Tuesday, November 13, 2018

இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்"


#எம்ஜிஆர் அவர்களின் கோபத்தில் உருவான பாடல்தான் 'தங்கத்தில் முகமெடுத்து.. சந்தனத்தில் உடலெடுத்து' பாடல்..
"ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது 'மீனவ நண்பன்' படத்திற்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
என்னைப் பார்த்ததும் தலைவர்...
"இந்தப் படத்தில் நீ எழுதிய பாடல் எது?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
'நான் எழுதவில்லை' என்றேன்.
'ஏன்?' என்றார்.
'என்னை யாரும் அழைக்கவில்லை' என்றேன்.
அப்போது அங்கே வந்த தயாரிப்பு மேலாளரை பார்த்து..
"முத்துலிங்கத்தை வைத்துப் பாடல் எழுதச் சொன்னேனே! ஏன் அதன்படி செய்யவில்லை?" என்று கோபத்துடன் கேட்டார்.
"நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை" என்றார்.
"இப்போது வந்துவிட்டார் அல்லவா? இவரை வைத்து ஒரு பாடல் எழுதி வாருங்கள்" என்றார்.
"படம் முடிந்து விட்டதே" என்றார் அவர்.
உடனே, இயக்குனர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச்சொன்னார். அவர்கள் வந்ததும்..
"இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு கனவுக்காட்சி பாடலை எழுதுங்கள். அதற்குப்பிறகு படப்பிடிப்பு நடத்தலாம்" என்றார்.
அவர்களும் புரொடக்ஷன் மானேஜர் சொன்னது மாதிரி
"அதற்கான சிட்டுவேஷன் (சம்பவம்) இல்லையே" என்றார்கள்.
"ட்ரீம் சீன் பாடலுக்கு என்ன சிட்டுவேஷன் வேண்டும்? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பது போல் வருவதுதானே ட்ரீம்சாங்? அதற்குத் தனியாக என்ன சிட்டுவேஷன்? பாடல் எழுதுங்கள்; அதன் பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்" என்று கோபமாக சொல்லி விட்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.
அதன் பிறகு நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.
'தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ'
என்ற பாடல்தான் அது.
இந்தப் படத்திற்குப் பாடல்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று தெரிந்திருந்தும் என்னை வைத்துப் பாடல் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஏன் கூறினார்? தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்"
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...