தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பறக்கும் படையினர் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் உதவியுடன் அதிரடி சோதனைகள் நடத்தி, உரிய ஆவணமின்றி முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடத்தப்பட்டுவரும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் விவரம் பின்வருமாறு:-

No comments:
Post a Comment