Sunday, March 21, 2021

*ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவாரா?* என்பதற்கான ஜாதக ஆராய்ச்சி பதிவுஇது.

 *********

 தேதி: 01.03.1953.

நேரம்: 11.50 pm.

இடம்: சென்னை.

லக்னம்: அனுஷம்-2

                 விருச்சிகம்.

ராசி : உத்ரம் -1

            சிம்மம்.

தேர்தல்நாள்: 06/04/2021

தேர்தல் முடிவு:

02/05/2021

       (இப்பதிவு  விருப்பு வெறுப்புக்கும் அரசியல் உணர்வுக்கும் அப்பாற்பட்டு ஜோதிட ரீதியிலான ஆராய்ச்சிக்காக  மட்டுமேயான பதிவாகும்)


திரு.ஸ்டாலின் அவர்கள் 

அரசியல் பதவி அடைவதற்கான ராஜயோக கிரக அமைப்புகள்: 

       1) சூரி<>சந்/9 மாதி (சந்) 10 ல் தர்ம கர்மாதியோகம்.       

       2) 10மிடம் சிம்ம மாகி அவ்வீட்டு சூரியன் அவ்வீட்டையே பார்ப்பது.

         3)லக்னாதி (செவ்) 5ல்நிற்பது.5மாதி(குரு)9 மாதி

(சந்) ஐ பார்ப்பது.   

       4)நவாம்சத்தில்

1,6 மாதி செவ்வாய் உச்சம் பெறுவது.

       5) 6ல் சுக்ரன் வர்கோத்தமம் பெறுவது.

        6) 2 மாதி குரு 6ல் நின்று 2,10 ஐ பார்ப்பது.

       7) 6,10 களில் சுபர்கள் (சுக்,குரு,சந்) 

இருப்பது.

      8) நவாம்ச கணிதப்படி நடப்பு லக்னம் துலாமாகி நடப்பு 69 வது வயது காலபுருஷனுக்கு 10 மிடமாகவும் லக் னத்திற்கு 4 மிடமாகவும் வந்து உச்சபதவியை அடைவதற்கேற்ப நடப்பு களச்சூழல் தயாராக இருப்பதை 

உணர்த்துகிறது.

பதவி அடையமுடியாதபடி கிரக அமைப்புகள் 


    1) பாதகாதிபதி சந்திரன் 10 ல் பதிவிஸ்தானத்தில் நிற்பது. 

        2) 9ல் கேது அதிர்ஷ்ட யோக பதவித்தடை.

        3)ராஜகிரகங்கள் குரு,சுக்ரன் இருவருமே 6 ல் மறைவு.

      4) பூர்வபுண்யாதி குரு 6ல் மறைந்து குலதெய்வ அருள் தடை.

        5) 5 & 6 மாதிகள் (குரு,செவ்) பரிவர்த்தனை. பரிவர்த்தனைக்குப்பின் 5ல் குரு ஆட்சி.இதன்படி பிற்பகுதி வாழ்வில் தாய்,மனைவி முயற்சியால் குலதெய்வ வழிபாடு தொடர்வது.எனினும் 

பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் 6ல் ஆட்சியாகி லக்னத்திற்கு எதிரியை மேலும் வலுப்படுத்துவது வெற்றிக்கு பெரும் சவால்.லக்னாதியே 6ல் நிற்பதால் எதிரிகளுடன் மல்லுகட்டுவதே சதாவேலை மற்றும் எதிரிகளே இவரின் அடுத்தடுத்த செயல்களை முடிவு செய்யும்படியான சூழல். 

       6)லக்னாதிபதி(செவ்) நீசனுடன்(புத) இணைந்து பலஹீனம் அடைகிறார்.

       7) வெற்றி/ சாதனைக்குரிய 11 மாதி புதன் நீசம்.

       8) அம்சத்தில் 10 மாதி புதன் 12 ல் மறைவு மற்றும் 10 மாதிக்கு 8 மாதி பார்வை( செவ்<புத) 

பதவிக்குத்தடை அமைப்பு.

