Friday, April 5, 2019

துரைமுருகன், வீராசாமி வாரிசுகளுக்கு 'சீட்' விரக்தியில் தவிக்கிறது அன்பழகன் குடும்பம்.

லோக்சபா தேர்தலில், துரைமுருகன், வீராசாமி வாரிசுகள் போட்டியிட, தி.மு.க.,வில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது; ஆனால், கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனின் வாரிசுக்கு, எந்த வாய்ப்பும் தரப்படவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர், கடும் விரக்தியில் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
துரைமுருகன், வீராசாமி,வாரிசு,சீட்,விரக்தி,அன்பழகன்,குடும்பம்

கருணாநிதிக்கு அடுத்து, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்தவர்கள், அன்பழகன், வீராசாமி, துரைமுருகன். கருணாநிதி, வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால், இம்மூவருடன் தான் அதிக நேரம் செலவழிப்பார். ஸ்டாலினின் ஆதிக்கம், கட்சியில் அதிகரிக்க அதிகரிக்க, தி.மு.க.,வில், அன்பழகன், வீராசாமி, துரைமுருகன் ஆகியோரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. வீராசாமியிடம் இருந்த பொருளாளர் பதவி, ஸ்டாலின் கைக்கு மாறியது. ஒருகட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியும், துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்பட்டது. கருணாநிதி மறைவை அடுத்து, தி.மு.க., தலைவராக ஸ்டாலின் உருவெடுத்து விட்டார். அன்பழகனும், வீராசாமியும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை பயன்படுத்தி, துரைமுருகன், ஸ்டாலினுடன் ஒட்டிக் கொண்டார். சட்டசபை செயல்பாடுகளில், ஸ்டாலினுக்கு சில யோசனைகள் கூறி, தனக்கான இடத்தை தக்கவைத்து விட்டார். இதற்கு பரிசாக, தி.மு.க., பொருளாளர் பதவி, துரைமுருகனுக்கு தரப்பட்டது.

சாமர்த்தியமாக காய் நகர்த்தி, லோக்சபா தேர்தலில், வேலுார் தொகுதியை, தன் மகன் கதிர் ஆனந்துக்கு, துரைமுருகன் பெற்று தந்து விட்டார். வீராசாமியும், ஸ்டாலின் மருமகன் சபரீசனையும், மகன் உதயநிதியையும் பிடித்து, தன் மகன் கலாநிதிக்கு, வடசென்னை தொகுதியை பெற்று விட்டார். ஆனால், 2014 லோக்சபா தேர்தல் முதலே, தன் மகன்களில் ஒருவருக்கு, 'சீட்' கேட்டு, பொதுச்செயலர் அன்பழகன் போராடி வருகிறார். 

வாரிசு அரசியலை காரணம் காட்டி, 2016 சட்டசபை தேர்தலில், சீட் வழங்க கருணாநிதியும், ஸ்டாலினும் மறுத்து விட்டனர். இப்போது, துரைமுருகன், வீராசாமி மகன்களுக்கு, சீட் வழங்கப்பட்டுள்ளது. தன் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், தன் மகன்களில் ஒருவருக்கு, அன்பழகன் போராடி, 'சீட்' பெற்று இருப்பார் என, அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கூறுகின்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: உடல் நலிவுற்றுள்ள அன்பழகன், சென்னை, அண்ணா நகரில் உள்ள, தன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலமுடன் இருந்த நேரத்தில், தன் மகன்களை, தி.மு.க.,விற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என, பெரிதும் விரும்பினார்.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அண்ணாநகர் தொகுதியை, தன் மகனுக்கு எதிர்பார்த்தார். அதனால், தனக்கு சீட் வேண்டாம் என்றும் கூறினார். இருந்தும், அவரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போது, துரைமுருகன், வீராசாமி வாரிசுகளுக்கு, சீட் கிடைத்துள்ளதால், அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். தி.மு.க.,வின் அறிக்கைகள் அனைத்தும், அன்பழகன் பெயரில் வருகிறது. ஆனால், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும், கட்சியில் முக்கியத்துவம் இல்லை. எனவே, அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும், விரக்தியில் உள்ளனர். இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...