Saturday, November 10, 2018

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் திரு. ரகுராம் ராஜன்!.

மானிலங்களில் அடிமைகளின் ஆட்சி, மத்தியில் ஆணவ ஆட்சி என்ற பாசிஸ முறையை 'மெல்லிய மயிலிறகால் விளாசியுள்ளார்' முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் திரு. ரகுராம் ராஜன்!.
சர்வாதிகாரத்தின் சதிவலைகள் தனது எல்லைகளை விரிவாக்கும்போது, ஏற்கனவே இருக்கும் அமைதியான கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்தும் சூழலைத் தகர்த்து எறிவதில் குறியாக இருப்பார்கள்.
மரபுகளை உடைத்து எறிவதும், மாநகர்களின் பெயர்களை மாற்றுவதும்கூட இவற்றின் ஆரம்பமே!.
உலக அரங்கில் கச்சா எண்ணெயின் விலை மாற்றம்தான் நமது நாட்டின் பொருளாதரப் பின்னடைவுக்கு பெரும் காரணம் என்பது உண்மை!. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறமும் தேவையான மாற்றம் ஏற்படவில்லை!.
பணமதிப்பிழப்பு GST போன்றவையும் ஒரு காரணம் என்பது ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார வல்லுனர்களின் கருத்து. இதனை ஆட்சியாளர்கள் புறந்தள்ளாமல் பெருமை பேசிக்கொண்டிருப்பது சரியல்ல!.
இதனைச் சொல்லும்போது காங்கிரஸ் அரசுதான் GST-யை முன்னெடுத்தது அப்போதும் ரகுராம் ராஜன மத்திய வங்கியின் பொறுப்பில் இருந்தார் என்பதனையும் நாம் நினைவில் வைக்கலாம்.
குறிப்பாக GST ஒரு சீரான வரி விதிப்பு அணுகுமுறையைத் தருகிறது. அதனால் இதனை வரவேற்கவே வேண்டும்.
அதே சமயம் விமர்சனத்திற்கு உரியவகையில் பாஜக இதில் விசத்தைப் போடுவதுபோல, அநியாயமாக நியாயமற்ற வகையில் பொருட்களைப் பிரித்து அவற்றின் மீது வரிவிதிப்பு அளவைக்கூட்டியதானது பெரும் கேட்டை விளைவித்துவிட்டது.
திட்டக் கமிசனை அதிரடியாக நீக்கிவிட்டு நிதி ஆயோக் என்றார்கள். இம்மாதிரி பெயர் மாற்றங்கள், MODIfied திட்டங்களின் மூலம் மாநிலங்களைக் குழப்பி அவற்றின் வேஷ்டியை உருவிக்கொண்டதுபோல உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
இதுபற்றி விவரமறிந்தவர்கள் கருத்திட்டால் நான் சரியாகப் புரிந்துகொண்டு என் கருத்தை மாற்றிக்கொள்ளவே விரும்புகிறேன்!.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...