நேரடியாவே பிரதமரை பார்த்து கேக்கறேன். IT ரைடு நடத்தறீங்களா, இல்லை அராஜகம் நடத்தறீங்களா? என்ன பண்ணான் என் கட்சிக்காரன்?. எங்க அடிமை உடன்பிறப்புகளுக்கு குடுக்கறதுக்காக கொஞ்சம் 200 ரூபா நோட்டை பண்டல் கட்டி வெச்சிருந்தான் . அதை புடிச்சு வெச்சுகிட்டு எங்களை மிரட்டி பேரம் பேசி எங்களை அடிமை ஆக்கறது தானே உலக வழக்கம். அதை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் டிவில போட்டு காட்டி, எங்க உ.பி. க்களையே எங்களை பார்த்து காண்டு ஆகுற மாதிரி பண்ணறீங்க.
இதே மாதிரி தான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்துச்சு. இன்னொரு தேசிய கட்சி எங்க ஆபீசில ரைடு விடறான். ஆனால் அவன் இந்த அளவுக்கு ஸ்டெப் எடுக்கலை. நாலாவது மாடியில ரைடு நடந்துட்டு இருக்கும் போதே, முதல் மாடியில எங்களை உட்கார வெச்சு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. அது போக என் தங்கச்சியையும், அவர் மனம் கவர்ந்தவரையும் ஜெயில்ல வெச்ச போது கூட, மே மாச வெயில்ல அவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தாகம் எடுக்கும் போதெல்லாம் மினரல் வாட்டர் பாட்டிலா குடுத்தாங்க. அதுவும் ஐஸ் வாட்டரு. இதை எங்க அப்பாவே சொல்லி பாராட்டியிருக்காரு. அந்த நாகரீகம் இல்லை உங்களுக்கு. என்னா ரைடு.
ஊர்ல ஓட்டு இருக்கிற கட்சியை எல்லாம் உங்க பக்கம் அனுப்பி விட்டுட்டு, சல்லி காசுக்கு பிரயோஜனப்படாத கட்சிகளோட கூட்டணி வெச்சு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுனதுக்கு நீங்க காட்டுற நன்றி இது தானா? வேண்டாம். . எனக்கும் தெரியும் கூட்டணி அரசியலு. ஆனால் உருப்படியா கூட்டணி வைக்க மாட்டேன். வைக்க தெரியாது. கடைசியா உங்களை எச்சரிக்கிறேன். இதுக்கு மேலேயும் எங்க கட்சிக்காரன் யார் வீட்டுலேயாவது ரைடு வந்தீங்க, மறுநாளே எங்க சந்திராஷ்டம லெக் தாதாவை நேரா உங்க கட்சி ஆபீசுக்கு அனுப்பி , உங்களை நேர்ல பார்த்து, வாழ்த்தி ஒரு அறிக்கை விட சொல்லிடுவேன். அப்புறம் என்ன ஆகும்ன்னு உங்களுக்கே தெரியும்....ஆமா..சொல்லிப்புட்டேன்😀
No comments:
Post a Comment