Saturday, April 6, 2019

ஓர் இரகசியம்...

முன்பு, கருணாநிதி முதல் அமைச்சராக இருக்கும் போது, நான் சென்னை நகரக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றினேன். அந்தக் காலத்தில், என் பிரிவில் இருந்து தினமும் இரண்டு அதிகாரிகளைக் காலையில் கருணாநிதி, அவரது கோபாலபுரம் வீட்டிலிருந்துக் கோட்டைத் தலைமைச் செயலகத்துக்குப் போகும் வரையில், பாதுகாப்புப் பணியில் அனுப்புவார்கள். நானும் அடிக்கடிப் போவதுண்டு.
அப்படிப் பாதுகாப்புப் பணியில் போகும் அதிகாரிகள், கருணாநிதி வீட்டு வாசலில் வந்து நின்று காரில் ஏறுகிற வரை, அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும் கோவில் மூலஸ்தானத்தை யாரும் மறைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப் படாத விதி. கோவில் மூலஸ்தானத்துப் பட்டர் உஷாராகக் காத்துக் கொண்டிருப்பார். கருணாநிதி அவர் வீட்டு வாசலில் வந்து நின்றதும், தெய்வத்துக்கு ஆரத்தி காட்டுவார். கருணாநிதியும், துண்டு கீழே விழுந்த மாதிரி நன்றாகவே ‘நடித்து’, வணங்கி, காருக்குள் ஏறுவார். இதனை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, எனது, ‘மாண்புமிகு உளவுத் துறை’ என்னும் புத்தகத்தில் எழுதி இருந்தேன். இப்புத்தகத்தைத் தமிழ்ப் புத்தகாலயப் பதிப்பாளர் அகிலன் கண்ணன் வெளியிட்டுள்ளார்.
இதைப் பற்றி, ஒரு பத்திரிகையாளர், கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் சிரித்துக் கொண்டே, ‘அந்தப் புத்தகத்தில், இன்னோர் இடத்தில், ராஜீவ் காந்தி கொலைக்கும் தி மு க வுக்கும் நேரடி சம்பந்தம் ஏதும் கிடையாது என்று எழுதி இருக்கிறாரே, அதைப் பாருங்கள்’. என்று சொல்லி, அப்புத்தகத்தைத் தான் ஏற்கனவே படித்து விட்டதைக் குறிப்பால் உனர்த்தியுள்ளார்! தான் எதிரில் உள்ள கோவில் மூலஸ்தான இறைவனை வணங்குவதை மறுக்கவே இல்லை.
அந்த மூலஸ்தானக் கடவுள் யார் தெரியுமா? சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா தான்.
கருணாநிதிக்குக் கடவுளாகத் தெரிந்த கண்ணபிரான், வீரமணிக்குக் காலிப் பயலாகத் தெரிந்துள்ளான். கருணாநிதிக்கு எப்போதும் கூர்மையான கண்பார்வை உண்டு என்பதால், வீரமணி தான் தன் கண்களையும், மூளையையும் நல்ல டாக்டர்களிடம் உடனே காட்டிச் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் எனக்கு ஒரு சந்தேகம்! கிருஷ்ண பரமாத்மா விஷயத்தில், ஸ்டாலின் தன் தகப்பனார் கட்சியா, கே வீரமணி கட்சியா?


நன்றி திரு. Venkataraman Ramanathan சார்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...