தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று(மார்ச் 31) வெளியாக உள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச், 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
எனினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த ஊரடங்கு, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு நிறைவடைகிறது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா நோய் பரவல், மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
![]() |
தினமும் ஆயிரக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் விதிக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். தேர்தல் முடிந்தபின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என, தெரிகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாக உள்ளது. அப்போது, தற்போதைய தளர்வுகள் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment