Wednesday, March 17, 2021

உங்களுக்கு தெரியுமா? - பிராணயாமம்.

 *மூச்சுப் பயிற்சி செய்யும் போது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

*மனம் அமைதி பெறுகிறது. மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தினசரி பிராணாயாமம் செய்பவர்களுக்கு நோய் வந்தால் அது தானாகவே எளிதாக குணமடைந்து விடும்.
அனைத்து ஜீவ ராசிகளும் உயிர் வாழ்வதற்குத் தேவையான தூய காற்று, நாசிகள் வழியே நுரையீரல்களைச் சென்றடைந்ததும், நொடிப்பொழுதில் அசுத்த காற்றாக மாற்றம் பெற்று வெளிவருகிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை .
*பிராணாயாமம் என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும். இப்பயிற்சியில் 4 நிலைகள் உள்ளன.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதற்கு " பூரகம் ' என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை " கும்பகம் ' என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை " ரேசகம் ' என்பர்.
4.வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதை பகிரங்க கும்பகம் என்று கூறுவர்.
உள்ளிழுக்கப்பட்ட தூய காற்று நுரையீரல்களைச் சென்றடைந்ததும் இதயத்திலிருந்து பெரிய சிறிய ரத்தக்குழாய்கள் மூலம் அங்கு வந்துள்ள நீல நீறம் கொண்ட அசுத்த ரத்தத்தை தன்னிடமுள்ள பிராண வாயுவினால் சிகப்பு நிறம் படைத்த சுத்த ரத்தமாக மாற்றம் செய்துவிட்டு அதனிடமிருந்த கரியமில வாயுவை தான் பொற்று, அசுத்தக்காற்றாக வெளிவருகிறது.
நுரையீரல்களிலிருந்து அசுத்த ரத்தம் உள்ளிழுக்கப்பட்ட பிராண வாயுவினால் அசுத்தம் நீங்கப்பெற்று சுத்த ரத்தம் என்கிற பெயருடன் இதயம் சென்று, அங்கிருந்து பெரிய சிறிய ரத்தக்குழாய்கள் மூலம் அனைத்து உறுப்புகளையும் சென்றடைந்து அவை நன்கு செயல்படச் செய்கிறது.
உடல், தலை, கழுத்து மூன்றையும் நேராக வைத்துக் கொண்டு தான் பிராணாயாமம்
செய்ய வேண்டும்.
*பிராணாயாமம் செய்யும் பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். *பிராணாயாமம் செய்து முடித்து 25 நிமிடங்களுக்கு பிறகுதான் உணவு உட்கொள்ள வேண்டும்.
மின்விசிறியின் கீழேயும், குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள இடங்களிலும் பிராணாயாமம் செய்யக்கூடாது. நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில்தான் பிராணாயாமம் செய்ய வேண்டும்.
பிராணாயாமத்தில் பல வகைகள் உள்ளன. கபாலபதி என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அதிக அளவில் நீங்கி விடுகின்றன.
முதலில் கபாலபதி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூச்சுக் காற்றை சாதாரணமாக உள்ளே இழுங்கள். அதை வேகமாக வெளியே தள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அடி வயிறு உள்ளே செல்லும். அது தான் நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்பதற்கு சாட்சி. இதை சுமார் 20 முறை செய்யுங்கள்.
பிராணாயாமத்தில் முக்கியமானவை நாடிசுத்தி . நாடி என்கிற சொல் ரத்தக்குழாய்களையும், நரம்புகளையும் குறிக்கும்.
*நாடி சுத்தி பிராணாயாமத்தில் கும்பகம் சிறிதளவு கூடக் கிடையாது. பூரகமும் ரேசகமும் மட்டுமே உள்ளன.
