தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, March 31, 2021
மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் விவரம்.
தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா.
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.
தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஒரு தலைவனுக்கு தகுதி என்ன?
முதலமைச்சர் திரு.காமராஜ் வீட்டிற்கு, ராஜா சமூக குடும்ப நண்பர் வருகிறார். வணங்கிவிட்டு, சிறிது நேரம் ஊர் நிலவரம், தாயைப் பற்றி பேசுகிறார்கள்.
எம்.ஜி.ஆரைச் சுற்றி மக்கள் கூட்டம் தான்!
எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த, எச்.வி.ஹண்டே, எம்.ஜி.ஆரின் நல்ல குண இயல்புகளை கூறுகிறார்:
அமெரிக்காவில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை எடுத்து, சென்னை திரும்பி, மூன்றாவது முறையாக முதல்வர் ஆனதில் இருந்து, அவரின் உடல்நலப் பொறுப்பு, அவரின் குடும்ப மருத்துவரான, டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியம் வசம் விடப்பட்டது. ஒரு முறை, அமெரிக்க டாக்டர் பிரட்மன், எம்.ஜி.ஆரை பரிசோதனை செய்ய சென்னை வந்திருந்தார். அவரை வழியனுப்பி வைக்க, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, அவருடன் என்னை, எம்.ஜி.ஆர்., அனுப்பியிருந்தார். பிரட்மனுடன் காரில் சென்று கொண்டிருக்கையில், 'சாக்ஸ் அணியாமல், வெறும் 'ஷூ'வை, எம்.ஜி.ஆர்., அணிகிறார். நீரிழிவு நோய் இருப்பதால், அவரின் கால் பாதங்களில் புண் வரும் ஆபத்து உள்ளது; இதை, எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்?' என்றார்.இரண்டு நாட்களுக்கு பின், இந்த தகவலை, எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரின் ராமாவரம் இல்லத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்த அவர், காரில் தன்னுடன் ஏறச் சொன்னார். 'என்ன விஷயம்?' என்றார். டாக்டர் பிரட்மன் கூறியதை கூறினேன். அதை ஏற்க மறுத்தவர், தன் இரு கைகளை அசைத்து, நான் கூறியதை பொருட்படுத்தாதது போல சைகை செய்தார்.எனக்கு வருத்தமாக போய்விட்டது. ஒரு வாரம் ஆகிவிட்டது. சட்டசபையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. முதல் வரிசையில், எம்.ஜி.ஆருக்கு, எட்டாவது இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்து, அருகில் வருமாறு சைகை காண்பித்தார். நான், அவர் அருகில் சென்றேன். அருகில் அமர்ந்துஇருந்த நெடுஞ்செழியனை சற்று நகருமாறு கூறி, என்னை அருகே அமர்த்திக் கொண்டார்; எனக்கு ஒன்றும் விளங்க வில்லை.திடீரென தன் கால்களை காட்டி, சாக்ஸ் அணிந்திருப்பதை சுட்டிக் காட்டினார்; எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. என் முதுகை தட்டி, 'டாக்டர் பிரட்மனிடம் தெரிவித்து விடுங்கள்' என்றார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இன்னொரு நாள், அவரின் அறைக்கு நான் சென்ற போது, முட்டை வெள்ளைக்கரு, 'சூப்' அருந்திக் கொண்டிருந்தார். அதை காட்டி, 'சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உப்பு சப்பில்லாத இந்த வெள்ளைக்கருவை சாப்பிட கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்' என்றார் சிரித்தபடி.எம்.ஜி.ஆர்., எப்போதும் மக்கள் வெள்ளத்தில் இருந்ததால், அவருடன் சஜகமாக பழகுவதற்கும், பேசுவதற்கும், பயமில்லாமல் யோசனைகளை கூறுவதற்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் தான் இருந்தனர் என்பதை, நான் அறிந்தேன்!
நல்லதை தந்தால் நல்லது வரும்,..
ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...