       9)தொழில்/ உத்யோகத்திற்குரிய சனிக்கு 10 ல் கேது நிற்பது பதவி,

அந்தஸ்திற்கு பூரண தடையாகிறது்

        10) அரச கிரகம் சூரியன் சனி வீட்டில் நின்று சனியுடன் திரிகோணசேர்க்கை பெறுவது ராஜ்ய அனுகூலம் குறைவு.

         11) ராசி சிம்மத்தில் விழுந்த பரல்கள் 34.ஆனால் அதற்கு எதிரி ராசி மகரத்தில் விழுந்த பரல்கள் 37.ஆக எதிரியின் கையே எப்போதும் ஓங்கி இருக்கும் நிலை இவருக்கு.

         12)நவாம்சப்படி பதவி பிரமாணத் திற்குரிய 2-6-10 திரிகோணம் இவருக்கு அமையாத தால்  உச்சபதவி என்பது எட்டாக் கனிதான்.

          13) நவாம்சப்படி 

9-5-1 என்று அமைந்த திரிகோணப்படி இறுதி வாழ்க்கை 1 என்ற தன்னை ஆரோக்யமாக வைத்துக்கொள்வதற்காக சதாபோராடும் அமைப்பையே ஏற்படுத்தும். ஆரோக்யமே பதவியோகத்திற்கு 

முதல்படி.

        14)தசாம்சத்தில் பதவிக்குரிய 10மிடத்

தில் 8 மாதி 

செவ்வாய் கடும் பகையுடன் அமர்வு.இதனால் செவ்வாய் திக்பலம் பெற்றபோதிலும் உச்சபதவி கிடைப்பது அரிது. எனினும் 10 மாதி புதன் 10 மிடத்தையே பார்ப்பதால் துணை முதல்வர் ,எதிர்க்கட்சித்தலைவர் போன்ற இரண்டாம்நிலை பதவிகள் மட்டுமே வகிக்க முடியும்.

       15) ராசிப்படி பதிவிஸ்தானமான 10 மிடத்ததிபதி சுக்ரன் அவயோகி கிரகமாக அமைந்து விடுவதால்பதவியை தடுக்கும் நிரந்தர ஊழியர்போல் செயல்படுவார்.

      16) லக்னாதிபதி நீசனுடன் இணைவு,5ல் ஒரு நீசன்,9 ல் கேது . ஆக 1-5-9 திரிகோணம் பலவீனமாகியதால்  முதல் அமைச்சர் என்ற உச்சபதிவிக்கு தகுதி குறைவான வராகவே இவர் உள்ளார்.

  திசா புக்தி அந்தர கிரகங்களின் சாதகபாதகங்கள்: 

    

 திசாநாதன் சனி யின்  சாதகங்கள் 

      1) அதீத சுபராகி கோட்சாரத்தில் ஆட்சியாக உள்ளார்.

       2)சுக்ரன்,குரு இருவரின் பார்வை

பெற்றுள்ளார்.

       3) அசுபராகி வக்ரம் பெற்றுள்ளார்.

  பாதகங்கள் :

       1) உச்ச வக்ரம் நீசபலன்.

       2) 12மிடத்தில் 

வக்ரம் பெற்ற அசுபர்(சனி)கெடுபலனே தருவார்.

       3)கடும்பகைவர் பார்வை(செவ்< சனி)

       4)நவாம்சத்தில் ராசிக்கு 12 ல் சனி.

       5) கோட்சாரத்தில் 

ராசிக்கு எதிரி வீட்டோனாகி(6மாதி)

 அங்கேயே(சனி) ஆட்சிபெற்று ஜாதகருக்கு கடுமையான  எதிர்ப்பை காட்டுகிறார்.  

       6)தேர்தல் முடிவு அன்று (02.05.2021) கோட்சாரத்தில் ராசிநாதன் சூரியன் மேஷத்தில் உச்ச மானபோதும் 

3 பரல் வலிமை யுடனேஇருக்கிறார்.ஆனால் ராசிக்கு எதிரி 6 மாதி சனியோ 4 பரல் வலிமையுடன் ஆட்சிபலத்துடன் இருப்பதால் இவருக்கு எதிர்க்கட்சியின் கை ஓங்கி இருக்கும்.

       

       புக்திநாதன் சந்திரனின்

 சாதகங்கள் 

        1) தர்மாதிபதி யாகி பதவிக்குரிய 

10 ம் வீட்டில் அமர்ந்த து.

