Friday, November 16, 2018

கார்த்திகை_மாதம்!!

🌟 கார்த்திகை மாதம் என்றாலே விஷேசம் தான். அதுவும் கார்த்திகை மாதத்தில் திருவிளக்கு வழிபாடு மிகவும் சிறப்பானது.
🌟 திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளன. திருவிளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.
கார்த்திகை மாதம் :
🌟 கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த பலன் தரக்கூடியது.
🌟 தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்ற உகந்த நேரம் :
🌟 தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரம் அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் ஆகும்.
🌟 காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் நன்மையைத் தரும்.
🌟 மாலையில் 4.30-6.00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
கார்த்திகை மாத சிறப்பு :
🌟 அன்னை பார்வதிதேவி கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடதுபாகத்தைப் பெற்றாள்.
🌟 கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைபிடித்தால், நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவசக்தியின் அருள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...