Saturday, April 6, 2019

வாத நோய்கள் வாத நோய்கள் 80 வகைப்படும்:-

வயிறு மந்தமாகும், மலச்சிக்கல் உண்டாகும், மூட்டுகள், கால்கள் முதலான இடங்களில் வலி உண்டாகும், தாது நஷ்டமாகும், நகம் பிளத்தல், பாதம், உள்ளங்கை வெடித்தல், பாதத்தில் குத்து வலி, பாதத் தடுமாற்றம், பாதம் மறத்துப் போதல், கணுக்கால் வளைவு, கணுக்கால் பிடிப்பது போன்ற வலி, முழங்கால் மூட்டு நழுவுதல், துடை ஸ்தம்பித்தல், துடைவிலவிலத்தல், ஆசனம் வெளிப்படுதல், ஆஸனக்கடுப்பு, விரைமேல் இழுத்துக் கொள்ளல், குறி அசையாமை, துடையிடுக்கில் வாயு சேர்ந்து வலி, பின் பாதத்தில் பிளப்பது போன்ற வலி, வாதம் தம் ஸ்தனமாகிய பக்குவா சயத்திலிருந்து மேல் நோக்கி கிளம்புதல், தாங்கி தாங்கி நடத்தல், குறுகிய உருவம், முள்ளந்தண்டின் அடிபாகத்தில் பிடிப்பு, முதுகுப் பிடிப்பு, விலாப் பிடிப்பு வலி, வயிற்றைச் சுருட்டல், வாத பைத்தியம், இருதயம் வேகமாக அடித்துக் கொள்ளுதல், இருதயத்தைத் தேய்ப்பது போன்ற வலி, மார்பு அடைப்பு, மார்பில் குத்து வலி, கையுலர்ந்து போதல், கழுத்து திருப்ப முடியாதிருத்தல், கழுத்தின் சிரைஸ்தம்பம், சிந்தனா சக்தி குறைதல், கழுத்தைப் பிளப்பது போன்ற வலி, தாடையில் பிளப்பது போன்ற வலி, உதட்டில் பிளப்பது போன்ற வலி, கண்ணில் பிளப்பது போன்ற வலி, பல்லில் பிளப்பது போன்ற வலி, பல் அசைதல், தழ தழத்துப் பேசுதல், வாய் உலர்தல் ருசியறியும் சக்தியை இழத்தல், காதில் குத்து வலி, காது இரைச்சல், உரத்தச் சத்தம் மாத்திரம் காதில் விழுதல், இமை அசையாதிருத்தல், கண் மறைப்பு, கண்ணில் குத்து வலி, கண் பிதுங்கல், பொட்டில் பிளப்பது போன்ற வலி, புருவம் உயர்தல், நெற்றியில் பிளப்பது போன்ற வலி, தலைவலி, மண்டைத்தோல் வெடிப்பு, முகம், கை, கால்களில் வலி, ஒரு பக்கம் வலி, வாய் கோணும் படி செய்தல், வலது அல்லது இடது பக்கம் ஒன்றில் மாத்திரம் வலி, வலது, இடது இரண்டு பக்கத்திலும் வலி, கம்பு போல் உடம்பு முழுவதும் விரைத்தல், களைத்துப் போதல், மயக்கம், நடுக்கம், கொட்டாவி, விக்கல், உற்சாகமின்மை, பிதற்றல், அயர்வு, வறட்சி, உடம்பில் சொர சொராப்பு, சரீரம் மலம் முதலின கருமை கலந்த நிறமாகுதல், தூக்கமின்மை, மனம் ஓரிடம் தரிக்காமல் இருத்தல் ஆகிய அறி குறிகள், தொந்தரவுகள், வேதனைகள் வாத நோய்களில் உண்டாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...