        2)பாவக்கட்டப்படி  புக்திநாதன் சந்திரன் 11 ல் அமர்ந்து இருப்பது.

        3) 10 ல் நின்ற சந்திரன் குருவின் பார்வையை பெற்றிருப்பது.

       4) அரசுபதவிக்கு உரிய அக்னி சிம்ம வீட்டில் அமர்ந்து இருப்பது.


      பாதகங்கள் 

    1)புக்திதாதன் சந்திரன் எத்தனை பலம் பெற்றபோதும் 

கடைசி 5 பாகைக்குள் மிருத்யு அவஸ்தையில்

அமர்ந்து செயலற்று செத்துப்போன பாம்பாகிவிடுகிறார்.எனவே இவரை நம்புவது வீண்.

        2) இந்த சந்திரன் அம்சத்தில் கேது வுடன் இணைந்து விடுவதால் இறுதி நிமிடங்களில் பெரும் ஏமாற்றத்தை அனுபவிக்கும் நிலை.

       3) தேய்பிறை சந்திரனாகி சந்திரனும் கெடு  பலனதரும் நிலையில் உள்ளார்.

        4) தந்தை ஸ்தானாதி(9)யாகி  மற்றும் பாதகாதிபதியுமாகி  சந்திரன் 10 ல் நின்றதால் தந்தையே இவருக்கு முதல்வர் பதவி வரவிடாமல் தடையாக இருந்துவந்தார்.

        5)ஆத்மகாரகனான சந்திரன் அம்சத்தில் தனுசுவில் கேதுவுடன் நிற்பதால் 

காலம் முழுக்க எதிர்க்கட்சி தலைவராகவே இருந்து போராடும் (வில்அம்பு)நிலை.

        

அந்தரநாதன் புதனின் 

 சாதகங்கள் :

     எதுவுமில்லை.

 பாதகங்கள் :

      1) புதன்  ஜனனத்தில் நீசம்.

      2)பகையுடன் ( செவ்) சேர்க்கை

(புத+செவ்).

      3)லக்னத்திற்கு 8 மாதியாகிறார்.

      4) கோட்சாரத்தில் புதன் ரிஷபத்தில்  

எதிர்வரும் ராகுவை நெருங்கிச்செல்வதால் கிரகணஸ்தமனம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில்  மகிழ்ச்சியற்ற மனநிலையை ஏற்படுத்தப் போகிறார்..

       

 கோட்சாரநிலை 

      சாதகங்கள் :

  1) குரு 7லிருந்து 11,1,3 ஆகிய பாவங்களை பார்ப்பது நொந்துபோகாத அளவுக்கு ஆறுதல் வெற்றி.


      பாதகங்கள் 

    1)சிம்மராசிக்கு 6ல் எதிரி சனி ஆட்சிபலத்துடனும் அதிக பரல் பலத்துடனும் இருப்பார்.

       2)ராசிக்கு 8மாதி குரு 7ல் நின்று  சஞ்சரிப்பதால் மக்கள் ஆதரவு திடீரென குறைந்து போகும்நிலை.

         3)பதவி சுகத்துக்குரிய 4 மிடத்தில் கெடுக்கும் கேது உச்சபலத்துடன் நின்று சுகம்& பதவியோகத்தை தடுத்துவிடுகிறார்.

        4) பதவிக்காரன்&10க்கு உரியவன் சுக்ரன் 10 க்கு 12 ல் பாதகஸ்தானத்தில் மறைந்து நாற்காலி நழுவுவதை வெளிப்படுத்துகிறார்

       5)வெற்றியின் பாவம் 11ல் பாதகாதிபதி செவ்வாய் கடும்பகையுடன் வந்து அமர்ந்து வெற்றியை சீர்குலைக்கிறார்.

       6) ராசியதிபதி சூரியனுமே பாதகஸ்தானத்தில்தான்(மேஷம்).

       7)பாதகாதிபதி செவ்வாய் அம்சத்தில் உச்சம்

        8)பதவிசுக ஸ்தானாதிபதி தனது 4 க்கு 8ல் (11) மறைந்து காணல்நீர் சுகமாக்குகிறார்.

