Tuesday, November 6, 2018

தனிமையை அனுபவிப்பர்களுக்கு தான் அந்த பழைய நானைவுகள் அற்புதமான இருக்கும்.

வெகுநாட்களுக்கு பின், இன்று சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகும், புதிதாக வெளிவந்த 96 படம் பார்த்தேன். இந்த பதிவைப் பதிவிடும் இந்நேரம் படம் நிறைவுபெறவில்லை. இருந்தாலும், என் பழைய நினைவுகள் எனக்குள் ஓடிவந்தன. கண்ணோரம் கண்ணீர் துளிகள் வழிந்தன. ஏதோ ஒரு இனம் புரியாத கவலை கலந்த சந்தோஷம். நான் தனியாக இருப்பதால் தான், இந்த உணர்வோ என்று நினைத்தேன். இருந்தாலும் என்னையறியாமல் சிறிது நேரம் அழுதேன். ஏனென்று புரியவில்லை. இப்போது மனது அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. பழைய நினைவுகளே, நம்மை நடத்திச் செல்வதை உணர்கிறேன். இன்பமான நாட்கள். இனிமேல் வரமுடியாத நாட்கள். நிறைவான உணர்வுகளை எனக்குள் ஏற்படுத்திய படம். என் பழைய நட்புகளை நினைக்கிறேன். எவ்வளவு இனிமையாகக கடந்து வந்திருக்கிறேன். நான் என் பழைய நண்பர்களை சந்தித்தது போல் உணர்கிறேன். என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வுகளுக்கு இன்று சிறிது நேரம் உயிர் வந்தது. என் மனைவியை இழந்த போது வெளிவராத கண்ணீர், இன்று அதுவாகவே என்னை மீறி வெளிவந்தது. என்னுள்ளும் வெளியே சொல்லமுடியாத, மனதிற்கு இதமான பல நினைவுகள் ஒளிந்திருப்பதை அறிய முடிந்தது. எனக்குள்ளும் ஒருவன் வாழ்வது எனக்கு தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. கொஞ்சமாக மனது வலித்தாலும் மிகவும் இதமாக இருக்கிறது. என் வாழ்க்கை முழுவதுமே, கரடுமுரடான பாதையாக இருந்தது என்று நினைத்திருந்த எனக்கு, பல இன்பமான நினைவுகளை இந்த தீபாவளி திருநாளின் தீப ஒளி எனக்குள் அள்ளிக் கொடுத்தது. வெளிச்சம் தந்தது. எனக்கு இன்று ஏற்பட்ட உணர்வு, என் மனதில் பதிந்த உணர்வாக, நிலைத்திருக்கும் என்பது மட்டும் உண்மை. ஒரு நல்ல தீபாவளி எனக்கு. என் சந்தோஷத்தை என் முகநூல்தோழர்களிடம் பகிர்ந்து இரட்டிப்பாக்கிறேன். இதுவும் கடந்து போகும். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...