Saturday, March 27, 2021

♥ கல்யாணசுந்தர விரதம். *28 - 3 - 2021 ஞாயிறுக்கிழமை பங்குனி உத்திர திருநாள் ♥

♥ *தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால், திருமணம் முடிந்த சந்தோசத்தில் இருக்கும் அந்த தெய்வங்களின் அருளை பூரணமாக பெற முடியும். இந்த விரதம் கல்யாண விரதம் என்றும், கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
♥ வள்ளி தெய்வானை சமேத முருகன் அல்லது சிவன் - சக்தி அல்லது பெருமாள் - லட்சுமி அல்லது ஆண்டாள்- ரங்கமன்னார், குல தெய்வங்கள் போன்ற தெய்வங்களில் உங்கள் விருப்ப தெய்வத்தை முன்னிறுத்தி பங்குனி உத்தர புண்ணியநாளில் கல்யாணசுந்தர விரதம் மேற்கொள்ள வேண்டும்.
♥ 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் பங்குனி உத்திரத்தில் அதிகாலையில் உங்கள் விருப்ப தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கி, அன்று பகல் எதுவும் சாப்பிடாமல் தெய்வ நினைவுடன் விரதம் இருந்து, மாலையில் கோவிலுக்கு சென்று பூஜை செய்து முடித்தபின்பு சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
♥ இந்த விரதம் இருந்தால் வாழ்வில் குறையா செல்வம் சேரும், களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும்.
♥ 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதமிருப்போருக்கு மறுபிறவியில்லை.
♥ ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னார் திருமண வைபவத்தை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும்
♥ காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வார்கள் .
♥ கோவில் தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும்.
♥ அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.
♥ *திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பார்கள்.
♥ *ஸ்ரீலட்சுமியின் அவதார தினம்,
♥ *பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டது,
♥ *சிவன் – பார்வதி திருமணம்,
♥ *முருகன் – தெய்வானை திருமணம்,
♥ *நந்திதேவர்- சுயம்பிரபை திருமணம்
♥ *மிதிலையில் ஒரே மேடையில் நடைபெற்ற தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி திருமணங்கள்
♥ *தேவேந்திரன்- இந்திராணி திருமணம்,
♥ *நான்முகன்-கலைவாணி திருமணம்,
♥ *ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமணம்,
♥ *இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் திருமணம்,
♥ *மன்மதன் மீண்டும் உயிர் பெற்று ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரிய ஆரம்பித்தது,
♥ *மணிகண்டனாகிய,ஐயப்பன் பிறந்தது,
♥ *அர்ஜுனன் பிறந்தது
மற்றும் எண்ணற்ற தெய்வீக நிகழ்வுகள் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றன.
♥ திருவையாறு அருகேயுள்ள திங்களூர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6.00 மணிக்கு சூரிய ஒளிக்கதிர் சிவலிங்கத்தின் மேல்படும். அதுபோல மறுநாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளிக்கிரணங்கள் சிவலிங்கத்தின்மேல் படும் அதிசயத்தைக் காணலாம். இதை தரிசிப்போரின் பாவங்கள் விலகும். அன்று தண்ணீர்ப் பந்தலமைத்து நீர் மோர், பானகம் வழங்கினால் வற்றாத வளம்பெறலாம்.
♥ *திருமணமான தம்பதியர் இடையே பிரிவினை, சண்டை சச்சரவு நீங்க, தம்பதியர் பங்குனி உத்திர நாளில் கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை தம்பதி சமேதராக தரிசனம் செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் .
♥ *கோடீஸ்வர யோகம் கிடைக்கும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் நோய்கள் நீங்கி கணவன் மனைவி ஆயுள் அதிகரிக்கும். வீட்டில் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
♥ *திருமணமான பெண்கள் பங்குனி உத்திர நாளில் புது தாலி மாற்றிக்கொள்வதன் மூலம் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
♥ *குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக்கு 100 சதவீத பலன்களை தர வல்லது. மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவது கூடுதலாக நூறு சதவீத கூடுதல் பலனை பெற்றுத் தரும். பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாள் குலதெய்வ வழிபாட்டுக்கு ரொம்பவே உன்னதமான நாளான பங்குனி உத்திர நாளில், குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு செய்தால் வம்சம் தழைக்கும்; ஐஸ்வர்யம் கொழிக்கும்!
May be an image of 2 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...