Wednesday, March 31, 2021

துறவி.........

 #காவியுடையை உடுத்தி யாத்திரை செல்வது ஒருவகையான துறவு.

#வீட்டையையும் உற்றார் உறவையும் உறைவிடத்தையும் துறந்து காவியுடையில்லாமல் ஏதாவதொரு ஆடையணிந்து செல்வது ஒருவகையான துறவு.
#துறவு என்று நினைத்துக்கொண்டு நினைவுகளையும் கடவுள்களையும் சித்தாந்தகளையும் சுமந்து தேசாந்திரம் செல்வது ஒருவகையான துறவு.
#ஏதாவதொரு குருவை பின்பற்றி அவர்கள் பின்னால் அல்லது அவர்களது கொள்கைகளுக்கு பின்னால் பயணிப்பது ஒருவகையான துறவு.
#துறவென்று நினைத்து எதற்கு அச்சப்படாமல் தன்வீட்டைவிட்டு தன் சித்தம் போனபோக்கில் போவது ஒருவகையான துறவுதான்.
இப்படி பல்வகையான துறவுகள் இருந்தபோதும்...
#மனமற்று வெறுமையான உடலை சுமந்து தன்னை கவனித்துக்கொண்டிருப்பதும் துறவுதான்.
#கவனிப்பவன் யாரென்று பார்ப்பதும் பார்ப்பவனும் பார்ப்பதும் கடந்தநிலையில் வாழ்வதும் துறவுதான்.
#ஆடைகளின்றி திகம்பரர்ராக ஏதுமற்று இருப்பதும் துறவுதான்.
#துறவு என்பததின் குறிப்பு இவ்வளவு இருக்கிறது. இவற்றிற்குள் பயணிப்பது என்பது ஒரு யுகாந்திரம் பத்தாது. "
அனைத்து துறவுக்கும் எது ஆதாரமாக இருக்கிறதோ அவற்றை கண்டு கடப்பதுதான் முழுமையான துறவாக இருக்க முடியும்.
#துறவு என்பதையும் துறப்பதே முழுமையான துறவாகும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...