Sunday, April 7, 2019

" சர்க்காரியா பாகம் 2 "

இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது.
ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல்நடந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? பூச்சிமருந்திலும் ஊழல் நடந்தது. அதைக் கண்டுஇந்தியாவே வியந்தது. அதுதான் கருணாநிதி. இதனால்தான் விஞ்ஞான முறைப்படி ஊழல்செய்பவர் என்ற பெரும்பெயரைப் பெற்றார்.
கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைதாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைபார்த்திருப்பீர்கள். அது போல, ஒரு பூச்சி மருந்துதொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார்.
1970ம் ஆண்டு விவசாயத்தில் இந்தியா தன்னிறைவுஅடைய வேண்டும் என்ற நோக்கோடு, மத்திய அரசுவிமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் திட்டம்ஒன்றை அறிமுகப் படுத்துகிறது.
அதிகமாக பூச்சிதாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்துதெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், இத்திட்டத்தைமத்திய அரசு கொண்டு வந்தது.
இதற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ.7 க்கு மேற்படாமல், செலவிடப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அப்படிஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழுக்கு மேல் செலவானால், அந்த செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்.
திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளராகஇருந்தவர், அன்பில் தர்மலிங்கம். அன்பில்தர்மலிங்கத்தை ராஜகோபால் என்பவர் சந்திக்கிறார். அறிமுகப் படுத்திக் கொள்கிறார். இந்த ராஜகோபால்,பொதுப்பணித் துறையின் காண்ட்ராக்டர்.
பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர்களோட ுகருணாநிதியின் நெருக்கம், அறிஞர் அண்ணாஅமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக அவர் இருந்த போதே தொடங்கிவிட்டது.
அன்பிலுக்கு வேண்டியதை செய்து தருகிறார் ராஜகோபால். ராஜகோபாலுக்கு வேண்டியதை செய்துதர அன்பில் தயாராகிறார்.
மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்றதிட்டத்தை அறிவித்த உடனேயே, அன்பிலைசந்திக்கிறார் ராஜகோபால்.
‘அண்ணே.. இந்த விமான கம்பேனிக் காரங்க பூச்சி மருந்து தெளிக்கறதுல,நெறய்ய சம்பாதிக்கிறாங்க… நாம இதுல தலையிட்டு,கமிஷன் வாங்கலாம்னே…’ என்ற யோசனைதெரிவிக்கிறார்.
கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும் ? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார். மருந்துத் தெளிப்பு கம்பேனிகளோடு பேச்சுவார்த்தையை தொடங்க உத்தரவிடுகிறார்.
கம்பேனியின் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டு, ஒருஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்கஇயலும் என்று கேட்கப் படுகிறார்கள். ஒரு ஏக்கருக்கு7 ரூபாய்க்கு தெளிக்க இயலும் என்றே அவர்கள்ஒப்புக் கொள்கிறார்கள்.
மத்திய அரசு நிர்ணயித்த விலையில் மருந்துதெளித்தால் பிறகு அது திமுக ஆட்சியா ?
திமுகவின்வரலாறு என்ன ?
பாரம்பரியம் என்ன ?
மத்திய அரசுஒரு ஏக்கருக்கு ரூபாய் ஏழு நிர்ணயித்திருந்தாலும், நீங்கள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 9 என்று டெண்டர்கொடுங்கள். அந்த 9 ரூபாயில் ஒரு ஏக்கருக்கு 40பைசா வீதம் கமிஷனாக கொடுங்கள் என்று பேசுகிறார்அன்பில். முக்கிய நிபந்தனை என்னவென்றால், பூச்சிமருந்து தெளிக்கும் வரையெல்லாம் காத்திருக்கமுடியாது.
கமிஷனை உடனடியாக தந்து விடவேண்டும் என்பதே. ஏழு ரூபாய்க்கு மருந்துதெளித்தாலே லாபம். இதில் கமிஷன் போக 8 ரூபாய்60 காசுக்கு மருந்து தெளிக்க வேண்டுமென்றால்தனியார் முதலாளிகளுக்கு கசக்குமா என்ன ?உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.
அப்போதெல்லாம் கருப்புப் பணம் இப்போதுஇருப்பது போல சகஜமாக புழக்கத்தில் இல்லை.நாசூக்காக ஹவாலா வழியாகவோ,சுவிட்சர்லாந்திலோ பணத்தைப் போடும் வழக்கம்அப்போது வளர்ந்திருக்கவில்லை.
ஆகையால் அந்ததனியார் நிறுவனங்கள், நாங்கள் கொடுக்கும்அத்தனை பணத்துக்கும் ரசீது வேண்டும் என்றுகேட்கிறார்கள். நூதனமான யோசனைக்கு வருகிறார் அன்பில். அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒருநிறுவனத்தை தொடங்குகிறார். மருந்து தெளிக்கஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்சீஸோடு ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.
