தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா கண்டருள்கிறார்.
உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை அம்மன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பச்சை பட்டினி விரதம் பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் (முதல் திருநாள்- கொடியேற்றம்) காத்தல்(5-ம் திருநாள்-ரிஷப வாகன காட்சி), அழித்தல் (10-ம் திருநாள்-திருத்தேர்) மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு உற்சவம்- 11-ம் திருநாள்), அருள் பாலித்தல் (தெப்பம்-13-ம் திருநாள்) ஆகிய ஐந்தொழில்களையும் சித்திரை திருவிழா நாட்களில் அம்மன் செய்வதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.

2-ம் திருநாளான 8-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
10-ம் திருநாளான 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அம்மன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் அம்மன் தேரில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 13-ம் திருநாளான 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவம் கண்டருள்கிறார்.

No comments:
Post a Comment