       9) அன்றைய நடப்பு திதி  பாதகாதிபதி செவ்வாயின் சஷ்டி திதி.

         10) ஜன்னத்தில் 2நீசமான புதன் நடப்பில் ராசிக்கு 10ல் அமர்ந்து கெடுக்கிறார்.

          11) பதவி ஸ்தானன் சுக்ரன்  அஸ்தமனத்தை நோக்கி நகர்வதால் அடுத்தடுத்த நாட்கள் மகிழ்ச்சியான மனநிலையைத் தராது.

       12) தேர்தல் முடிவு வரும் ஞாயிறு அன் று நட்சத்திர பக்ஷி காகம் படுபட்சியாகி முற்றிலும் முடங்குவதால் முடிவுகள் தோல்வியையே  முன்னிறுத்தும்.


அடிப்படை ஜாதகத்தில் பதவிக்கு பெருந்தடையாக இருக்கும் அமைப்புகள்

      1) அரசியல் பதவி கிரகம் குரு 6ல் நின்று சனியின் பார்வையும் பெற்று பதவியை அடைய முடியாதபடிக்கு முன்ஜென்மத்தில் கடுமையான ராஜ்ஜிய விரோதங்களை சம்பாதித்து வைத்துள்ளார். 

      2)9 ல் கேது மற்றும் 5 மாதி(குரு)6 ல் நின்று சனி பார்வை பெற்று இருப்பது பித்ருசாபம்  சாபம்.இது முன்னேற்றம், அங்கீகாரத்திற்கு பெருந்தடையாக இருக்கும்.(தந்தை இருக்கும்வரை இவரை பதவியில் அமர விடாமல் தடு்த்துவந்தார் என்பது இங்கு பித்ருதோஷத்தின் தீவிரத்திற்கு அத்தாட்சியாகும்)

        3)12 ல் நின்ற சனி 6 ஐ பார்ப்பதால் முன் ஜென்மத்தில் ஆள், அடிமைகள், வெகுஜனங்களின் 

சாபத்தை பெற்றுள்ளார் என்பதை காட்டுகிறது.இந்த ஜென்மத்தில் அதே ஜனங்கள் ஆதரிப்பதுபோல் பின்தொடர்ந்து் இறுதியில்   காலை வாரிவிடுவார்கள்.

      4) 6மாதி(செவ்) மாந்தியை நோக்குவது,4 மாதியுடன் மாந்தி சேர்வது குடும்பத்தில் பிரேதசாபம் இருந்துகொண்டு எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது.

        5) சனி<குரு குருவை சனி பார்த்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுத்தி உயிர்வதை பாவம் தொடர்வதால் முக்கிய முன்னேற்ற தருணங்களில் எதிர்மறை முடிவை தந்துவிடும்.

       6) பிறந்தநாள் ஞாயிறு அன்று ஜென்ம நட்சத்திர பட்சி காகம் படுபட்சியாகி விட்டதால் வாழ்வில் கடலளவு முயற்சி எடுத்தாலும் காலனாஅளவுக்குதான் பலன் ஏற்படும்.


மேற்கண்டவாறு கிரக அமைப்புகளை ஆய்வு செய்து சீர்தூக்கி பார்க்கையில் 

திரு.ஸ்டாலின் அவர்கள் முதல் அமைச்சர் பதவியை என்றுமே வகிக்க முடியாது  என்றும் அதிலும்  இந்த முறை உறுதியாக முதல்வர்பதவி கிட்டாது என்றும்  கிரகங்கள் எடுத்துரைக்கின்றன.

எனினும் அவரின் முயற்சி ,உழைப்புக்கேற்ற நற்பலன் களை வருங் காலத்தில் இறைவன் அருள வேண்டும் என்று ஜோதிடர்கள் சார்பில் ஒரு வேண்டுதல் வைத்து இத்துடன் இந்த ஆய்வை நிறைவுசெய்கிறேன்.

நன்றி.வணக்கம்.


 குறிப்பு :

இப்பதிவு ஜோதிடர்களுக்கும் ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமேயானது. பொதுவெளியில் 

பரப்புவதற்கு அல்ல.


  ----இவ்வண்ணம்      சி.பா.நாராயணன்.      ஜோதிட வித்வான்கள் குழு ( JVG ) 🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...