய்க்கு 'இளையராஜா' என்ற ஓர் இசைமேதை மட்டும் இருந்திராவிட்டால், எவ்வாறு சாத்தியமாகியிருக்கும்.
இது நடந்திருக்கும் என்றே நம்ப விரும்புகின்றோம், இளையராஜா ரசிகர்கள், நாங்கள்.
இப்படிக்கு,
இளையராஜா ரசிகன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...