Wednesday, November 24, 2021

🌹 🌿 திரும்பி வந்த திருமால் 🌿 🌹

 

🌹 🌿 வைகுண்டத்தில் படுத்திருந்த திருமாலுக்கு பாதசேவை செய்தாள் மகாலட்சுமி. திடீரென கண் விழித்த திருமால் எழுந்து ஓடத் தொடங்கினார். லட்சுமி பதறினாள். ""சுவாமி என்னாயிற்று?
""பூமியில் என் பக்தன் ஒருவனுக்கு ஆபத்து வரப்போகிறது. நான் போய் அவனை காப்பாற்றி விட்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றார். ஆனால் சென்ற வேகத்தில் வைகுண்டம் திரும்பினார். ""என்ன நடந்தது சுவாமி? அதற்குள் வந்து விட்டீர்களே...? என லட்சுமி கேட்டாள்.
🌹 🌿 ""என் பக்தன் ஒருவன் தன்னை மறந்தநிலையில் என் திருநாமத்தை சொல்லியபடி வந்து கொண்டிருந்தான். அப்போது ஆற்றங்கரையில் காய வைத்திருந்த துணிகளை தெரியாமல் மிதித்து விட்டான். அதைக் கண்ட துணியின் உரிமையாளன் பிரம்புடன் அடிக்க ஓடி வந்தான். அதைத் தடுக்கவே நானும் சென்றேன் லட்சுமிக்கு ஆர்வம் தாங்காமல் ""பக்தனை காப்பாற்றினீர்களா, இல்லையா...? இடைமறித்தாள்.
🌹 🌿 ""இல்லை ""ஏன் சுவாமி? ""பதிலுக்கு என் பக்தனும் ஒரு செங்கல்லை எடுத்து அவன் மீது எறியப் போனான். நான் திரும்பி வந்துவிட்டேன் என்றார். பக்திக்கு பெருமை சேர்ப்பது பொறுமை என்பதை லட்சுமி உணர்ந்தாள்.
🌹 🌿 சர்வம் விஷ்ணு மயம்
🌹 🌿 ஹரி ஓம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...