அதாவது, பொன்னி ஏஜென்சீஸ்,அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக, ஒருஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் தருவதென்று….இந்த ஏற்பாட்டின் படி, 75 ஆயிரம் முன்பணமாகஅன்பில் தர்மலிங்கத்திற்கு கொடுக்கப் படுகிறது.இந்தப் பணம் கொடுக்கப் படுகையில் அன்பில்திமுகவின் மாவட்டச் செயலாளர் அவ்வளவுதான்.வெறும் 75 ஆயிரம் தானே என்று நினைத்துவிடாதீர்கள்.
75 ஆயிரம் 1970ல் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ஒரு பவுன் 147ரூபாய். 75 ஆயிரத்தின் மதிப்பு என்ன என்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தற்போது போலவே, அப்போதும் திமுகவில்அனைவருக்கும் பேராசைதான். உரியவர்களுக்குபங்கு முறையாக சேரவில்லை. பூச்சி மருந்துதெளிப்பதில் ஊழல் செய்தவர்கள், விவசாயத்துறைஅமைச்சருக்கு பங்கு தராமல் விட்டு விட்டார்கள்.
வேளாண் துறை அமைச்சராக அப்போது இருந்தவர்,சத்தியவாணி முத்து. தாழ்த்தப்பட்டோர்முன்னேற்றக்கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கிநடத்தி வந்தவர், பின்னாளில் தமிழர்அனைவரையுமே முன்னேற்றத்தான் திராவிடமுன்னேற்றக் கழகம் இருக்கிறதே.. தனியாக எதற்குஒரு கழகம் என்று தனது தாழ்த்தப் பட்டோர்முன்னேற்றக் கழகத்தை திமுவோடு இணைத்துவிட்டார். அவர்தான் அப்போது விவசாயத்துறைஅமைச்சர்.
தான் விவசாயத்துறை அமைச்சராக இருக்கும்போது,தனக்கே தெரியாமல் யார் இந்த முடிவை எடுத்ததுஎன்று வெகுண்டெழுந்த சத்தியவாணி முத்து,உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள்அனைவரும் தன்னை 1970 ஜுன் மாதம் 4ம் தேதிதன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவிடுகிறார்.
இதையடுத்து அன்பில் தர்மலிங்கத்திற்கும்,ராஜகோபாலுக்கும் கிலி எடுக்கிறது. இந்தஅம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டால்என்ன செய்வது என்று ?
உடனடியாக விமானகம்பெனி நபர்களை அழைத்து, சத்தியவாணிமுத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில்,ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு குறைவாக மருந்து தெளிக்கஇயலாது, என்று கூறி விடுங்கள்.
அந்த அம்மாமீண்டும் வலியுறுத்தினால், அதற்கு குறைவாக பூச்சிமருந்து அடித்தால், பூச்சிக்கு பதிலாக நாங்கள்தான்சாக வேண்டும் என்று கூறி விடுங்கள் என்று கூறிவிடுகிறார் அன்பில் தர்மலிங்கம்.
சத்தியவாணிமுத்துவோடு கம்பெனி பிரதிநிதிகளின் மீட்டிங்நடக்கிறது. சத்தியவாணி முத்து ஒரு ஏக்கருக்கு8.25க்கு மேல் தர முடியாது என்று உறுதியாகநிற்கிறார். விமான கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில்உறுதியாக நிற்கின்றன.
கம்பெனி பிரதிநிதிகளின்பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, 8.25க்கு மருந்து தெளிக்க முன்வருபவர்கள்,விவசாயத்துறை இயக்குநரை சந்திக்கலாம்,மற்றவர்கள் கிளம்புங்கள் காற்று வரட்டும் என்று கூறிவிடுகிறார். நடந்த விஷயங்களை அப்படியே கோப்பில் பதிவு செய்கிறார்:
ஏற்கனவே, வேலையை முடித்துக் கொடுக்கிறேன்என்று ‘அட்வான்ஸ் லஞ்சத்தை’ பெற்றுக் கொண்டஅன்பிலுக்கு திருடனுக்கு தேள் கொட்டியதைப் போலஇருந்தது. உடனடியாக முதலமைச்சர் கருணாநிதியைசந்திக்கிறார்.
இதுக்குத்தான் பொம்பளைங்களைஅமைச்சரவையில சேக்கக் கூடாதுன்னு சொன்னேன்.இப்போ பாத்தீங்களா…. எவ்வளவு அழகா ஒரு ஊழல்பண்ணோம். இந்த அம்மா இப்போ ஆட்டையைகலைக்கப் பாக்குது என்று புலம்புகிறார். கருணாநிதி முதலமைச்சர் அல்லவா ? அதுவும் விஞ்ஞானமுறையில் ஊழல் செய்வதை அறிந்தவர் அல்லவா ?
