Friday, November 9, 2018

கோர்ட்டின் நடவடிக்கைகள் வழி பாட்டிற்கும், தெய்வ சான்னித்தியத்திற்கும் இடையூரில்லாமல் அமையட்டும்.

ஸ்ரீ சபரிமலையின் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 28 வந்தது. அன்று முதல் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி ஏனையத் தென்னிந்திய மாவட்டங்களில் இந்துக்கள், குறிப்பாக இந்து சமயத்தைச் சேர்ந்த தாய்மார் தங்கள் எதிர்ப்பைப் பரவலாகத் தெரிவித்தும், தெருவில் இறங்கியும் போராடி வருகின்றனர்.
கம்னாட்டிஸ்ட் கயவாளிகள், அரசு இயந்திரத்தைக் கட்டவிழ்த்து விட்டு 3000திற்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்களைக் கைது செய்தனர். ஐந்து நக்கசலைட் தேசத் துரோகிகளைக் கைது செய்து போது அ:.தை அவசர வழக்காக எடுத்த நீதிமன்றம்
சபரிமலை மறு விசாரணை வழக்குகளில் அத்தகைய அவசரத்தைக் காட்டவில்லை.
ஸ்ரீ சபரிமலைத் திருக்கோவிலுக்கு 22 வருடங்கள் மேல் (அவனருளால்) சென்று வந்த அடியேன் இக்கோயில் விஷயத்தில் பக்தர்கள் நலனிற்காகவும், கோயில் ஆச்சாரத்திற்காகவும் என்ன செய்வது என்று ஆலோசித்து, Indic Collective Trust நண்பர்களுடன் கொச்சின் சென்றேன்.
Indic Collective டிரஸ்ட், அருமை நண்பர் Sai Deepak J சாய் தீபக்கை முக்கிய வாழக்கறிஞராகக் கொண்டு - பர்மா அகதிகள் விஷயத்திலும், தீபாவளிப் பட்டாசு விஷயத்திலும், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் விஷயத்திலும், பூரி ஸ்ரீ ஜெகநாதர் கோயில் விஷயத்திலும் - உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் நடத்தி வருகிறது. இறையருளால் இந்தத் டிரஸ்டிற்குத் தலைவனாக இருப்பதைப் பெருமைக்குரிய விஷயமாக எண்ணுகிறேன்.
கொச்சின் அருகில் உள்ளத் திருப்புனித்துரா ஸ்ரீ பூர்ணத்ரயேசர் பெருமாள் ஆலயத்தில் சென்று பெருமாளை வழிபட, அவரது திருவருளால் ஒரு சிறந்த யோசனைப் பிறந்தது. கேரள உயர் நீதி மன்றத்தில் உள்ளப் பெயர் பெற்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராமகுமார் அவர்கள் மூலம் அடியேன் ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தேன். இவ்வழக்கு - கேரள அரசின் மீதும், கேரள முதல்வர் மீதும், திருவாங்கூர் போர்ட் மீதும் தொடுக்கப்பட்டது.
வழக்கின் சாராம்சம் -
திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் நிர்வாகத்தில் தான் ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் வருகிறது. இந்தத் தேவஸ்வம் போர்ட் கேரள அரசின் ஓர் அங்கமன்று. அ:.து ஒரு சட்டப்பூர்வமானத் தனி நிறுவனம். திருவாங்கூர், கொச்சி இந்து சமய நிறுவனங்கள் சட்டம் (1950)ன் கீழ் போர்டிற்கு உத்தரவுகளோ, வழிகாட்டுதல்களோ, ஆலோசனைகளோ பிறப்பிக்க அந்தச் சட்டத்தில் எந்த அதிகாரமும் மாநில அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. எனவே, தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும், தேவஸ்வம் அமைச்சரும், அரசு, போலீஸ் ஆகியோர் ஸ்ரீ சபரிமலைக் கோயில் விஷயத்தில் செய்யும் குறுக்கீடுகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்இதுவரை அவர்கள் பிறப்பித்த உத்தரவுகள், குறுக்கீடுகள் எந்த அதிகாரத்தின் பேரில் செய்யப்பெற்றன என்பதை அரசு விளக்கமளிக்க வேண்டும் - இவையே வழக்கின் சாராம்சம்.
வழக்கு விசாரணை
வழக்கு 30.10.2018 வழக்கு கேரள உயர் நீதி மன்றத்தின் மாண்புமிகு தேவஸ்வம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 05.11.2018 (நேற்று) அன்று இதற்கு விடை அளிப்பதாக அரசுத் தரப்புத் தெரிவித்துச் சென்றது. நேற்று விசாரணைக்கு வழக்கு வந்த போது அரசு விடை அளிக்கவில்லை. அரசின் கைப்பாவையாக இருக்கும் திருவாங்கூர் போர்டும் விடை அளிக்கவில்லை. ஸ்ரீ சபரிமலை விஷயத்தில் மணிக்கொருமுறை அறிக்கைகள் விடுக்கும் முதல்வரும் விடை அளிக்கவில்லை.
வழக்கறிஞர் வாதம்
எல்லா வயதுப் பெண்களும் சபரிமலைக்குப் போகலாம் என்று உச்ச நீதி மன்றம் சொன்னது. ஆனால்10-50 வயதுப் பெண்கள் கண்டிப்பாகப் போக வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு, இதுவரைக் கண்டிராத நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் அரசினால் போடப்பட்டு பக்தர்கள் தங்கள் அடிப்படை வழிபாட்டு உரிமையை இழந்து நிற்கிறார்கள் என்று என் வழக்கறிஞர் நேற்று வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட மாண்புமிகு நீதிபதிகள் அரசுத் தரப்பினரைக் கடுமையாகச் சாடினர். அரசு - சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த மட்டுமே செயல்படவேண்டும். கோயில் விஷயங்களில் குறுக்கிட அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பக்தர்களை இன்னல்களுக்கு உள்ளாக்கக் கூடாது. கண்டிப்பாகப் 12ம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த இடைக்கால உத்தரவு ஐயப்ப பக்தர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது.
மேலும் பல வெற்றிகள் - பெரும் வெற்றிகள் - இவ்விஷயத்தில் பெற - ஸ்ரீ தர்ம சாஸ்தா நமக்குத் திருவருள் புரியட்டும்
🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...