Wednesday, March 31, 2021

விதைக்காமல் அறுவடையை எதிர்பார்ப்பது.

 "முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமா" இந்த வார்த்தைகள் பலநெஞ்சங்களை வாட்டி வதக்கி இருக்கும்

எனவே வார்த்தைகளால் மற்றவர் மனங்களை புண்படுத்தாதீர்கள்பொருள் வாங்குவது முதல் வரன் பார்ப்பது வரை
தமக்கு அவசியமான தேவையானதை பொருத்தமானதை தேடும்போது சற்று கூடுதலான ஆசை எழுவது இயல்புதான்
அப்போது தேடுபவர்க்கு பதமான ஆறுதலான வார்த்தைகளை கூறுங்கள் இல்லையானால் மௌனமாயிருங்கள்
வார்த்தைகளால் அவரை காயபடுத்தி அவர்மனதை புரையோட செய்யாதீர்கள்
இந்த கடையில் விலை அதிகமா அடுத்த கடையை பார்க்கலாம் அடுத்தகடையில் அவர் நினைத்தது இல்லையா அடுத்த கடை ஏன் அடுத்த ஊர் கூட செல்லலாம்
உனக்கெல்லாம் அது கிடைக்காது என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளை உதிர்க்காதீர்கள்
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்
முயற்சியின் முக்கியத்துவம் பற்றி வள்ளுவர் பெருமான் இவ்வாறு கூறுகிறார்
நாம் என்ன சிக்கல் வந்தாலும் தெய்வத்திடம்தானே முறையிடுகிறோம்
ஆனால் அந்த தெய்வமே கொடுக்காவிட்டாலும் உன் முயற்சி உன் உடல் உழைப்புக்கேற்ற நற்பலனை தரும் என்பதாக முயற்சியின் மகத்துவத்தை விளக்குகிறார்
விதைக்காமல் அறுவடையை எதிர்பார்ப்பது,
உழைக்காமல் ஊதியம் பெற எண்ணுவது போன்ற
மனம் படைத்தவர்களுக்கு வேண்டுமானால் கொம்பு தேன் பழமொழி பொருந்தும்
இன்றைய நவீன காலத்தில் முயற்சி இருந்தால் கொம்புத் தேனையும் சுவைக்கலாம் அறிவுசார்ந்த ஆசையின் உந்தலால்
முயற்சி செய்வோம் வெற்றி கொள்வோம்
கொம்புத்தேனையும் சொம்பு நிறைய சேமிப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...