தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும், வேலுார் லோக்சபா தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், குடோனில் நடந்த வருமான வரித்துறை, '‛ரெய்டு' தான், இப்போதைக்கு பரபரப்பான விஷயம்.
'வருமான வரித் துறையினர் கைப்பற்றிய, 11.53 கோடி ரூபாய்க்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூறினாலும், இந்த பிரச்னையில் இருந்து துரைமுருகன் அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாது என்றே, அதிகாரிகள் கூறுகின்றனர்.'என்ன ஆகும்?' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்டபோது, பிடிகொடுக்காமல் பேசினர்.'பணம் பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்த பிறகு தான், 'ஆபரேஷன் துரை' ரெய்டு திட்டம் தீட்டப்பட்டது. வருமான வரித்துறையிடம் இருந்து அறிக்கை வந்ததும், கமிஷன் பரிசீலித்து, தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கும்' என்பதற்கு மேல் கூடுதல் விவரம் தர முன் வரவில்லை.

முன்னாள் தேர்தல் ஆணையாளரிடம் பேசினோம்.''துரைமுருகன் மகனுக்கு ஓட்டளிப்பதற்காக, மக்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் என்பது, கிட்டத்தட்ட நிரூபணம் ஆகி இருக்கிறது. கல்லுாரியில் வைத்திருந்த பணத்தை, 20 கார்களில் வெளியே கொண்டு போனது, 'சி.சி.டி.வி., கேமரா'வில் பதிவாகி உள்ளது. துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, அவர் வைத்திருந்த, ஐந்து கோடியை, அதிகாரிகளிடம் எடுத்து கொடுத்துள்ளார். இப்படி பணம் பிடிபட்ட அனைத்து இடங்களிலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். எனவே, துரைமுருகன் தரப்பினர், வசமாக சிக்கியுள்ளதால், சட்ட ரீதியாக தப்பிக்க வாய்ப்பில்லை,'' என்றார் அவர்.
''கடந்த, 2014ல், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலின் போது, கரூர் அன்புநாதனிடம் இருந்து, நான்கு கோடி ரூபாயை கைப்பற்றினர். இந்த பணம், கரூர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தது என தெரியவந்தது. எனவே, அந்த தொகுதி தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் கமிஷன், இறுதி கட்ட விசாரணையை முடித்து, தேர்தலை ரத்தும் செய்தது. அதைவிட, கூடுதல் ஆதாரங்கள் வேலுாரில் சிக்கியதால், தேர்தல் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளது,'' எனவும் அவர் தெரிவித்தார்.
'கதிர் ஆனந்தை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, வைக்கப்படும் கோரிக்கை பற்றி கேட்டபோது, “வேட்பாளரை இப்போது தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பில்லை. தேர்தல் ரத்தாகி, மீண்டும் தேர்தல் அறிவிப்பு வருவதற்குள், வேட்பாளர் மீதான குற்றச்சாட்டை கோர்ட்டில் நிரூபித்து, தகுதி நீக்க உத்தரவை பெற்றால், வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாது. இப்படி எதுவும் நடக்காமல், தேர்தல் நடந்து இதே வேட்பாளர் வெற்றி பெற்றாலும், இந்த வழக்கு பாதிக்காது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 'அவர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதே செல்லாது' என்ற நிலை உருவாகும். அதன் பின், அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும்,” என்றார்.
வருமான வரித்துறையின் சோதனை முடிந்தாலும், துரைமுருகன் குடும்பம் சந்திக்கும் சோதனைகள், இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.
No comments:
Post a Comment