கருணாநிதிக்கு வந்ததே கோபம்….. நான்முதலமைச்சராக இருக்கிறேன்… இந்தஅம்மையாருக்கு என்ன இப்படி ஒரு துணிச்சல் என்று,தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவைஅழைக்கிறார்.
உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்குபூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறுஉத்தரவிடுகிறார். அமைச்சர் கையெழுத்துவேண்டியதில்லை. கோப்பில் நான்கையெழுத்திடுகிறேன் என்று கூறுகிறார்.
ராயப்பாவும், அப்படியேஅவர் உத்தவை நிறைவேற்றுகிறார். இப்படிபோடப்பட்ட உத்தரவில் கையெழுத்திட ஒரு அதிகாரிவேண்டுமல்லவா ? அந்த அதிகாரிதான்ஈ.பி.ராயப்பா.
அது வரை, ஐஏஎஸ் பணியில்மூத்தவர்களை தலைமைச் செயலாளராக நியமிக்கும்வழக்கம் இருந்து வந்தது. அந்த வழக்கத்தை மாற்றி,ராயப்பாவை விட பணி மூத்தவர்கள் எட்டு பேரைஓரங்கட்டி விட்டு, ஈ.பி.ராயப்பாவை தலைமைச்செயலாளராக்கி உத்தரவிடுகிறார் கருணாநிதி. இதற்குகைமாறாக, ராயப்பாவும், பூச்சி மருந்து தெளிப்பதுதொடர்பான கோப்பில் கையெழுத்திடுகிறார்.
அதற்கு அடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில்,அந்தக் கோப்பை பார்வையிட்ட, சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்து, தான் எழுதிய குறிப்பு கோப்பிலிருந்துகாணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதிர்ந்துஎன்ன செய்வது ? உத்தரவுகள் வழங்கப்பட்டு,வேலையே முடிந்து விட்டது.
ஆனால், இந்த சம்பவத்தில் இருந்து சத்தியவாணிமுத்து பாடம் கற்றுக் கொண்டார் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அதன் பிறகு, அவர் மீது, கப்பல்கட்டுமானத்தில், ஊழல் புகார் எழுந்தது
அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது அடுத்தஅத்தியாயம். இது 1971-72 இந்த அத்தியாயத்தில்பல திருப்பங்கள். இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றுஎம்எல்ஏ ஆன, அன்பில் தர்மலிங்கம்,விவசாயத்துறை அமைச்சராகிறார்.
ஏற்கனவே பூச்சிமருந்து விவகாரத்தில் ருசி கண்ட கருணாநிதியும்,அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சராக்குவதில்,அதுவும் விவசாயத்துறை அமைச்சராக்குவதில்துளியும் தயக்கம் காட்டவில்லை.
இந்த முறை, நேரடியாக விமான கம்பெனிகளிடம்பேச்சுவார்த்தையை தொடங்குகிறார் தர்மலிங்கம்.விமானக் கம்பெனிகளின் பிரதிநிதிகளிடம், ‘பாருங்கபாஸ். போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசுகுடுத்தீங்க. இப்போ விலைவாசி ஏறிப்போயிருச்சு.அதனால, ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனாகொடுத்துடுங்க.
உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11ரூபாய் தர்றோம்’ என்று பேசுகிறார். அதிர்ந்து போனவிமானக் கம்பெனிக்காரர்கள், அவ்வளவு தரமுடியாது, ஒரு ஏக்கருக்கு 80 காசு கமிஷனாகத்தருகிறோம், அதற்கு ரசீது தாருங்கள் என்றுகூறுகிறார்கள். இதற்கு ஒப்புக் கொண்ட தர்மலிங்கம்,ராஜகோபால் மூலமாக கொடுங்கள் என்று கூறுகிறார்.இந்த இடத்தில் தான் கதையில் ட்விஸ்ட் வருகிறது.ராஜேகோபால் இந்த விவகாரத்தில் நிறைய ‘உள்குத்து’செய்வதாக அன்பில் சந்தேகிக்கிறார்.
அதனால்,ராஜகோபாலை கழற்றி விட முடிவு செய்து, விவசாயத்துறை செயலாளராக இருந்த வேதநாராயணனைஅழைக்கிறார்.
‘நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம்பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய்கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90பைசாவுக்கு குறைய மாட்டார். மேலும் 25 சதவிகிதகமிஷன் முன்னதாகவே கொடுக்கப் பட வேண்டும்’என்றும் கூறுகிறார்.