இடது நாசியை வலது கை மோதிர விரலால் மூடிக்கொண்டு உள்ளிருக்கும். அசுத்த காற்றை வலது மூக்கின் வழியாக நிதானமாக வெளியிட வேண்டும். முழுமையாக வெளியேற்றியவுடன் அதே வலது மூக்கின் வழியாக தூய காற்றை நிதானமாக உள்ளுக்கு இழுக்கவும். உடனேயே வலது நாசியை வலது கை கட்டை விரலால் மூடிக்கொண்டு இடது மூக்கின் வழியே மூச்சை வெளியிட வேண்டும்.
மேற்கண்ட பயிற்சி செய்து முடிந்த பிறகு இடது மூக்கின் வழியே தூய காற்றை நிதானமாக உள்ளிழுக்க வேண்டும். இது செய்து முடிக்க அரை நிமிடம் தேவைப்படும். ஆறு தடவைகள் மூன்று நிமிடங்களில் செய்து முடித்தால் போதுமானது.
*சீதளி பிராணாயாமம்
உடல் சூட்டை தணிக்க வல்லது. நெடுந்தூரம் பிரயாணம் மேற்கொள்ளும் பொழுதும், கோடைக்காலத்திலும், தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காத பொழுதும் இந்த வகை பிராணாயாமத்தை செய்து பயன்பெறலாம்.
நாக்கை சிறிதளவு வாய்க்கு வெளியே தெரியும்படி வைத்து, அதை உதடுகளின் நடுவே குழல் போல் வைத்து சிறிது ஓசையுடன் காற்றை நிதானமாக உள்ளிழுக்கவும்.
மூச்சை முழுமையாக இழுத்து முடிந்தவுடன் வாயை மூடிக்கொண்டு முடிந்த அளவு அடக்கி பின்னர் மூக்குகளின் வழியே மெதுவாக காற்றை வெளியே விடவும். இது போல் ஆறு முறை செய்தால் போதுமானது.
*ஸந்த்யாவந்தன காலங்களில் செய்யப்படும் பிராணாயாமம்
இடது நாசி துவாரத்தை வலது கை " அநாமிகா ' என்கிற மோதிர விரலால் அடைத்துக் கொண்டு நுரையீரல்களிலுள்ள அசுத்தக்காற்றை வலது மூக்கின் வழியே நிதானமாக வெளியிட வேண்டும்.
முமுவதும் வெளியிட்ட பின் வலது மூக்கை வலது கை கட்டை விரலால் அடைத்துக் கொண்டு இடது மூக்கினால் தூய காற்றை நிதானமாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
முழுவதும் இழுத்து முடித்தவுடன் இரண்டு நாசித் துவாரங்களையும் மேற்சொன்ன இரண்டு விரல்களால் மூடிக்கொண்டு "ஓம் பூ' என்று தொடங்கும் பிராணாயாம மந்திரத்தை ஒரு முறை மனதிற்குள் வாயைத் திறவாமல் ஜபித்து முடித்தவுடன் வலது நாசி வழியாக மூச்சுக்காற்றை மெதுவாக வெளியிட வேண்டும்.
*ஆச்சரியப்படத்தக்க உண்மைகள்
உடலிலுள்ள சிறிய பெரிய ரத்தக்குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தால் அதன் நீளம் சுமார் 95,000 கிலோ மீட்டர் இது பூமத்திய ரேகையின் நீளத்தைப் போல் இரண்டரை மடங்கு.
உடலிலுள்ள ரத்தம் 5 முதல் 6 லிட்டர்கள்
இதயத்தின் எடை சுமார் 300 கிராம்
ஒன்றரை நிமிட நேரத்தில் ரத்தம் ஒரு முறை உடலைச் சுற்றி வருகிறது.
ஒவ்வொரு நிமிடத்திலும் 10 லிட்டர் காற்றை உள் வாங்கி வெளியிடுகிறோம்.
தினசரி நாம் ஏறத்தாழ 23000 மூச்சுகள் விடுகிறோம்
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணாயாமம் உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
*பிராணாயாமத்தை தொடர்ச்சியாகச் செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்கள் நீங்க சிறந்த வழியாக விளங்குகிறது
பிராணாயாமம் பயிற்சி.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீங்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிராணாயாமம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...