Sunday, November 21, 2021

மோடியின் இந்த பின்வாங்கலின் காரணம் புரியும்.புலி பதுங்குவது பயந்தல்ல சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிப் பாய மட்டுமே.

 ராஜ தந்திரம் அது இது என்று பூசி மெழுகினாலும், விவசாய சட்ட மசோதாவை பிரதமர் வாபஸ் பெற்றது சற்று ஏமாற்றத்தையே தருகிறது.

இச்சட்ட திருத்தங்கள் விவசாயிகளின் நலனுக்காகவும், இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கும் நோக்கத்திலும் கொண்டு வரப்பட்டது என்றே பலராலும் நம்பப்பட்டது. உண்மையும் அதுதான்.
பிரதமர் நல்ல எண்ணத்தோடு இச்சட்ட மசோதாவை கொண்டு வந்திருந்தால் வாபஸ் பெறுவதற்கான அவசியம் இல்லை. வாபஸ் பெறுவதுதான் சரி என்று அவர் நினைத்தால், ஒரு வருட காலம் காத்திருந்தது தவறு என்று ஆகிறது.
இந்த மசோதா தேவையற்றது என்று இப்போதும் அவர் நினைக்க மாட்டார். எதிர்க்கட்சிகளின் தொல்லையால் விவசாயத்துறையில் விரும்பத்தக்க மாற்றத்தை செய்ய முடியவில்லையே என்ற வருத்தமே அவருக்கு இருக்கும்.
இவ்வளவு காலம் உறுதி காட்டிய பிரதமர் இப்போது பணிவு காட்டியிருப்பதற்கு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களே காரணம் என்பது புரிந்து கொள்ள முடியாத விஷயமல்ல.
மத்திய அரசு நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதைத் தடுப்பதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் விவசாயிகளுக்கு எந்த வெற்றியும் இல்லை.
இந்த திடீர் பின்வாங்கல் பிரதமரின் இமேஜை சற்று கெடுத்திருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக மோடி தன் இமேஜை தியாகம் செய்திருக்கிறார்.
ஒருவர் தொடர்ந்து தலைவராகவே இருக்க முடியாது. அவ்வப்போது அரசியல்வாதியாகவும் மாற வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...