இதன்படி, விஷயம் விமானகம்பெனிகளுக்கு சொல்லப் படுகிறது. எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்துஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள்பணிக்கப் படுகிறார்கள். அதன்படியே, பணியையும்தொடங்குகிறார்கள்.
இப்போது புதிய சிக்கலாக, கடந்த ஆண்டு செய்தவேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும்,அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும்கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. இதேஇப்போதைய கருணாநிதியாக இருந்திருந்தால்,சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் தள்ளியிருப்பார்.
அப்போது அந்த அளவுக்கு கருணாநிதி தேர்ச்சிபெறவில்லை. முன் பணம் மட்டுமே வந்திருந்தது.முழு கமிஷனும் வரவில்லை. மருந்துக்கம்பெனிகளிடம் ஒழுங்காக பேச்சுவார்த்தை நடத்திபணத்தை வசூல் செய்ய துப்பில்லாத அன்பில்தர்மலிங்கத்தை 12.09.1971 அன்று பதவி நீக்கம்செய்து விட்டு, ப.உ.சண்முகத்தை வேளாண்அமைச்சராக்குகிறார்.
அடுத்தாக கருணாநிதிபிறப்பித்த உத்தரவு, ‘கம்பெனிகள் ஏக்கருக்கு 90பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை.அதனால் அவர்களுக்கு சேர வேண்டிய தொகைகள்அத்தனையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஒரு வேளை வங்கியிலிருந்து பணம் எடுக்கப் பட்டு,டிமாண்ட் டிராப்டாக இருந்தாலும், அதையும் நிறுத்தவேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிநிறுத்தவும் என்று உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை,கருணாநிதியின் செயலாளர், வைத்தியலிங்கம்நிறைவேற்றுகிறார்.
கம்பெனிகள் அரண்டு போய்,வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைசந்தித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரை கை காட்டுகிறார்.
கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக்கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி, 1,17,273 ரூபாயை வசூல் செய்து, கருணாநிதியின்செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள்.அவர் அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு,விவசாயத்துறை செயலாளருக்கு, கம்பெனிகளுக்குசேரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்கஉத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, சாட்சியம் அளித்தகருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம், தனதுசாட்சியத்தில் “என்னைப் பொறுத்த வரையில், குற்றநோக்கமோ, உள்நோக்கம் கொண்டோ, தெரிந்தோ,எனது சொந்த ஆதாயத்துக்காகவோ, இந்தப் பணம்பெற்றுக் கொள்ளப் படவில்லை. நான்செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சருக்குசேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாகஇருந்ததுதான்”.
இந்த ஊழலைப் பற்றி தனது முடிவை பதிவுசெய்கையில், நீதிபதி சர்க்காரியா
“இந்தச் செயல்வகை எல்லாம் முதலமைச்சர்,வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின்வாய்மொழி உத்தரவுகளினால் விளைந்ததாகும்.
மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்தமுறையற்ற தந்திரங்களினால் இந்த ஆப்பரேட்டர்கள்(கம்பெனிக்காரர்கள்) முதலில் கவரப்பட்டுமீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிவிடப்பட்டு,அவர்கள் “வழிக்குக் கொண்டுவரப்படும் வரை”நிர்பந்தப் படுத்தப் பட்டனர்.
முதலமைச்சர்,வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர்லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களதுகோரிக்கைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று.இந்தக் கட்டாயக் கோரிக்கைகளுக்குஇணங்காவிட்டால், தங்கள் கதி சர்வநாசம்தான் என்றஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டனர்.”
2010ம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதை ஒட்டி கருணாநிதி வெளியிட்டஅறிக்கையில்
“என்னையும் உன்னையும் சிலை வடிவில் நின்றுசிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்எத்தனையோ கோபதாபங்கள் எம்மிடையேஊடல்கள் உறவுகள்! எதையும் உரிமையுடன் உணர்வுகலந்த உண்மை நட்புடன் கணமும் பிரியாமல்கண்ணின் கருவிழி போல என்னையும் என்நட்பையும் எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்” என்று குறிப்பிடுகிறார்.
விவசாயிகளுக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும்,மத்திய அரசு உருவாக்கிய பூச்சிக் கொல்லி மருந்துதெளிக்கும் ஒரு விவகாரத்தில் எப்படி பணம் பண்ணியிருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தீர்களா ?
அன்று பூச்சிக் கொல்லி மருந்து. இன்று ஸ்பெக்ட்ரம். தொகை வேறு முறை ஒன்றே. அடித்ததும் ஒரே நபர் தான். உதவிய நபர்களே வேறுபடுகின்றனர்.
அவர்தான் கருணாநிதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...