அண்ணா நம்ம அடுத்த படத்துக்கு ஒரு சீன் புடிச்சிட்டேன்
ஒருத்தன் டாக்ஸ் கட்டாம ஊர ஏமாத்திக்கிட்டிருக்கான், அது பத்தி தகவல் தெரிஞ்ச ஐடி டிபார்ட்மென்ட் ரெய்ட் பண்ண பிளான் பண்றாங்க அது தெரிஞ்ச அவன் தப்பிச்சி ஓட பாக்குறான் முந்திக்கிட்ட ஐடி டீம் அவன் ஆபிஸ்லயே மடக்கி கொயரி பண்ணி டீடைய்ல் பத்தாம அவன் வீட்டுக்கே கூட்டிட்டு போய் என்கொயரிய கன்டினியூ பண்றாங்க, அப்பவும் அவன் உண்மைய சொல்ல மாட்றான், அப்ப அங்க உள்ள ஒரு ஆபிசர் இந்த மாதிரி கேசல்லாம் அசால்டா டீல் பண்ற அந்த டீம் ஹெட் மெர்சல் ராயப்பனுக்கு போன் பண்றாரு. அப்ப பத்து கார் பின்னாடி வர கோட் சூட்டோட ஹூரோவோட தெறி என்ட்ரி, ஐ மீன் உங்க என்ட்ரி...
என்ட்ரிலயே ஒரு பஞ்ச் "வழி உடுறவன் வாழ்க்கைக்கு ஏடு, வரி கட்டாதவன் வாழ்க்கையே கேடு”
ஆடியோ பங்சன்ல நான் மறுபடியும் பேசுறேன் "எங்கண்ணனுக்கு நான்தான்டா பண்ணுவேன்”
No comments:
Post a Comment