தற்போது கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து இருப்பதால், பரவலை தடுப்பதற்கான நிபந்தனைகள் காரணமாக மேலும் 3 மாத கால அவகாசத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது.

வாகனங்கள்
கொரோனா பரவல் காரணமாக, மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு கடந்த ஆண்டு பலமுறை கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. கடைசியாக இந்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து இருப்பதால், பரவலை தடுப்பதற்கான நிபந்தனைகள் காரணமாக மேலும் 3 மாத கால அவகாசத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. அதாவது வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச டி.ஜி.பி.க்கள், போக்குவரத்துத்துறை செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், இந்த கால நீட்டிப்பு உத்தரவை அனைத்து மாநிலங்களும் ஏற்று செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment