மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.
மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது, சிறிய வெட்டுக்காயமோ தீக்காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் பொடியை சிறிதளவு தூவிவிட்டால், விரைவில் குணமடையும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
மஞ்சள் புற்றுநோயை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. மஞ்சளில் உள்ள சக்திமிக்க பல்வேறு உட்பொருள்கள் கதிர்வீச்சுகளால் ஏற்படும் கட்டிகள் உண்டாகாமல் பாதுகாக்கின்றன. T-செல் இரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் செல்கள் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் போன்ற கட்டி செல்கள் பெருகுவதையும் மஞ்சள் தடுக்கிறது.
No comments:
Post a Comment