Tuesday, November 6, 2018

கேதார_கௌரீ_விரதம்.

தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம். சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைபிடிக்கும் பழக்கமும் உள்ளது. இந்த விரதத்தை மேற்கொண்டு பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய், என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு அருளியதுதான் இந்த கேதார கௌரீ விரதம்.
ஐப்பசி மாத (தீபாவளி) அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தைத் துவங்கி சரியாக 21வது நாளாக அமாவாசை அன்று முடிக்க வேண்டும்.
பெரும்பாலான பெண்களுக்கு நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் இறுதி நாளான தீபாவளி - அமாவாசை நாளன்று 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கொம்பு, சந்தனவில்லை,விபூதி உருண்டை, அதிரசம், வடை ஆகியவற்றை நோன்புசட்டியில் வைத்து நோன்பு எடுக்கும் பழக்கம் உருவாயிற்று.
ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு மேற்கொள்ள ஆலயத்திற்குச் செல்வதைக் காணலாம். கௌரீ சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்த நாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார கௌரீ விரதத்தின் நோக்கம். இந்த விரதத்தினை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை நிச்சயம் கூடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...