கெரானா பரவுதல் என்ற செய்தியை மக்கள் நம்ப மறுக்கிறார்கள்
தொற்று கூடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் இரண்டு வாரங்களில் மிகப்பெரிய சேதம் வரும் போல் தோன்றுகிறது.
நேற்று முன் சென்னையில் 532 இன்று633. சென்னையின் வீச்சு தமிழ்நாடு முழுதும் இருக்கும்.
தேர்தல் நடக்கும் என்றுதான் தோன்றுகிறது. தோற்பவர்கள் நாமாக இருக்கக் கூடாது.இன்னும் மக்களிடம் அசட்டையும் கவனமின்மையும் தெரிகிறது.
இன்னொரு முடக்கம் பல வாழ்க்கைகளைச் சீரழிக்கும். அதனால் மீண்டும் ஒரு முடக்கத்தை அரசு கையில் எடுப்பது என்பது பெரும்பாலும் நடவாத காரியம்.
ஆகவே எனது அருமை மக்களே குறைந்த பட்ச முகக்கவசம், தள்ளி இருத்தல், கை கழுவுதல் கடைபிடியுங்கள்.
அவசியமின்றி எங்கும் செல்ல வேண்டாம். இஞ்சி கொத்தமல்லி மிளகு போன்ற முன்பு கெரானா நேரத்தில் பயன்படுத்திய உணவுகள் நினைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
கபசுர குடிநீர், ஆவி பிடித்தல் அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுப்போ டுவது நமது கடமை ஆகும்.அதை எந்த காரணம் கொண்டு போடவில்லை என்றாலும் நஸ்டம் நமக்குத்தான்.
மொத்தம் போடப்பட்ட ஓட்டில் வெற்றி யாளர் தீர்மானிக்கப் படுவார்கள்.
இத்தனை சதவிகித ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும் அப்போதே தேர்தல் செல்லும் என்று விதிமுறை உள்ளதா எனக்கு தெரிய வில்லை.
உங்கள் பகுதியில் நிற்பவர் நல்லவரா நாம் போய் எளிதில் அணுக முடியுமா அவரை. இப்படி கவனம் கொண்டு ஓட்டுப்போடுங்கள்.
மொத்தமாக கட்சி கொண்டு யாரையும் முடிவு செய்யாதீர்கள்.
"மனக்கதவு திறக்கட்டும்" "மனிதன் வாழ்வு சிறக்கட்டும்"
No comments:
Post a Comment