'ஹிந்து தெய்வங்களை, கலாசாரத்தை கொச்சைப்படுத்தியவர்கள் உடன் கூட்டணி வைத்தவர்கள் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' எனும் வாசகம் அடங்கிய நோட்டீசை திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சியினர் வீடு, வீடாக ஒட்டினர்.
ஹிந்து கடவுள்கள் குறித்து அவதுாறாக பேசி வரும் வீரமணியை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சியினர் ஏப்.1ம் தேதி திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், 'நான் ஹிந்து' என்ற தலைப்பிட்ட நோட்டீசை திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி பகுதி வீடுகளில் ஒட்டும் பணியை அக்கட்சி மாநில அமைப்பு பொது செயலாளர் ரவிபாலன் தொடங்கினார். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், நகர அமைப்பாளர் கண்ணன் இருந்தனர்.
ஹிந்து கடவுள்கள் குறித்து அவதுாறாக பேசி வரும் வீரமணியை கண்டித்து ஹிந்து மக்கள் கட்சியினர் ஏப்.1ம் தேதி திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், 'நான் ஹிந்து' என்ற தலைப்பிட்ட நோட்டீசை திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி பகுதி வீடுகளில் ஒட்டும் பணியை அக்கட்சி மாநில அமைப்பு பொது செயலாளர் ரவிபாலன் தொடங்கினார். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், நகர அமைப்பாளர் கண்ணன் இருந்தனர்.

ரவிபாலன் கூறும்போது:, ''ஏற்கனவே அறிவித்தபடி நோட்டீஸ் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒய்.எம்.ஆர்.பட்டி, பழநி ரோடு செல்லாண்டி அம்மன் கோயில், பாறைப்பட்டி, ஆர்.வி.,நகர் பகுதிகளில் ஒட்ட உள்ளோம்.வேடசந்துார், கொடைக்கானல், பழனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடு மற்றும் வணிக வளாகங்களில் ஒட்ட உள்ளோம்.வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன்தான் ஒட்டப்படுகிறது. அனைத்து ஹிந்துக்களும் ஆதரவு தெரிவித்துஉள்ளனர், என்றார்.
நான் ஹிந்து
நோட்டீசில் ''பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு முன்னோடி கிருஷ்ணர்'' என்று ஹிந்து மதக்கடவுளை பேசிய தி.க.வீரமணி, ''திருப்பதி கோயிலுக்கு நான் சென்றேன், இத்தனை கோடி பேர் பைத்தியமாக வணங்கும் ஒரு பொம்மை எப்படி இருக்கும் காணவே வந்தேன்'' என்ற கனிமொழி, 18ம் படி புனிதத்தை கெடுத்த கம்யூ., தி.மு.க., தி.க.,வுக்கு ஏப்.18ம் தேதி பாடம் புகட்டுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகர், திருப்பூரில் 'நாங்கள் ஐயப்பனை கும்பிடுபவர்கள்; கம்யூனிஸ்ட், தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என்று தங்கள் வீட்டு சுவர்களில் ஐயப்ப பக்தர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
எதிர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில், இந்து அமைப்பினர், பொதுமக்களை திரட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். விவகாரத்தில், கேரளாவில், மா.கம்யூ.,வின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஐயப்பன் கோவில் விவகாரத்தில், கம்யூ., கட்சியினர் மீது, தமிழக மக்கள் எதிர்ப்பு காட்ட துவங்கியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில், 'தி.மு.க.,- காங்.,- கம்யூ., கூட்டணியினர், எங்களிடம் ஓட்டு கேட்டு வராதீர்கள்' என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கலக்கம்
திருப்பூர் சாமுண்டிபுரம், வளையங்காடு உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில், உள்ள பல வீடுகளில், 'ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு. தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியுள்ளனர். இது, தி.மு.க, கூட்டணி மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரவேண்டாம்
விருதுநகரில் அய்யனார் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், தங்கள் வீட்டு சுவரில் 'எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனை கும்பிடுபவர்கள். கம்யூ., தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதே போன்று இனி அனைத்துபகுதியிலும் ஒட்டுவோம், என்றனர் இப்பகுதி ஐயப்ப பக்தர்கள்.

No comments:
Post a Comment