Tuesday, April 9, 2019

வீரமணிக்கு பகிரங்கமாக சில கேள்விகள் -....... வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே,
தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும்,
வேறு எந்த- மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா?
பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?
2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள்
கிறிஸ்து இல்லை,
அல்லாஹ் இல்லை
என்று தைரியமாக கூறமுடியுமா?
 
3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை
கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?
4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு
கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ
அல்லது
ஒரு முஸ்லிமின் தொப்பியையோ
அல்லது ஒரு
சிங்கின் தலை பாகையையோ
அகற்றும் ஆண்மை உண்டா?
5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?
6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும்
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள்
என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?
7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள்
ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா?
அல்லது
அண்ணாதுரை ,
காமராஜர்,
எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?
8. இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா?
அல்லது கூற அஞ்சுகிரீர்களா ?
9.இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிரித்தாள நினைக்கும் கருமர்களே
பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் நாபேச நடுங்குதேன்?
10. சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?
11.உங்கள் மனைவிகளையும் உங்கள் கட்டுமரங்களின் துனைவிகளையும் பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?
12.குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசிய கருணாநிதி வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி டிவி தொடர் எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடிந்ததா?...
13.ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.
ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள்,
கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும்
இஸ்லாமிய பெண்கள் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா?
14. ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்?
அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா
15.உங்களுக்கு கருப்பு சட்டை போட்டால்தான் பகுத்தறிவு வேலை செய்யுமா....
பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?
16.ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.
முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள்
உங்களை இனங்கண்டுள்ளனர் மக்கள்
உங்கள் அடுக்கு மொழி பேச்சை கேட்டு ஏமாந்த காலம் கடந்தகாலமாயாச்சு,....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...